Link copied!
Sign in / Sign up
0
Shares

குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் துரித உணவுகள்

இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கும் நாகரிக வளர்ச்சியின் காரணமாக உடைகளிலிருந்து, நமது அன்றாட பழக்கவழக்கங்கள் வரை அனைத்தும் செயற்கையாய் மாறிவிட்டது. அதில் மிக முக்கியமான ஒன்று உணவுமுறைகளாகும்.

குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் உணவை கொடுப்பதே நமது கடமை. உடலுக்கு நன்மை பயக்கும் உணவுகள் ஏராளமாய் இருந்தாலும் குழந்தைகள் விரும்புவது என்னவோ துரித உணவுகளைத்தான். இது அவர்களின் தவறு மட்டுமல்ல. இயற்கையை சார்ந்து வாழ்வதே ஆரோக்க்கியமானது என்று அவர்களுக்கு புரியவைக்க தவறியது நமது தவறுதான்.

நாம் பயன்படுத்தி வந்த பாரம்பரிய உணவு முறைகளை மறந்து வருகிறோம். தற்போது மக்கள் துரித உணவுகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். துரித உணவுகளில் சுவையை கூட்டுவதற்காக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல இரசாயனங்கள் கலந்த மசாலாப்பொருட்களை கலக்கின்றனர். அதன் மூலம் உடலில் பல்வேறு நோய்கள் வருகிறது. துரித உணவுகளை பெரியவர்கள் சாப்பிடுவது மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கும் கொடுக்கின்றனர். இதனால் குழந்தைகளையும் நோய்கள் தாக்குகிறது.

எனவே இனியாவது குழந்தைகளுக்கு துரித உணவுகள் கொடுப்பதை நிறுத்தி விட்டு நமது பாரம்பரிய உணவுகளான கேழ்வரகு, கம்பு, கூழ், தினை, வரகு, சாமை, குதிரைவாலி மற்றும் காய்கறிகள் போன்ற சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும். இந்த உணவுகள் சாப்பிடுவதால் உடலில் எந்தவித பாதிப்பும், நோய்களும் ஏற்படாது. பாரம்பரிய உணவுகளின் நன்மைகளை குழந்தைகளுக்கு தொடக்கத்திலேயே சொல்லி கொடுக்க வேண்டும். இது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் எதிர்காலத்தில் அவர்கள் ஆரோக்கியத்துடன் வாழ வழிவகுக்கும்.

வெளிஉணவகங்களில் நீங்கள் சாப்பிடும் உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு, அன்றாட செலவுகளையும் அதிகமாக்குகிறது. எனவே வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிடுவதற்கு முன்னுரிமை கொடுங்கள். வாரம் ஒருமுறையாவது மண்பாண்டத்தில் சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon