Link copied!
Sign in / Sign up
5
Shares

குழந்தைகளின் கோபத்தை குறைப்பது எப்படி?

நம் வீட்டை இரு மடங்கு அழகாக்குவதும் நம் குழந்தைகள் தான். அதே வீட்டை கோபம் வந்தால் இரண்டாக்குவதும் நம் குழந்தைகள் தான். அப்படிப்பட்ட குழந்தைகள் எப்போதும் எடுத்த உடனே உங்களிடம் தன் கோபத்தை காட்டுவதில்லை. ஒரு முறைக்கு பல முறை அவர்கள் வேண்டிய ஒன்று கிடைக்காத போது தான் கோபத்தை காட்டுகிறார்கள். அப்படிப்பட்ட உங்கள் வீட்டின் அழகு குட்டி செல்லம் கோபப்படும்போது அதை எப்படி குறைப்பது? வாருங்கள் பார்க்கலாம்.

ஒன்று...இரண்டு எண்ண கற்றுக்கொடுங்கள்:

உங்கள் குழந்தை கோபமாக இருக்கும்போது அவர்களுக்கு எண்ண பழக்கப்படுத்துங்கள். இதனால், அவர்கள் மனம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பக்கூடும்.

மனம் விட்டு பேசுங்கள்:

உங்கள் குழந்தைகள் சில சமயத்தில் கோபம் கொண்டு வீட்டில் இருக்கும் பொருளை உடைக்கக்கூடும். அப்போதும் கோபத்திற்கான காரணம் என்ன என்பதை அவர்களிடம் நிதானமாக கேட்டு பழகுங்கள்.

தலையணை மீது கோபம்:

உங்கள் குழந்தை கோபமாக இருக்கும்போது தலையணை மீது அதை காட்ட பழக்கப்படுத்துங்கள். இதனால், உங்கள் தலை தப்பித்துவிடும்.

கோபத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்:

அவர்கள் கோபப்படும் போது, அவர்கள் சொல்வது சரி எனில் அதற்கு ஏற்ப முதலில் அவர்களிடம் வளைந்து செல்லுங்கள். அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர், அவர்கள் பிரச்சனைக்கான தீர்வை தர முயலுங்கள்.

பிள்ளைகளை ஊக்கப்படுத்துங்கள்:

உங்கள் குழந்தைகள் செய்யும் உணர்வு பூர்வமான திறன் சார்ந்த விஷயத்தை ஊக்கப்படுத்துங்கள். இதனால் கோபம் வந்தாலும் உங்களிடம் உரிமையுடன் எல்லாவற்றையும் அவர்கள் பகிர்ந்துக்கொள்ளக்கூடும். அதேபோல், விமர்சனத்தை எப்படி அணுக வேண்டும்? எனவும் அவர்களுக்கு பழக்கப்படுத்துங்கள்.

சிறந்த உதாரணம் தருதல்:

உங்கள் குழந்தை கோபம் கொள்ளும்போது அதற்கு சிறந்த உதாரணம் கூறி அவர்கள் மனநிலையை மாற்றலாம்.

விதிமுறைகளை பழக்கப்படுத்தல்:

கோபம் என்பது இயல்பான ஒன்றுதான். இருப்பினும், தேவையற்ற சேதாரம், அதனால் ஏற்படக்கூடாது. எனவே உங்கள் குழந்தைகளுக்கு ஒருசில விதிமுறைகளை பின்பற்ற கட்டளையிடலாம். எதையும் உடைக்கக்கூடாது. பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கும் வரை அழக்கூடாது. தவறாக எதுவும் பேசக்கூடாது போன்றவற்றை குழந்தை முதலே அவர்களுக்கு பழக்கலாம்.

நண்பர்களே!

உங்கள் வீட்டு தரை அழுக்காய் இருக்கிறதா? கவலை வேண்டாம்... இயற்கையாக சுத்தப்படுத்த இதோ நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் டைனி ஸ்டெப் ப்ளோர் கிளீனரை. இந்த கிளீனரில் எந்த வித வேதி பொருளும் இல்லை. நச்சு தன்மையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தினால், மீண்டும் வேறு எதையும் வாங்க உங்கள் மனம் முன்வராது. இப்போதே இதை நீங்கள் பெற முந்துங்கள். ஆர்டர் செய்ய இந்த பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்க...

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon