Link copied!
Sign in / Sign up
13
Shares

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், உடல் நலத்திற்கும் உதவும் மீன் எண்ணெய்..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தவிர்க்காமல் உண்ண வேண்டிய ஒரு உணவுப்பொருள் உள்ளது; அது என்ன தெரியுமா? அது தான் மீன் எண்ணெய். மீன் எண்ணெயில் உள்ள ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உடல், மனம், கூந்தல், உள்ளுறுப்புகள் என அனைத்தையும் ஆரோக்கியப்படுத்துகின்றன. இப்படிப்பட்ட மீன் எண்ணெய் குறித்த உண்மை தகவல்களை இந்த பதிப்பில் படித்தறிவோம்..! 

மீன் எண்ணெய் என்றால் என்ன?

இந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப்படுகிறது; அதிகமான அளவு கொழுப்புக்களுள்ள மீனிலிருந்து மட்டும் தான் இந்த எண்ணெயை எடுக்க முடியும் என்பதில்லை; இதனை பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்தும் எடுக்கப்படும். 

இத்தகைய மீன் எண்ணெய் தரும் மீன்களை நாம் சமைத்து சாப்பிட மாட்டோம்; ஆனால் இதிலிருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன. இவை சாதாரண மருந்தகங்களிலேயே கிடைக்கும்.

எதற்கு சாப்பிட வேண்டும்?

1. இந்த எண்ணெய் இரத்தத்திலுள்ள கொழுப்பின் அளவை ஸ்கேன் செய்யும்; சில சமயங்களில் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்; அச்சமயங்களில், இந்த மாத்திரையை உட்கொண்டால், இதிலுள்ள ஒமேகா கொழுப்பு அமிலங்கள், இரத்திலுள்ள ட்ரைகிளிசரைடை குறைத்து விடும்.

2. எண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள் என்ற தவறான கருத்து தான் நம்மிடையே நிலவி வருகிறது; ஆனால் இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால், அது உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.  

3. இந்த எண்ணெயை சாப்பிட்டால், மனம் எவ்வளவு கொதிப்பில், அழுத்தத்தில் இருந்தாலும் அது, சற்று அமைதியுறும்; ஏனெனில் இதிலுள்ள EPA எனும் நோய் எதிர்ப்புப்பொருள், மூளையை நன்கு சுறுசுறுப்போடு, எந்தவொரு மன அழுத்தமும் இன்றி பார்த்துக் கொள்ளும். மேலும் இதிலுள்ள EPA உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்ய உதவும்.

4. பெண்களின் உடலில், கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கவும், இடுப்பு எலும்புகளை நன்கு வலுவடையச் செய்யவும் இது பெரிதும் உதவுகிறது.

5. ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒருசுவாசப் பிரச்சனையும் ஏற்படாது. 

6. இதிலுள்ள ஒமேகா கொழுப்பு அமிலங்கள், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது; முக்கியமாக இந்த எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றிலுள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.

7. இந்த எண்ணெய் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக பொலிவோடு இருப்பதற்கு உதவுவதோடு, கூந்தல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகிறது. 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon