Link copied!
Sign in / Sign up
33
Shares

குழந்தைகள் விரும்பும் 3 வித கூழ் வகைகள்..!

குழந்தைகள் விரும்பும் 3 வித கூழ் வகைகள்..!
 
உங்கள் குழந்தை 4-6 மாத வயதிற்கு பின், கூழ் வகை உணவுகளை சாப்பிடத் துவங்கும். அந்த நேரத்தில், இட்லி, ரொட்டி இவற்றை கூழாக்கித்  தருவது வழக்கம்; வீட்டிலேயே தயாரிக்கப்படும் கூழ் வகைகள் குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை அளிக்காது, செரிமானத்திற்கு உதவும் வகையில், சத்துள்ளதாய் திகழ்கிறது.
  
உங்கள் குழந்தைகள் கூழ் வகைகளை உட்கொள்ள துவங்கிய பின், ஒரே வித கூழ்களை அளிப்பதற்கு பதிலாக, சில வகைகளை புதிதாக செய்து தரலாம். பெரும்பாலான குழந்தைகளுக்கு இனிப்பு வகைகள் என்றாலே கொள்ளை பிரியம்; கூழ் வகைகளை ஆப்பிள், கேரட், வாழைப்பழம் பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்டு அவர்களுக்கு பிடித்த சுவையில் தர இதோ சில  குறிப்புகள். 
 
1. கேரட் கூழ்
 
கேரட், குழந்தைகளால் பெரிதும் விரும்பப்படும் காயாகும். அது வைட்டமின் ஏ , வைட்டமின் சி, வைட்டமின் பி8, இரும்பு மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் கரோட்டின் என பல சத்துக்களை அளிக்கிறது.
உடலுக்கு நன்மை தரும் சுவையான கேரட் கூழ் செய்முறை பற்றி காண்போம்.
 
தேவையான பொருட்கள்
 
தோல் சீவிய 6 கேரட்களை ½ அங்குல அளவிற்கு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
 
செய்முறை
 
1.கேரட்களை கூழாக்க, முதலில் அவற்றை 20 நிமிடங்கள் வரை வேக வைக்க  வேண்டும்.
2.வேக வைத்த கேரட்களை, நீர் அல்லது பாலைச்  சேர்த்து கூழ் பதம் வரும் வரையில் மசிக்கவும்; பின் மழலைக்குக் கொடுக்கவும்.
 
குறிப்பு
 
நன்கு முதிர்ந்த, திரட்சியான கேரட்களை தேர்வு செய்யவும்.
 
2. ஆப்பிள் கூழ்
 
 
காலா, கோல்டன் டெலிசியஸ், ரோம் அல்லது பிங்க் லேடி ஆப்பிள் வகைகள் இந்த கூழ் தயாரிக்க ஏற்றவை. இவை சுவையாகவும், குறைந்த அமிலத் தன்மையோடும் இருக்கும்.
 
தேவையான பொருட்கள்
 
தோல் சீவிய 4 ஆப்பிள்களை சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
 
செய்முறை
 
1.ஆப்பிள்களை கூழாக்க, முதலில் அவற்றை 12 நிமிடங்கள் வரை வேக வைக்க  வேண்டும்.
2.வேக வைத்த ஆப்பிள்களை, நீர் அல்லது பாலைச்  சேர்த்து கூழ் பதம் வரும் வரையில் மசிக்கவும்; பின் குழந்தைக்குக் கொடுக்கவும்.
3.தானிய வகைகளையும் இக்கூழுடன் சேர்க்கலாம்.
 
குறிப்பு
 
உங்கள்  குழந்தை நல மருத்துவரிடம்,  இலவங்கப் பட்டையை கூழுடன் சேர்ப்பது குறித்து  கலந்தாலோசிக்கவும்.
மெல்லிய தோல் கொண்ட ஆப்பிளாய் இருந்தால், வேக வைக்கும் நேரத்தை குறைத்துக் கொள்ளலாம்.
 
 3. வாழைப்பழக் கூழ்
 
 
முதலில் குழந்தைக்குக் கொடுக்கப்படும் பழமாக வாழைப்பழம் திகழ்கிறது. இது பொட்டாசியம், நார் சத்துக்களை அளிக்கிறது. வாழைப்பழம் இயற்கையின் அமில நீக்கி என அழைக்கப்படுகிறது.
 
தேவையான பொருட்கள்
 
½ தோல் நீக்கிய, வேக வைக்காத, வாழைப்பழம்.
1 தேக்கரண்டி தண்ணீர் அல்லது பால்.
 
செய்முறை
 
1.வாழைப்பழத்தை, கூழ் பதம் வரும் வரையில் காய் அல்லது கரண்டி கொண்டு  மசிக்கவும்;
2.நீர் அல்லது பாலைச்  சேர்த்து நன்கு கூழாக்கவும்; பின் குழந்தைக்குக் கொடுக்கவும்.
 
குறிப்பு
 
கூழை இன்னும் மிருதுவாக்க வாழைப்பழத்தை 25 நொடிகளுக்கு மைக்ரோவேவ்  ஓவனில் வைக்கவும்.
 
Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon