Link copied!
Sign in / Sign up
3
Shares

குழந்தைகளின் காய்ச்சலின் போது கவனிக்க வேண்டிய 5 அறிகுறிகள்

குழந்தைகள் எளிதில் நோய்களின் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குழந்தைகளின் வழக்கமான நடவடிக்கைளில் மாற்றம் இருந்தால், அவர்கள் நோய்வாய்ப் பட்டிருக்கக் கூடும். அவர்கள் சரியாக சாப்பிடாமல், அழுகிறார்கள் அல்லது வித்தியாசமாக நடத்தந்தார்கள் என்றால், மருத்துவரை உடனே தொடர்புக் கொள்ளவும். வீங்கிய கன்னம் மற்றும் உடல் சூட்டுடன் எழுந்தார்கள் என்றால் அவர்களின் உடல் வெப்பத்தை பரிசோதிக்கவும். சாதாரணமான வெப்பத்தை விட அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகவும். கீழே உள்ள அறிகுறிகளுடன் உங்கள் குழந்தைக்குக் காய்ச்சல் இருந்தால், உடனே அதை கவனிக்கவும்.

1 100.4°F அல்லது அதிகமான வெப்பம் இருந்தால்

100.4°F (38°C) குறைவான வெப்பமே, குழந்தைகளுக்கும் சாதாரண உடல் வெப்பமாக கருதப்படுகிறது. 100.4°F (38°C) விட அதிகமாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும். இரவில் அதிகமாகவும், அதிகாலையில் குறைவாகவும் உடல் வெப்பம் மாறுபடலாம். உங்கள் தெர்மோமீட்டர் 100.4°F (38°C) காட்டவில்லை என்றாலே, உங்கள் குழந்தைக்குக் காய்ச்சல் இல்லை என்று அர்த்தம்.

2 வித்தியாசமான நடவடிக்கை

உங்கள் குழந்தைக்கு காய்ச்சல் இருந்தால் அவர்கள் வெறுப்பாக நடந்துக் கொள்வார்கள். அவர்கள் மந்தமாக, விளையாட்டில் ஆர்வமில்லாமல், சரியாக சாப்பிடாமலோ அல்லது உறங்காமலோ இருந்தால் அவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறது என்பதர்கான அறிகுறியாகும்.

3 காய்ச்சல் வலிப்பு

குழந்தைகள் எடையிலும், உருவத்திலும் சிறிதாக இருந்தாலும், காய்ச்சல் வலிப்பை தூண்டும். வலிப்பு குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் பயத்தை உண்டாக்கும் எனினும், குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு அற்றவை. மூச்சு திணறல் கொஞ்சம் அதிகமான நேரத்திற்கு நீடித்தால், உடனே மருத்துவரை அணுகவும். வழக்கமான பரிசோதனை மூலம், இதை தவிர்க்கலாம்.

4 உடலின் அறிகுறிகள்

குழந்தையின் உடலில் உள்ள வெவ்வேறு அறிகுறிகள், காய்ச்சல் உண்டாவதற்கு அறிகுறி ஆகும். காது வலி, வயிற்று வலி, அரிப்பு அல்லது வழக்கத்திற்கு விட அதிகமான தாகம் காய்ச்சல் வருவதற்கான அறிகுறி ஆகும்.

5 வாந்தி எடுத்தல்

குழந்தைக்கு வயிற்று வலி மற்றும் வாந்தி போன்றவை இருந்தால், காய்ச்சல் தோன்றும். இத்துடன் மூச்சு திணறல் ஏற்பட்டால் உடனே மருத்துவ ஆலோசனை பெறுவது சிறந்தது.

உடல் வெப்பம் அதிகரித்தால் பயப்பட வேண்டாம். அறிகுறிகளை கவனித்து, சரியான மருந்து கொடுத்து, குழந்தையை ஓய்வெடுக்க விடுவதன் மூலம் இதை சரி செய்ய முடியும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon