Link copied!
Sign in / Sign up
1
Shares

குழந்தைகளின் குடற்புழு பிரச்சனைக்கான தீர்வு..!

குழந்தைகள் வளரத் தொடங்கி தனக்கு பிடித்த உணவுகளை தானே கேட்டு, விரும்பி உண்ணத் தொடங்கும் சமயம் ஒரு பிரச்சனை உண்டாகும்.. அதுவே புழுக்கடி..! "அம்மா பின்னாடி அரிக்குது, வலிக்குது.., வயிறு வலிக்குது" என்பதை உங்கள் குழந்தைகள் தன் மழலை மொழியால் உங்களிடம் தெரிவிக்கும்..! அச்சமயம் நீங்கள் செல்லமாய் குழந்தையை திட்டி, குழந்தையின் பிரச்சனைக்கு தீர்வு காண முயல்வீர்..! உங்கள் முயற்சிக்கு உங்களுடன் உறுதுணையாக இருக்கும் வகையிலேயே இந்த பதிப்பை வழங்குகிறோம்..! குழந்தைகளுக்கு புழுக்கடி எதனால் ஏற்படுகிறது, அறிகுறிகள் என்னென்ன, தடுக்கும் மருந்துகள் யாவை என இப்பதிப்பில் படித்தறிவோம்..!

எதனால்..?

குழந்தைகள் விளையாடுகையில் தொற்றும் கிருமியால், உடலின் சுத்தமின்மையால், ஆரோக்கியமற்ற உணவு முறையால், அதிகப்படியான இனிப்பு மற்றும் துரித உணவுகளால் குடற்புழுக்கள் குழந்தைகளின் உடலில் உண்டாகலாம்..!

அறிகுறிகள்..! 

குழந்தைகளுக்கு குடற்புழுக்கடி இருந்தால், அதனை மிகுந்த சோர்வு, வயிற்றுப்போக்கு, மலக்குடல் எரிச்சல், குமட்டல், திடீர் உடல் எடை குறைவு போன்ற அறிகுறிகள் தென்படும். 

தடுக்கும் வழிகள்..!

கீரை சாறு

தேவையானவை..!

அகத்திக் கீரை சாறு - ஒரு தேக்கரண்டி, தேன்- தேவைக்கேற்ப, பூண்டு சாறு - ஒரு தேக்கரண்டி

செய்முறை..

இம்மூன்றையும் நன்கு கலந்து, ஒரு வாரத்திற்கு தினமும் காலையில் மட்டும் குழந்தைகளை குடிக்கச் செய்தால், குடற்புழுக்கள் விரைவில் நீங்கிவிடும்; இது பெரியவர்களுக்கும் ஏற்றதே!

வேம்பு..

நம்மில் சிலர் குழந்தைகளுக்கு வேப்ப இலைக்கொளுந்துகளை அரைத்துக் குடிக்க அளிப்பர்; இது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளித்து, குடற்புழுக்களை முற்றிலுமாக நீக்கி விடும். குழந்தைகள் தினம் ஒரு வேப்பங்கொழுந்தை உண்டு வந்தால், மிக நல்லது; இதுவும் பெரியவர்களுக்கும் ஏற்றதே..!

கீரை சூப்

தேவையானவை..

மிளகு - 2, சின்ன வெங்காயம் - 2, இஞ்சி - சிறிய துண்டு, சீரகம் - 1/2 தேக்கரண்டி, தேவையான அளவு - கீரை (தண்டுக்கீரை அல்லது அகத்திக்கீரை), பூண்டு - 1 பல்

செய்முறை..

இவை அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து சூப் செய்து, ஒரு வாரத்தில் 3 நாட்கள் என குழந்தைகளுக்கு மாலை வேளையில் அளித்து வந்தால், குடற்புழுக்கள் முற்றிலுமாக நீங்கி விடும்.. இதையும் பெரியவர்கள் கூட பருகலாம்..

குழந்தைகளுக்கு எதை அளிப்பதாய் இருந்தாலும், தகுந்த மருத்துவ ஆலோசனைக்கு பின் அளிக்கவும்..!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon