Link copied!
Sign in / Sign up
1
Shares

குழந்தைகளின் காது அழுக்கை சுத்தம் செய்தல் பற்றி அறிய வேண்டியவை

காதுக்குரும்பை, பொதுவாக காது அழுக்கு என எல்லோரும் தினமும் கடந்து வருபவையே. பொதுவாக இது இறந்த சரும செல்கள் மற்றும் காதுகளில் உள்ள சுரப்பிகள் சுரக்கும் ஒட்டும் தன்மை நிறைந்த பொருளின் அடிப்படையில் உருவானவை ஆகும். ஆனால் மக்கள் நம்பிக்கைக்கு முரணாக, அது பற்றி வெறுக்கத்தக்க அல்லது வெறுப்பூட்டும் படியாக எதுவும் இல்லை. காது அழுக்குகள், நமது செவிப்பறைகளை தூசிகளில் இருந்து காப்பாற்றுவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

காது அழுக்கின் ஓட்டும் தன்மை, தூசிகள் உள்ளளே செல்லாமல் தடுக்கிறது. இதனால் காது அழுக்கு தங்கள் பிள்ளையின் வளர்சிதை மாற்ற செயல்முறையில் அதன் வேலையை செய்ய விடுவது சிறந்த யோசனை ஆகும். குழந்தைகளின் காது அழுக்குச் சீரற்றதாகவும், ஓட்டும் தன்மையாகவும் இருக்கும். எனினும் அதனை வளர விடுதல், கேட்டும் திறனுக்கே ஆபத்து விளைவிக்கும்.

காது அழுக்கின் வளர்ச்சிக்குக்கான காரணங்கள்

பொதுவாக, காது அழுக்கு சிலியா என்ற முடி போன்ற கட்டமைப்புகளால் உள்ளே இருந்து வெளியே தள்ளப்படுகிறது. சருமம் வளரும் சமயத்திலும் காது அழுக்கு நகர்கிறது. இது முற்றிலும் இயற்கையான செயல்படும் ஆகும்.

இதை நாம், இயர்பட்டை அல்லது Q டிப்ஸ் கொண்டு தலையிட்டு, கட்டாயப்படுத்திக் காது அழுக்கை வெளியே எடுக்கிறோம். சரிவர செய்யாவிட்டால் அழுக்கு உள்ளே சென்று அடைத்துக்கொள்ள வாய்ப்புண்டு.

காது அழுக்கைச் சமாளிப்பது எப்படி?

காது அழுகை சமாளிக்கும் முக்கியமான வழி குழந்தையின் காதின் வெளிப்புறத்தை ஈரமான துணி கொண்டுத் துடைக்கவும். முடிந்தவரை உள் பகுதியை தொடாமல் பார்த்துக்கொள்ளவும்.

காது அழுக்குத் தண்ணியை அடைத்து கொண்டு குழந்தையின் கேட்கும் திறனை குறைத்தால், மருத்துவரை உடனே அணுகவும். எளிய வழியாக இருந்தாலும் வீட்டில் செய்ய கூடாது. அழுக்கை உருக்கும் திரவத்தின் சில துளிகள் மூலம், காது அழுக்கை நீக்கலாம். இதற்கு பதிலாக மிதமான சூடு உள்ள தண்ணீரை பயன்படுத்தலாம். மருத்துவர்கள் குரேட்டே என்ற கருவி மூலம் காதில் உள்ள விடாப்பிடியான அழுக்கை நீக்குவார்கள், இது வழியற்ற முறையாகும்.

மேலே குறிப்பிட்ட எந்த வழிமுறையும் வேலை செய்யவில்லை என்றால் உங்கள் மருத்துவர் ENT நிபுணரை பரிந்துரைப்பார். அவர் முற்றிலும் குழந்தையின் காதில் இருந்து அழுக்கை நீக்குவார்.

காதில் உள்ள அழுக்கை மென்மையாக நீக்க முயற்சிக்கவும், ஏன்னெனில் அதற்கு முக்கிய பங்கு இருக்கிறது. தவிர்க்க முடியாமல் தேவைப்படுகின்ற நேரத்தில் மட்டும் இயர்பட்டை உபயோகப் படுத்தவும். கவனமாக உபயோகிக்கவும் இல்லையெனில் பாதிப்பு உண்டாகும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon