Link copied!
Sign in / Sign up
10
Shares

குழந்தைகளின் எதிர்ப்பார்ப்பு

இயந்திர மயமான உலகில் நாம் இயந்திரங்களை போல் தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். வீட்டில் இருப்பவர்களிடம் சிறிது பேசவும், குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடவும் கூட நேரம் இல்லாமல் சுழன்று கொண்டிருக்கிறோம். உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை கூர்ந்து கவனித்தால், சில நேரங்களில் சமாளிப்பதற்கு மிகவும் கடினமான சவாலாக கூட தோன்றலாம். இந்த சூழ்நிலைகள் சமாளிக்க முடியாதவைகள் இல்லை தான் என்றாலும் கூட, அவற்றின் தீவிரத்தை உணர்த்து செயல்படுவது அவசியமான ஒன்று. 

இன்றைய காலகட்டத்தில் பல விஷயங்களில், குழந்தைகளைப் பராமரித்து வளர்க்க வேண்டியது பெற்றோரின் மிக பெரிய பொறுப்புகளில் ஒன்று. சேட்டிலைட் கேபிள் வலையமைப்புகள், கைப்பேசிகள், மற்றும் இதர ஊடக கருவிகள் ஆகியவைகள் குழந்தைகளின் மீது, அவர்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன்னதாகவே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தங்களின் சொந்த புரிதல்களுடன் அவர்கள் வளர்வதால், அது அவர்களுக்கு தீமையை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் சில விஷயங்களின் மீது அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் குழந்தைகள் எல்லாம் உணர்ச்சிவசப்பட கூடியவர்களாக உள்ளார்கள். குழந்தைகள் உங்களிடம் இருந்து எதை எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை நீங்கக் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் நடவடிக்கைகள் மீது நீங்கள் கவனம் செலுத்த தொடங்கினால், உங்களிடம் இருந்து குழந்தைகள் என்ன என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை சுலபமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

இருப்பினும், சூழ்நிலைகளை கையாள உலகியலுக்குத் தக்கவாறு நீங்கள் நடந்து கொள்ள வேண்டியது முற்றிலும் உண்மையாகும். இல்லையென்றால், உங்கள் குழந்தைகள் கெட்டுப் போவதற்கு எண்ணிலடங்கா வாய்ப்புகள் உள்ளது. இங்கு குழந்தைகள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

நீங்கள் அவர்களுடன் நேரத்தை செலவு செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள். அவர்கள் பெற்றோருடன் இருப்பதை விரும்பாத குழந்தைகளே கிடையாது. பல சூழ்நிலைகளில், குழந்தைகள் தங்களது பெற்றோர்களை தான் முன்மாதிரியாக எடுத்துக் கொள்கிறார்கள். உங்களிடம் இருந்து அவர்கள் பலவற்றை கற்றுக்கொள்கிறார்கள். அதனால், உங்களுடன் அவர்கள் நேரம் செலவழிக்க விரும்புவார்கள். முடிந்தவரை உங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட முயற்சியுங்கள். இது அவர்கள் தவறான வழிகளில் செல்வதை தடுக்கும்.

அன்பை எதிர்ப்பார்ப்பார்கள். குழந்தைகள் என்பவர்கள் இயற்கையாகவே உலகியலுக்குத் தக்கவாறு நடக்கிறவர்கள். அதனால் தான் அன்பு மற்றும் பாசம் இருந்தால், அவர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள். பெற்றோரிடம் குழந்தைகள் எதிர்ப்பார்க்கும் முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். நீங்கள் குழந்தைகளின் மீது இருக்கும் அன்பை உங்களுள் வைத்திருக்காமல், அவர்களுக்கும் உணர்துங்கள்.

குழந்தைகளுக்கு நீங்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும். உங்கள் வழிகாட்டல் உங்கள் குழந்தைகளுக்கு தொழில் ரீதியான வாழ்க்கையை அமைத்து கொடுக்கும். இதனை குழந்தைகள் நன்கு அறிவார்கள். அதனால் தான் பெற்றோரின் வழிகாட்டல்களை அவர்கள் எதிர்ப்பார்ப்பார்கள். இந்த வழிகாட்டல் என்பது தீர்க்கமான காரணியாக அமையும். குறிப்பாக, அவர்களாகவே முடிவெடுக்க கஷ்டப்படும் போது, நீங்கள் அவர்களுக்கு நல்லனவற்றை வழிகாட்டி உணர்த்த வேண்டும்.

பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் போது உங்கள் வருகையை எதிர்ப்பார்ப்பார்கள். பள்ளி நிகழ்சிகளில் குழந்தைகள் பங்கு பெரும் போது, கூட்டத்தின் மத்தியில் தங்கள் பெற்றோரை காண்பது அவர்களுக்கு பெருமையை அளிக்கும். இந்த நிகழ்வுகளின் போது உங்களை குழந்தைகள் எதிர்ப்பார்ப்பார்கள். அது உங்களையும் மகிழ்வித்து பெருமையடைய செய்யும் தானே.

கதைகள் கேட்க விரும்புவார்கள். முன்பெல்லாம் இது தாத்தா பாட்டியின் பொறுப்பாக இருந்து வந்தது. இக்காலத்தில் பெற்றோர்களிடம் இருந்து கதைகள் கேட்க தான் குழந்தைகள் அதிக ஆர்வம் காண்பிக்கிறார்கள். உங்களுக்கு நேரம் இருக்காது என்பது ஏற்றுக் கொள்ள கூடிய ஒன்று தான். அதனால் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறையாவது உங்கள் குழந்தைகளுக்கு கதைகளைக் கூறுங்கள்.

ஒன்றாக சேர்ந்து உணவுண்ண விரும்புவார்கள். உங்களிடம் இருந்து குழந்தைகள் எதிர்ப்பார்க்கும் விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். உங்களுக்கும் அப்படி ஒரு ஆசை இருந்தால், அதனை நிறைவேற்ற முயற்சியுங்கள். கண்டிப்பாக அது குடும்ப உறவுகளை வலுப்படுத்தும். இப்படி பல்வேறு தேவைகள் இருந்தாலும், அவற்றை நிறைவேற்றுவதில் நீங்கள் அலுத்துக் கொள்ளக் கூடாது. குறைந்தபட்சம் அவர்களுடன் புன்னகையோடு நீங்கள் பேச வேண்டும். அவர்கள் பிரச்சனைகளுடன் இருக்கும் போது, அவர்களுக்கு ஆதரவாகவும், தீர்வு அளிப்பவர்களாவும் நீங்கள் விளங்க வேண்டும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon