Link copied!
Sign in / Sign up
16
Shares

குழந்தைகள் விரல் சூப்புவது ஏன்? இதனால் ஏற்படும் பிரச்சனைகள் யாவை?

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஒரு முக்கியமான உணவாகும். தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது, அது தாய் மற்றும் சேய் என இருவருக்குள்ளும் ஒரு நெருக்கத்தை உருவாக்குகிறது. இவ்வாறு தாயுடன் அதிகம் நெருக்கமில்லாத குழந்தைகளே அதிகமாக விரல் சூப்பும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்கின்றனர்; இதிலிருந்து புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இப்பழக்கம் அதிகமுள்ளது.

இப்போது எல்லாக் குழந்தைகளிடமும் விரல் சூப்பும் பழக்கம் இருக்கிறது; 3 வயது வரை குழந்தைகளின் இப்பழக்கத்தைத் தவறாக நினைக்க வேண்டியதில்லை. அவ்வயதிற்குப் பின்பும் இப்பழக்கம் நீடித்தால், குழந்தையின் இப்பழக்கத்தை எப்படி தடுப்பது என்று இந்த பதிப்பில் படித்தறியலாம்..!

முக்கிய காரணம்..!

குழந்தை விரல் சூப்புவதற்கு மிக முக்கிய காரணமே தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என குழந்தை உணர்வது தான் என்கிறார்கள், ஆய்வாளர்கள்; மேலும் சிந்தனை அதிகமுடைய குழந்தைகளிடம் தான் விரல் சூப்பும் பழக்கம் அதிகம் இருக்கிறது என்று சில உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஏன் நீடிக்கிறது?

குழந்தைக்கு பெற்றோரிடம் இருந்து, தேவையான அன்பு, பாதுகாப்பு, பராமரிப்பு போன்றவை கிடைக்காத சூழலில் மட்டும் தான், குழந்தைகளிடம் விரல் சூப்பும் பழக்கம் நீடிக்கிறது. எந்தெந்த பெற்றோர்களிடம் நிரந்தர சண்டை இருக்கிறதோ, அவர்களின் குழந்தைகளிடம் விரல் சூப்பும் பழக்கம் உறுதியாக இருக்கும்.

மனஅழுத்தம்..!!

குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுகையில், அவர்கள் விரல் சூப்புவதையே நாடுகின்றனர்; சில குழந்தைகள் தூக்கம் நன்றாக வருவதற்காகவும், ஓய்வுக்காகவும், சில சமயம் பசிக்காகவும் கூட விரல்களைச் சூப்புகின்றனர். 

ஏற்படும் பிரச்சனைகள்..!!

4-16 வயது வரை விரல் சூப்பும் குழந்தைகளுக்கு உடலில், மனதளவில் என பல மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. 4-6 வயதிற்குள் குழந்தையின் பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முளைக்கத் துவங்கும்; இந்நேரத்தில் குழந்தைகள் விரல் சூப்பினால், பற்கள் சற்று வெளியே நீளத் துவங்கி எத்து பற்கள் உருவாகும். மேலும் பற்களுக்கு இடையில் இடைவெளி உண்டாகும்; இதனால், குழந்தைகள் தங்களின் தோற்றத்தைக் குறித்து தாழ்வு மனப்பான்மை கொள்ளும் வாய்ப்புள்ளது. 

இக்குழந்தைகளுக்கு பற்கள் சீராக இல்லாது இருப்பதால் பேச்சிலும் தெளிவில்லாமல் இருக்கும். விரல் சூப்பும் குழந்தைகளுக்கு தொடர்ந்து எச்சில் கையிலுள்ள விரல்களில் படுவதால், விரல்கள் நனைந்து, சோர்ந்து சூம்பிக் காணப்படும். இக்குறைபாட்டினால், விரல்களில் இரத்த ஓட்டம் குறைந்து, வெளிர்ந்து, பழுப்பு நிறமாகிவிடும். இது போல் குழந்தைகளின் விரல்களிலுள்ள அழுக்குகள் வாய்க்குள் சென்று பற்பல நோய்களை, நோய்தொற்றுகளை ஏற்படுத்த அதிகம் வாய்ப்புகள் உண்டு.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon