
உங்கள் குழந்தையின் உடல் மற்றும் மன ரீதியான நலத்திற்கு நல்ல தூக்கம் இன்றியமையாதது. புதுமையான வழிமுறைகளைப் பயன்படுத்தி குழந்தைகளை தூங்க வைப்பது விளையாட்டாகவும், ஆர்வமூட்டுவதாகவும் இருக்கும்..
உங்கள் குழந்தையை ஒவ்வொரு நாளும் சரியான நேரத்திற்கு தூங்கப் பழக்கும் வழிமுறையாதலால், அவர்கள் தூங்குவதற்கு எப்பொழுதுமே ஒரு குறிப்பிட்ட நேரத்தை தேர்ந்தெடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தூக்கம் தங்கள் வாழ்வின் ஒரு பகுதி என்று அவர்களை உணரச் செய்ய முடியும்.

எல்லோருக்கும் 6-7 மணி நேரத் தூக்கம் இன்றியமையாதது, அதிலும் இரவு 11 முதல் காலை 3 மணி வரையிலான உடற்செயல் மாற்றங்கள் எந்த வயதினருக்கும் தடைபடக்கூடாது. ஆகையால் குழந்தைகளை இரவு 10 மணிக்குள்தூங்கச் செய்து காலை 6 மணிக்கு எழும் பழக்கத்தை வழக்கமாக்குங்கள். காலையில் சூரிய உதயம் கண்டு எழுவதால், குழந்தையின் உடல் மற்றும் மன நலம் வளப்படும்; மற்றும் குழந்தை சுறு சுறுப்பாகவும் இருக்கும்.
வெந்நீர் குளியலுக்குப் பின்னர், குழந்தைக்கு வசதியான உடைகளை அணிவதற்கு அவர்களை பழக்கப்படுத்துங்கள். இந்த பழக்கத்தை கடைபிடிப்பதன் மூலம் உங்களுடைய குழந்தையை தூங்கச் செய்யும் முயற்சி மிகவும் வெற்றிகரமானதாக மாறி விடும்.

பிறந்த குழந்தைகளுக்கு அதிக தூக்கம் தேவை; ஆதலால் அவர்களை பகலில் உறங்கச் செய்யுங்கள். வளர்ந்த பிள்ளைகளுக்கு, பகலில் தூங்கும் பழக்கத்தை போதிக்காதீர்கள்; அவர்களை எப்பொழுதும் சுறு சுறுப்பாக இயங்க வைத்து, பல புதிய விஷயங்களை கற்கச் செய்யுங்கள்/கற்றுக் கொடுங்கள்.
ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை நடக்கும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவும். முகத்தை கழுவுதல், துணியை மாற்றுதல், பல் விளக்குதல் அல்லது வெளியே சென்று வருதல் ஆகிய பழக்கங்கள் நல்லது. இரவு உணவு சாப்பிடாமல் உங்கள் குழந்தையை படுக்கைக்கு அனுப்ப அனுமதிக்க வேண்டாம். உங்கள் குழந்தைக்கு நல்ல இரவு உணவை கொடுத்து பின்னர் தூங்கச் செய்யுங்கள்.
கதைகளை வாசித்துக் காட்டி அவளை தூங்கச் செய்வதை பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் இரவில் தூங்காது, அடம் பிடிக்கையிலும், பெற்றோரான தாங்களே கதைகள் கூறி, அல்லது வேறு வழிகளிலோ குழந்தையை தூங்கச் செய்ய வேண்டும்.

உங்கள் குழந்தைக்கு ‘குட் நைட்' சொல்வதன் மூலம் இது தூங்குவதற்கான நேரம் என்பதை குழந்தைக்கு அறியச் செய்ய முடியும்; இதன் மூலம் உங்கள் குழந்தை தூங்கத் தயாராக முடியும். சில நேரங்களில் குழந்தைக்கு முத்தமிட்டோ அல்லது அணைத்துக் கொண்டே கூட குட் நைட் சொல்லலாம். இந்த செயல் தாய்-சேய்க்கு இடையேயான பிணைப்பை அதிகப்படுத்தும்.
