Link copied!
Sign in / Sign up
19
Shares

குழந்தைகளின் இருமல், சளி பிரச்சனைக்கான 3 ஆயுர்வேத மருந்துகள்..!

இருமல், சளி தொல்லைகள் சாதாரணமாக குளிர் மற்றும் மழை காலங்களில், குழந்தைகளுக்கு ஏற்படக் கூடியவையே! உங்கள் குழந்தையும் சளி மற்றும் இருமல் தொல்லையால் அவதியுறுகிறதா..? கவலை வேண்டாம்..! அவற்றிலிருந்து விடுபட்டு, நலம் பெற, இதோ நம் முன்னோர் அறிமுகப்படுத்திய ஆயுர்வேத பாட்டி வைத்தியம்…

1.தேன்

மிதமான வெந்நீரில் 1/2 தேக்கரண்டி தேன் கலந்து, குழந்தைக்குக் கொடுத்தால், அது உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்தி, சளித் தொல்லையை அறவே நீக்கிவிடும். இம்முறை ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கே பொருந்தும். 

2.இஞ்சி

“இருமலை இல்லாமல் ஆக்கிடும் இஞ்சி”. கொதிக்கும் நீரில், சிறிதளவு இஞ்சியை சேர்க்க வேண்டும்; நீர் கொதிநிலையை அடைந்தபின், ஒரு தேக்கரண்டி தேனை அதனுடன் சேர்த்து, மிதமான சூட்டை அடைந்தவுடன், குழந்தைக்குக் கொடுக்கவும். 

3.உப்புச் சொட்டுகள்
 குழந்தையின் மூச்சுப் பாதையை சரி செய்ய உதவுகிறது, ஒரு கப் தண்ணீரில், சேர்க்கப்படும் 1/4 தேக்கரண்டி உப்பு. இந்த உப்புத் துளிகளை, பல்ப் சிரஞ்ச் மூலம் நாசியின் ஒரு துவாரம் வழி அளித்தால், மற்றோரு துவாரம் வழியே சளி வெளியேறிவிடும். ஒரு நாளைக்கு 4 முறை மட்டுமே இதைக் குழந்தைக்கு அளிக்க வேண்டும்.
Click here for the best in baby advice
What do you think?
100%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon