Link copied!
Sign in / Sign up
12
Shares

குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்

குழந்தைகளுக்கு அன்றாடம் கொடுக்கும் உணவில் அனைத்து சத்துக்களும் நிறைந்திருக்கும் படி பார்த்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் சீரான உடல் வளர்ச்சிக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியமான ஒன்று. இதுவே எலும்பு பலத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. எனவே குழந்தைகளுக்கு கால்சியம் நிறைந்த உணவுகளை கட்டாயம் கொடுக்க வேண்டும். இதனால் அவர்களுக்கு எலும்பு தொடர்பான நோய்கள் தாக்காமல் தவிர்க்க முடியும். இங்கு கால்சியம் நிறைந்த உணவுகளை பார்ப்போம்.

பால் பொருட்கள்

தினசரி உங்கள் குழந்தைகளின் உணவுகளில் பால் மற்றும் தயிர், மோர், வெண்ணெய், நெய் என பால் பொருட்கள் அதிகம் நிறைந்த பொருட்களை சேர்த்துக் கொடுங்கள். இதிலிருக்கும் கால்சியம் மற்றும் உயர் ரக புரதச்சத்து எலும்புகள் மற்றும் தசைகளின் வலிமையை அதிகரித்து நன்கு வளர உதவுகிறது.

முட்டை

முட்டையில் புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இது குழந்தைகள் வளர்ச்சிக்கும், அவர்களின் எலும்பு வளர்ச்சிக்கும் உதவுகிறது.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. இவை எலும்புகளுக்கு பலம் சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சோயா பீன்ஸ்

சோயா பீன்சில் ஃபோலேட், வைட்டமின், புரதச் சத்துக்கள் மற்றும் கார்ப்ஸ் போன்றவை நிறைந்து இருக்கின்றன. இவை எலும்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்க வல்லவை.

மீன்

சால்மன், சூரை போன்ற மீன்களில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்தவை ஆகும். இவை குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்குவகிக்கின்றன.

சூரிய ஒளி

இது செலவில்லா எளிய முறை. காலை நேர சூரிய ஒளியில் உங்கள் குழந்தைகளை சிறிது தூரம் நடைப் பயிற்சி செய்ய சொல்லலாம். காலை நேர சூரிய ஒளியில் வைட்டமின் டி மற்றும் உடலுக்கு தேவையான இதர சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.

இந்த உணவுகள் குழந்தைகளின் சீரான எலும்பு வளர்ச்சி மற்றும் தசைகளுக்கு வலு சேர்க்கின்றன.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon