Link copied!
Sign in / Sign up
17
Shares

குழந்தைகளை குறி வைக்கும் ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் கோளாறு

குழந்தைகள் கருவில் குழந்தையாய் உருவானது முதலே, பல்வேறு நோய் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். குழந்தைகளை பாதிக்கு பல நோய்களை அறிந்து நாம் சிகிச்சையோ அளித்தாலும், நமக்கே தெரியாமல் குழந்தைகளை பாதிக்கும் நோய்கள் அதிகம். அவைகளில் ஒன்றுதான் குழந்தைகளை குறிவைத்து தாக்கி கொண்டிருக்கும் ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் கோளாறு. இதன் அறிகுறிகள் மற்றும் தாக்கத்தை பற்றி இங்கு பார்க்கலாம். 

ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் கோளாறு

குழந்தைகளை தாக்கும் கோளாறுகளில் முக்கியமான ஒன்றாக ஆட்டிஸம் கோளாறு உள்ளது. இது குழந்தைகளை தாக்கும் நரம்பியல் வளர்ச்சி சார்ந்த கோளாறுகளில் ஒன்று. இக்கோளாறு பெண்களைவிட ஆண்களைத்தான் அதிகம் பாதிக்கிறது. இவ்வகைக் கோளாறு, குழந்தையின் மொழி, பேச்சுத் திறன், சமூகத்திறன் மற்றும் செயல்பாட்டை வெகுவாக பாதிக்கிறது.

அறிகுறிகள்

1 சில குழந்தைகள் குறைவாகப் பேசுவார்கள். சில குழந்தைகள் பேசவே மாட்டார்கள். அதற்கு பதில் சுட்டிக்காட்டுவது அல்லது சைகை மூலம் தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள்.

2 குழந்தைகள் தங்கள் கேட்டதை உள்வாங்காமல், புரிந்து கொள்ளாமல் அவற்றை தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

3 குழந்தைக்கு அழகான வார்த்தைகளோடு நன்றாக பேச தெரிந்திருந்தாலும், ஆனால் சமூக தொடர்புடன் பிரச்சினைகள் இருக்கலாம்.

4 உங்கள் குழந்தை உரையாடலை துவங்கவோ அல்லது தொடரவோ முடியாமல் சிரமப்படுவது.

5 அவரது பெயர் அழைக்கப்படும் போது குழந்தை தலையைத் திருப்பவில்லை என்றால், இது ஒரு மிக முக்கியமான ஆரம்ப குறிப்பாகும்.

6 குழந்தைகள் ஏதாவது கேட்கும் போது கண்களை பார்க்க மாட்டார்கள்.

7 குழந்தைகள் சுய-ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். அதாவது அவர்கள் பெற்றோருடனும், மற்ற குழந்தைகளுடனும் ஓடியாடக் கூடிய விளையாட்டுக்களை விளையாட விரும்பமாட்டார்கள். அவர்கள் தனியாக விளையாட விரும்புகிறார்கள்.

8 குழந்தைகளின் கற்பனை திறன் 18 மாதத்திலிருந்தே வளர துவங்கிவிடும். ஆனால் சில குழந்தைகளுக்கு இதில் குறைபாடு ஏற்படும்.

வகைகள்

ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரத்தில் நான்கு வகை குறைபாடுகள் உள்ளன.

1. ஆட்டிஸம் குறைபாடு (Autism).

2. அஸ்பெர்ஜர் குறைபாடு (Asperger’s Disorder).

3. குழந்தைப் பருவ சிதைக்கும் குறைபாடு (Childhood Disintegrative Disorder).

4. பிற குறிப்பிடப்படாத ஆட்டிஸ வகை குறைபாடுகள்.

இத்தகைய ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடுகள், குழந்தையின் பல்வேறு வளர்ச்சியை பாதிப்பதால் பெர்வேஸிவ் வளர்ச்சி சார்ந்த குறைபாடுகள் (Pervasive Developmental Disorders) எனவும் அழைக்கப்படுகிறது. இக்குறைபாட்டின் பாதிப்புகள், ஒருவரின் வாழ்நாள் முழுவதும் இருக்கும். சரியான நேரத்தில் கொடுக்கப்படும் உதவியால், ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், நிறைவான வாழ்வை வாழ உதவ முடியும்.

இந்த நான்கு வகைக் குறைபாடுகளில் ஆட்டிஸம் குறைபாடுதான் அதிகம் பரவலாக காணப்படுகிறது. இந்த நான்கு குறைபாடுகளின் அடிப்படை அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால், அவற்றின் தாக்கம் மற்றும் தீவிரம் வெவ்வேறு விதமாக இருக்கும்.

ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளிடையே கூட அறிகுறிகள் வெவ்வேறு விதமாக காணப்படும். மூன்று வயதுக்கு முன்னரே அறிகுறிகள் காணப்படும். ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆற்றல், அறிவுத்திறன் மற்றும் செயல்பாடுகள் பரவலாக வேறுபட்டிருக்கும்.

சில குழந்தைகளின் பேச்சுத்திறன் ஓரளவு வளர்ச்சி அடைந்திருக்கும். மேலும், ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறிவுத்திறன் குறைபாடும் (Intellectual Disability) சேர்ந்தே இருக்கலாம். ஆனால், இரண்டும் வெவ்வேறு நரம்பியல் வளர்ச்சி சார்ந்த குறைபாடுகள். ஏனெனில், ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட, பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளின் அறிவுத்திறன் (மினி) சராசரி மற்றும் சராசரிக்கு மேலேகூட இருக்கும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon