Link copied!
Sign in / Sign up
6
Shares

குழந்தைகள் உயரமாக வளர உதவும் 7 உணவுகள்


குழந்தைகள் போதுமான வளர்ச்சி அடைந்தால் தான் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள் என்று கருதப்படும். தங்கள் குழந்தை, மற்ற குழந்தைகளை காட்டிலும் உயரம் குறைவாக இருக்கும் போது பெற்றோர்கள் கண்டிப்பாக கவலைப்படுவார்கள். உங்கள் குழந்தை முழுமையாக வளர்ச்சியடைந்துவிட்டால், அதன் பிறகு அவர்கள் உயரத்தை குறைக்க வழியேதும் இல்லை. இங்கே, உங்கள் குழந்தை உயரமாக வளர உதவும் 7 உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தாமதம்  ஆவதற்குள் இதனை முயற்சி செய்து பாருங்கள்.

1 பால் பொருட்கள்

பால், வெண்ணெய், தயிர் - இவையனைத்தும் கால்சியம் நிறைந்தவை; கால்சியம் எலும்புகளை உறுதியாக்கும். இதனால் உங்கள் குழந்தைகள் வேகமாக வளர்வார்கள். உங்கள் குழந்தையின் உணவில் தினசரி ஒரு டம்ளர் பால் இடம்பிடித்திருக்க வேண்டும். அவர்களுக்கு வெறும் பால் குடிக்க பிடிக்கவில்லை எனில், அவர்களுக்கு பிடித்தமான சுவையில் சத்து மாவுகளை கலந்து கொடுக்கலாம் அல்லது பாலை வைத்து உணவுகள் தயார் செய்து கொடுக்கலாம்.

2 முட்டை

முட்டையை உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான உணவாக மாற்ற முயற்சி செய்யுங்கள். இதில் அதிகளவு புரதம் நிறைந்துள்ளதால், உங்கள் குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். உங்கள் குழந்தையின் உடலில் புதிய செல்கள் உருவாகுவதற்கு முட்டை உதவுகிறது. இதனால், உங்கள் குழந்தைகள் உயரமாக வளருவார்கள்.

3 பழங்கள்

பழங்கள் மற்றும் காய்கறிகள் உங்கள் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் தாதுக்களையும் வழங்குகின்றன. மேலும், இவை உங்கள் குழந்தைகளின் எலும்பை வலுவாக்குவதால், குழந்தைகள் உயரமாக வளருவார்கள். வழக்கமாக கொடுக்கும் பழங்களை விட, மாம்பழம், பீச் மற்றும் கேன்ட்டலூப் போன்ற பழங்களை கொடுக்கலாம். அதை பழச்சாறாகவோ அல்லது சாலட் போன்றோ செய்து கொடுக்கலாம்.

4 சிக்கன்

சிக்கனில் அதிகளவு புரதம் இருப்பதால், இது தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால், ஆரோக்கியமான முறையில் உடல் எடை கூடும். எனவே, உங்கள் குழந்தைகளுக்கு ருசியான சிக்கன் குருமா, சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல் போன்றவற்றை செய்து கொடுக்கலாம். இதுவே, வயிற்றை நிரப்புவிடும் என்பதால், உங்கள் குழந்தைகள் அதற்கு பின்னர் நொறுக்குத்தீனி சாப்பிட மாட்டார்.

5 கீரை

கீரையில் வைட்டமின்கள், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் கால்சியம் அடங்கியுள்ளது. இவையனைத்தும் உயரமாவதற்கு தேவையான மூலக்கூறுகள். இது உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த உணவாக இல்லாவிட்டாலும், அவர்களுக்கு பிடித்த முறையில் இதை செய்து சாப்பிட வைக்கலாம். இது உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்கும்.

6 ஓட்ஸ்

ஒரு கப் ஓட்ஸ் குழந்தைகளுக்கு பிடித்தமான காலை உணவாக இருக்கும். இதில் நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகளவில் இருப்பதால், உங்கள் குழந்தைகளுக்கு தேவையான எனர்ஜியை கொடுக்கிறது. ஓட்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உங்கள் குழந்தை உயரமாக வளர்வதற்கு இது உதவும்.

7 சோயாபீன்ஸ்

சோயாபீன்ஸ் மற்றும் அதன் தயாரிப்பு பொருட்களான டோஃபுஸ் மற்றும் சோயா பாலில், கால்சியம் மற்றும் புரதம் அதிகளவில் அடங்கியுள்ளது. சோயாபீன்ஸ் சாப்பிட உங்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள்.

மேற்சொன்ன உணவுகளை தவிர்த்து, உங்கள் குழந்தை ஆரோக்கியமாகவும், வலுவாகவும், உயரமாகவும் வளர, போதுமான தூக்கமும், உடற்பயிற்சியும் மிகவும் அவசியமானது.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon