Link copied!
Sign in / Sign up
2
Shares

குழந்தைகளின் கனவில் நடப்பது என்ன?

குழந்தைகள் தூங்கும் போது செய்யும் செய்கைகள் அனைத்தும் உள்ளதைக் கொள்ளை கொள்ளும் வகையிலேயே இருக்கும். தூங்கையில் குழந்தைகள் சிரிக்கும் சிரிப்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை. பொதுவாக உறக்கத்தின் போது கனவு காண்பது மனித குலத்தின் இயற்கையான செயல். குழந்தைகள் உறக்கத்தில் கனவு காணுமா? அப்படி என்ன வகை கனவுகள் குழந்தையின் உறக்கத்தில் ஏற்படும்? இவற்றை பற்றி பதிப்பில் படித்து அறிவோம்..!

ஒன்றா? வேறுபட்டதா?

குழந்தைகளின் உறக்கத்தில் கண்கள் ஓயாத இயக்கத்தில் இருக்கும். நம் கனவில் பார்த்த மனிதர்கள், படங்கள், கேள்விப்பட்ட விஷயங்கள் வருவது போல குழந்தைகளின் கனவிலும் இது போன்ற விஷயங்களே தோன்றுகின்றன. குழந்தைகள் பார்த்த மற்றும் கேட்ட விஷயங்களை பற்றி கனவில் எண்ணிக் கொண்டிருக்கும். சில நேரங்களில் கனவு காணும் போது, குழந்தைகளின் கண்கள் ஓய்வு நிலையிலும் இருக்கும்.

3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, பேய் கனவுகள் மற்றும் பயப்படும் வகையிலான கனவுகள் ஏற்படாத வகையில், பெற்றோர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். பார்த்த மற்றும் கேட்ட தகவல்களே கனவாக மாறுகின்றது என அறிந்த நாம், குழந்தைகள் நல்லவற்றையே பார்க்கவும் கேட்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

சிறுவயதில் ஏற்படும் பய உணர்வு குழந்தைகளை கோழைகளாக்கி விடலாம் அல்லது அவர்களை மற்றவர் பயப்படும்படியான விஷயங்களை செய்யத் தூண்டும். இது போன்ற விளையாட்டு பல நேரங்களில் வினையாகி விடும். ஆகையால் குழந்தைகளை ஆரோக்கியமான சூழலில் வளர்க்க முயலுங்கள்...

பள்ளி செல்லும் வயது குழந்தைகளுக்கு தாங்கள் படிக்கும் படங்களின் நினைவும், நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் சேஷ்டைகளும் கனவில் வரலாம். மேலும் குழந்தைகள் தேர்வு நேரத்தில் அதைக் குறித்து கொள்ளும் பயம், கனவிலும் அவர்களை துரத்தலம். இந்த மாதிரியான நேரங்களில் பெற்றோர்கள் சரியான வழிகாட்டியாக விளங்கி, குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டும்..

மூளை முழுமையான வளர்ச்சி பெற்ற பின்னரே கனவுகள் ஏற்படும். அதற்கு முன்னதாக, மங்கலான நினைவலைகளாக கனவுகள் தோன்றும். மூளை நன்கு வளர்ச்சி பெற்ற பின் குழந்தைகள் நம்மைப் போன்றே கனவுகள் காணத் தொடங்கிவிடுவர்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon