Link copied!
Sign in / Sign up
109
Shares

குழந்தைகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 7 உணவுகள்

குழந்தைகள் எந்த விதமான நோய் பாதிப்பும் இன்றி, உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் விருப்பமாகவும், வேண்டுதலாகவும் இருக்கிறது. ஆனால் குழந்தைகள் பெரும்பாலான குழந்தைகள் காலநிலை மாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அனைத்து பூச்சிகள் மற்றும் புழுக்களால் உங்கள் குழந்தைகள் ஈர்க்கப்படுகின்றன அல்லது காற்று மாசுபட்டிருப்பதால் அதில் இருக்கும் தீங்கு விளைவிப்பான்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. நாம் அவர்களை எவ்வளவு பாதுகாத்தாலும், சளி மற்றும் காய்ச்சல் அவர்களை தொற்றி கொள்ளும். உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுவதன் மூலம், அவர்கள் ஆரோக்கியமாக இருக்கவும், நோய்களை தவிர்க்கவும் முடியும். போதுமான அளவு தண்ணீர், ஆரோக்கியமான உணவு மற்றும் சரியான தூக்கத்தை மேற்கொள்ள செய்வதன் மூலம் இவற்றை தவிர்க்கலாம். இங்கு குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் உணவுகளை பார்க்கலாம்.  

1 இஞ்சி

இது சளி மற்றும் இரும்பலை போக்க கூடிய மருவ பொருள் என்பது அனைவரும் அறிந்ததே. இதை தினமும் உபயோகிப்பதன் மூலம் உங்கள் குழந்தையை சளி போன்ற நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கலாம். இது செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகிறது. நீங்கள் 6 மாதங்களில் உங்கள் குழந்தைக்கு திட உணவை அறிமுகப்படுத்தினால், 8 மாதங்களுக்கு பிறகு இஞ்சியை அறிமுகப்படுத்தலாம்.

2 கேரட்

கேரட்டுகளில் அதிக அளவு பீட்டா கரோட்டின் உள்ளது, இது உங்கள் குழந்தையின் உடலில் வைட்டமின் ஏ-விலிருந்து தேவையான நோய் எதிர்ப்பு சக்தியாக மாற்றப்படுகிறது. வைட்டமின் ஏ உங்கள் குழந்தையின் பார்வை மற்றும் கண்களின் பொதுவான வளர்ச்சியை பராமரிக்க உதவுகிறது. உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு இது மிகவும் நல்லது.

3 தயிர்

7 முதல் 8 மாதங்களான குழந்தைகளின் உணவில் தயிரை சேர்ப்பது, மிகவும் பாதுகாப்பான ஒன்று. குழந்தைகளின் திட உணவில் தயிரை சேர்க்க, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இது குழந்தையின் செரிமானத்திற்கு உதவுகிறது. இது உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கான அத்தியாவசியமான நிறைய புரதங்களை கொண்டுள்ளது. உங்கள் குழந்தைக்கு இது ஒவ்வாமையை ஏற்படுத்தினால் மற்றும் தவிருங்கள். உங்கள் குழந்தையின் தினசரி உணவில், தயிர் மற்றும் சில காய்கறிகளை சேருங்கள்.

4 பூண்டு

உங்கள் குழந்தையின் 7 மாதங்களுக்கு பிறகு, நீங்கள் அவர்களுக்கு பூண்டை அறிமுகப்படுத்தலாம். பூண்டு காயங்களைக் குணப்படுத்த மற்றும் குழந்தையின் திறனை மேம்படுத்த என பல ஆரோக்கியமான நன்மைகளை கொண்டுள்ளது. உங்கள் குழந்தையின் உணவில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சமைத்த பூண்டை சேர்க்கலாம். இது குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தினால், நிறுத்திவிடுவது சிறந்தது.

5 பெர்ரி

ஸ்ட்ராபெர்ரிகள், ப்ளாக்பெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி ஆகியவை உங்கள் குழந்தைக்கு நல்லது. ஏனெனில் அவை வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் ஒரு பெரிய ஆதாரமாக உள்ளன. உங்கள் குழந்தை சாதாரண உணவு முழுவதையும் அறிமுகப்படுத்திய பின்னரே இவற்றை அறிமுகப்படுத்தப்பட முடியும். வாழைப்பழங்கள், கத்தரிக்காய், திராட்சை மற்றும் ஆரஞ்சு போன்றவை, உங்கள் குழந்தைக்கு மிகவும் நல்லது.

6 பப்பாளி

பப்பாளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் பி ஆகியவை உங்கள் குழந்தைக்கு பயனுள்ளதாக இருக்கும். வைட்டமின் பி உணவை எரிபொருளாக மற்ற உதவுகிறது. இது நாள் முழுவதிற்குமான புத்துணர்ச்சியை கொடுக்கிறது. வைட்டமின் சி உங்கள் குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஃபோலேட், உங்கள் குழந்தை ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் நல்லது.

7 கீரைகள்

இதில் இரும்பு, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் ஆகியவை நிறைந்திருக்கின்றன. இவை உங்கள் குழந்தைக்கு அருமையான ஆரோக்கியமான உணவாகும். உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தொற்றுநோய்களை எதிர்க்கும் திறனை அதிகரிக்க உதவுகிறது.

நம் குழந்தையின் ஆரோக்கியம் தான் நமக்கு மிகவும் முக்கியம். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் ஆரோக்கியமாக இருப்பது, குழந்தைகள் சந்தோஷமாக இருக்கவும், அவர்களுக்கு கவலை இல்லாமல் இருக்கவும் உதவுகிறது. உங்கள் குழந்தைக்கு ஆரோக்கியம் நிறைந்த சமசீரான உணவை வழங்குவதன் மூலம் அவர்கள் சிறிய உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon