Link copied!
Sign in / Sign up
23
Shares

குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கி போட்டு விளையாடுகிறீர்களா?

குழந்தைகளோடு விளையாடுவது என்பது அனைவரும் செய்ய கூடிய ஒன்று தான். மேலும் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றும் கூட. ஆனால் சிலர் விளையாட்டு எனும் பெயரில் குழந்தைகளை தூக்கி சுற்றுவது, தலைக்கு மேல் தூக்கி போட்டு விளையாடுவது போன்றவற்றை செய்வார்கள். இது விளையாட்டாய் இருக்கும் வரை பிரச்சனையில்லை. ஆனால் விபரீதமாய் மாறினால் பேராபத்தை ஏற்படுத்தும்.

மனிதனுக்கு தலையே பிரதானம் என்பது பெரியவர்களின் வாக்கு. அதனால்தான் தலையில் ஏற்படும் சிறு காயம் கூட மனித உயிரையே பறித்து விடுகிறது. இதற்கு மூளை பாதிக்கப்படுவதே முக்கிய காரணமாகும். ஆனால், காயங்கள் ஏதும் ஏற்படாமலே மூளை பாதிக்கும் பருவங்களும் மனித வாழ்வில் உண்டு. ஒன்று முதுமைப் பருவம். மற்றொன்று குழந்தைப் பருவம்.

நமது மூளை மண்டை ஓட்டிற்குள் அசைய முடியாத படி கட்சிதமாக பொருத்தி இருக்கும். ஆனால், வயது ஆக ஆக முதுமையின் காரணமாக மூளையின் அளவு கொஞ்சமாக சுருங்கக்கூடும். இந்த நிலையில் கபாலத்துக்குள் மூளை உரசும் சூழ்நிலை ஏற்படுகிறது. இப்படி உரசும்போது மூளையின் ரத்தக்குழாயில் கீறல் விழுந்துவிடும்.

இதனால் மூளையில் கசியும் ரத்தம் உறைந்து சில மாதங்களுக்குள்ளாகவோ, சில நாட்களிலோ, ஏன் சில மணி நேரத்திலோ அல்லது உடனடியாகவோ உயிரைப் பறித்துவிடும். இதைத்தான் மருத்துவர்கள் ‘ஸப்டியூரல் ஹெமடோமா’ என்று அழைக்கிறார்கள்.

நன்றாக பேசிக்கொண்டிருக்கும் முதியவர்கள் திடீரென்று மரணத்தை சந்திப்பது இப்படித்தான். குழந்தைகள் எப்படி இதில் பாதிக்கப்படுகிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். வயதானவர்களுக்கு மூளை சுருங்குவதால், இந்த பாதிப்பு என்றால் குழந்தைகளுக்கு மூளை முழு வளர்ச்சி அடையாத நிலையில் அதன் மூளை மண்டை ஓட்டுக்குள் உரசும் நிலையிலேயே இருக்கும்.

குழந்தைகளை ஆசையோடு தலைக்கு மேலே தூக்கிப்போட்டு விளையாடும்போது குழந்தை சந்தோஷமாக சிரிக்கும். அதே வேளையில் சில குழந்தைகளுக்கு முதியவர்களுக்கு ஏற்படுவதுபோல் மூளை உரசல் ஏற்பட்டு பாதிக்கப்படும். இதை தலை குலுங்குவதால் ஏற்படும் காயம் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

குழந்தைகளுக்கு இப்படியும் ஓர் ஆபத்து இருப்பது நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. குழந்தையை தலைக்கு மேலே தூக்கிப்போட்டு பிடிக்கும்போது குழந்தையின் தலைக்குள் மூளை கடுமையாக பாதிக்கப்படுகிறது. இது உடனடியாக வெளியில் தெரிவதில்லை.

சிறிது நேரம் கழித்து குழந்தை அழும். பின்பு தூங்கும். அவ்வளவுதான், அதன்பின் குழந்தைகளின் உயிரை பறித்து விடும். அதனால் குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப்போட்டு விளையாடாதீர்கள். அது விபரீதமானது. குழந்தைக்கு பேராபத்தை உண்டாக்கும். குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் இது போன்ற விபரீத விளையாட்டுகளை தவிர்த்து குழந்தையை பாதுகாத்திடுங்கள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon