Link copied!
Sign in / Sign up
6
Shares

குழந்தைகள் உண்ணும் நொறுக்குத்தீனிகளால் உடலுக்கு ஆபத்து..!?

குழந்தைகளின் அனைத்து ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தராது, நீங்கள் வாங்கித்தரும் சில்லுகள் உங்கள் குழந்தைகளின் குடலைக் குதறுகின்றன; பெரும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.

குழந்தைகளைக் கொல்லும் சில்லுகளைப் பற்றி விழிப்புணர்வு பெறுவோம் வாருங்கள்..!!

பாக்கெட் உணவுகள்..!

கடையில் விற்கும், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அனைத்து வகை சில்லுகள் (chips) அனைத்திலும் திரும்ப திரும்ப உண்ண தோன்றும் வகையான ரசாயன உப்பு கலக்கப்படுகின்றது. இதை சாப்பிடும் குழந்தைகள் சிறுவர்கள் விரைவாக இவைகளுக்கு அடிமையாவார்கள்; குறைந்தது தினமும் 4 பாக்கெட்டுகள் வரை சாப்பிடும் நிலை ஏற்படும். 

இதனால் முதலில் சிறுகுடல் பாதிக்கப்படும்; சிறுகுடல் இவைகளை ஜீரணிக்க இயலாமல் கழிவாக தேக்கும்; பிறகு, இதன் ரசாயண உப்புகள் சிறுநீரகங்களையும் பாதித்து, கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்த பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சில்லுகளின் குணநலன் என்ன என்று இந்த காணொளியை பார்த்து அறியுங்கள்..!

Video Credits:Kaaritv Facebook

பாக்கெட் பானங்கள்..!

குழந்தைகளுக்கு ஆரோக்கியம் அளிக்கும் உணவு மற்றும் பானங்களை அளிக்க வேண்டியது, பெற்றோர்களின் தலையாய கடமை..! குழந்தைகள் கலர் கலரான பாக்கெட்களில் அடைக்கப்பட்டிருக்கும் பொருட்களை, பானங்களை, பாக்கெட்டின் வண்ணத்தால் கவரப்பட்டு உங்களிடம் வினவுவர், நீங்களும் இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லதா என்று யோசித்து வாங்கிக் கொடுப்பீர்..! ஆனால், உண்மையில் புறத்தில் அழகாக தோன்றும் எதுவும் அத்தகு ஆரோக்கியமானதல்ல..!  இதன் பொருளை, உண்மையை உங்களுக்கு உணர்த்தும் விதத்தில் இந்த காணொளியை, உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்..!

Video Credits: kaaritv Facebook

பெற்றோர்களே..! குழந்தைகள் விரும்புவதை செய்யலாம்; ஆனால், அது அவர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என அறிந்தும் செய்வது மடத்தனமாகும். எனவே, குழந்தைகள் சில்லுகள் (chips), பானங்கள், பாழச்சாறுகள் என எது சாப்பிட விரும்பினாலும், அதை வீட்டிலேயே செய்து தரவும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon