Link copied!
Sign in / Sign up
30
Shares

குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள்

குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதை பெரும்பாலான பெற்றோர் அனுமதிப்பதில்லை. குழந்தைகள்வெளியில் சென்று விளையாடுவதை தடுக்காமல், அவர்களை அனுமதிக்க வேண்டும். அவர்கள் வெளியில் சென்று விளையாடுவதால் அவர்களுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. உங்கள் குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதால் ஆபத்து ஏற்படும் என்று எண்ணினால், நீங்களும் உடன் செல்லலாம் அல்லது அவர்களுடன் சேர்ந்து விளையாடலாம். எங்கள் வேலைகளை பார்ப்பதே பெரும்பாடு இதில் எப்படி குழந்தைகளுடன் சென்று கண்காணிப்பது என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் அவர்கள் வெளியில் சென்று விளையாடுவதால் ஏற்படும் நன்மைகளை பாருங்கள்.

1 உடல் ஆரோக்கியம்

உங்கள் குழந்தையின் உடல் நலம் மேம்படும். அவர்கள் ஓடி விளையாடுவதால் அவர்கள் தசைகள் மற்றும் எலும்புகள் வலிமையடையும். அது அவர்கள் செய்யும் உடற்பயிற்சியாகவும் மாறும். அவர்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் மற்றும் கலோரிகள் வியர்வையாக வெளியேறும். அவர்கள் வெயிலில் விளையாடு போது அவர்கள் உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்கும். இதனால் அவர்கள் உடலளவில் ஆரோக்கியமாவார்கள்.

2 கற்றுக்கொள்ளுதல்..

குழந்தைகள் வெளியில் விளையாடுவதால் அவர்களது கற்றுக்கொள்ளும் திறமை அதிகரிக்கும். விட்டுக்கொடுத்தல், மற்றவரின் நட்புடன் பழகுதல், திட்டமிட்டு செயல்படுத்துவது போன்றவற்றை கற்றுக்கொள்வார்கள். புதிது புதிதாக கற்று கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். அவர்களை வகுப்பறையில் கூட அதே கவனத்துடன் செயல் பட முடியும்.

3 தன்னம்பிக்கை

தங்களால் முடியும் எனும் எண்ணம் அவர்களுள் வளரும். அது அவர்களை மனதளவில் சோர்வடைய விடாமல், அவர்களை முன்னேற்றும். "யார் மீது வைத்த நம்பிக்கை வேண்டுமானாலும் தோற்கலாம், ஆனால் நாம் நம் மீது வைக்கும் நம்பிக்கை தோற்காது" என்பதை போல அவர்களுக்கு ஏற்படும் நம்பிக்கை அவர்களை வாழ்வில் முன்னேற்றும்.

4 துணிச்சல்

எதை கண்டும் பயப்படாமல், எதையும் எதிர் நின்று தாக்கும் ஆற்றல் பெறுவார்கள். அவர்களது மன தைரியம் மற்றும் உறுதியடையும். தன்னை பலவீனமாக ஒரு போதும் உணரமாட்டார்கள். இளம் கன்று பயமறியாது என்பதை போல, இவர்களது செயல்கள் இவர்களது துணிச்சலை பறைசாற்றும்.

5 படைப்பாற்றல்

அலைபேசியில் விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகளை காட்டிலும், இவர்களது படைப்பாற்றல் அதிகமாக இருக்கும். இவர்களது யோசிக்கும் திறனாகப்பட்டது வளர்ச்சியடையும். கனவிற்கு கூட எல்லை உண்டு, கற்பனைக்கு எல்லை இல்லை என்பார்கள். அதை போல இவர்களது கற்பனை திறன் அளவிட முடியாத படி இருக்கும்.

6 சமுதாய வளர்ச்சி

ஒருவர் மற்றொருவருக்கு உதவுவது, கூட்டு முயற்சி மற்றும் பலவற்றை கற்றுக்கொள்வார்கள். மற்றவர்களை புரிந்து கொள்வது, அவர்களுக்கு புரிய வைப்பது, இப்படி அனைத்துக்கும் கற்று கொள்வார்கள். அவர்களது அறிவு சமுதாய ரீதியாகவும் வளர்ச்சியடைய துவங்கும்.

7 தன்னிச்சையாக செயல்படுவது

குழந்தைகள் தங்களது முடிவுகளில், மற்றவர்களின் உதவி இல்லாமல் தன்னிச்சையாக செயல் பட முடியும். இது சரி, இது தவறு என்று பகுத்தறியும் திறனும் சரியான முறையில் அவர்களுக்கு கிடைக்கும். எப்போதும் மற்றவர் முடிவிற்கு தலையசைக்காமல், சிந்திப்பார்கள்.

குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்பினாலும் அவர்களை உங்கள் கண்காணிப்பிலேயே வைத்து கொள்ள வேண்டும். அவர்களை விளையாட அனுமதித்தாலும், அதற்கென நேரம் ஒதுக்குங்கள். நீங்களும் முடித்த வரை அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும். குழந்தைகளுக்கு நன்மை ஏற்படுகிறது என்றால், அவர்களை வெளியில் விளையாட அனுமதிப்பதில்லை தவறில்லையே!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
100%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon