Link copied!
Sign in / Sign up
20
Shares

குழந்தைகள் உண்ணும் உணவை துப்பாமல் இருக்க 6 வழிகள்

குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்திருப்பீர்கள். 6 மாதத்திற்கு பிறகு குழந்தைகளுக்கு மற்ற உணவை பழக்கப்படுத்த முயற்சிப்பீர்கள். உங்களுக்கு குழந்தைக்கு உணவூட்டும் விஷயத்தில் அதிக பொறுமை கவனம் தேவை. பெரும்பாலும் குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்கு பிறகு கூழ் மற்றும் கஞ்சி போன்ற உணவுகளை கொடுப்பதே சிறந்தது. 8 மாதங்களுக்கு பிறகு திட உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அப்படி நீங்கள் கொடுக்கும் உணவை உங்கள் குழந்தைகள் உண்ணாமல் துப்புவது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தலாம். இங்கு குழந்தைகள் உணவை துப்பாமல் இருப்பதற்கான 6 வழிகளை பார்க்கலாம். 

1 நீங்கள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்குவதற்கு முன், நல்ல சுவையான உணவை அறிமுகப்படுத்துங்கள். குழந்தை அந்த உணவை உண்ணாமல் துப்பிவிட்டால், அதை விழுங்க சொல்லி கட்டாயப்படுத்தாமல் விட்டுவிடுவது நல்லது. திட உணவுகளுக்கு மாறுவதற்கு சில குழந்தைகளுக்கு கொஞ்சம் காலம் ஆகலாம், எனவே குழந்தைக்கு அவர்களின் விருப்பப்படி கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற முயற்சிக்கலாம்.

2 குழந்தை தொடர்ச்சியாக உணவை துப்பிக்க கொண்டே இருந்தால், உங்கள் குழந்தைக்கு உணவு பிடிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. அவர்களுக்கு அதிக அடர்த்தியான இந்த உணவுகளை எப்படி விழுங்குவது என தெரியாததாலும் துப்பலாம். நீங்கள் நிதானமாக மற்றும் பொறுமையாக இருந்து, குழந்தைகளுக்கு பிடித்த உணவுகளை கொடுங்கள்.

3 குறிப்பிட்ட உணவை உங்கள் குழந்தை துப்பிக் கொண்டே இருந்தால், உங்கள் குழந்தைக்கு உணவின் சுவை பிடிக்கவில்லை என்று அர்த்தம். அது எவ்வளவு ஊட்டச்சத்து நிறைந்த உணவாக இருந்தாலும் சரி, உங்கள் குழந்தையை கட்டாயப்படுத்தி உண்ண வைக்க முயற்சிக்க கூடாது. அவர்கள் பசியாக இருப்பது உங்களுக்கு தெரியும் போது, அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை ஊட்டலாம். அதன் சுவை மற்ற உணவுகளிலும் இருக்கும் படி தயாரித்து கொடுக்கலாம்.

4 குழந்தைகள் பசியாக இருக்கும் போது, உணவூட்டுங்கள். ஏனெனில், அவர்கள் பசியாக இருக்கும் போது உணவூட்டுவது, அவர்கள் துப்புவதை குறைத்து, உணவை விழுங்க செய்கிறது. குழந்தைகளது வயிறு நிரம்பி இருக்கும் போது கொடுக்கப்படும் திட உணவை, அவர்கள் விழுங்குவதற்கு பதில் துப்பிவிடுகிறார்கள்.

5 குழந்தைகள் அவர்களாக உணவுண்ணுவதை ஊக்குவியுங்கள். உங்கள் குழந்தை உணவை சுற்றி விளையாடுவதை அனுமதியுங்கள். இது அவர்களாக உணவை உண்ணும் போது, அவர்களை கட்டுப்படுத்திக் கொள்ள உதவுகிறது. அவர்கள் செய்யும் சிறிய வேலைகளில் கூட, உங்கள் கவனம் இருக்க வேண்டும்.

6 மென்மையான உணவு, பழங்கள், மற்றும் மசித்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க துவங்குவது சிறந்தது. வண்ண மயமாக மற்றும் வெவ்வேறு வடிவங்களில் இருக்கும் உணவுகள், உங்கள் குழந்தையை உணவுண்ண தூண்டுவதாய் இருக்கும். எனவே அவர்களுக்கு சத்தான காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை கொடுப்பது சிறந்தது.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon