Link copied!
Sign in / Sign up
0
Shares

குழந்தைகள் சாப்பிடும் ஆரோக்கியமற்ற 5 உணவுகள்

கடைசியாக எப்போது உங்கள் குழந்தை நீங்கள் கொடுத்த உணவை முழுமையாக சாப்பிட்டார் என்று தெரியுமா? பல உணவு தயாரிக்கும் நிறுவனங்கள், உணவுகளை பார்ப்பதற்கு அழகாகவும், சுவையாகவும், அதே சமயம் ஆரோக்கியமானதாகவும் தயாரிக்கின்றனர். இதனால் தான் நமக்கு அந்த தயாரிப்புகளை பிடித்து போகிறது. ஒரு  காய்கறியை சாப்பிட வைக்க  நாள் முழுவதும் குழந்தையின் பின்னால் ஓடி ஆட வேண்டாம் அல்லவா.

1 குளிர்பானங்கள்

குழந்தைகள் பொதுவாக வெளியில், அதுவும் வெயிலில் தான் அதிக நேரம் விளையாடுவார்கள். அவர்களின் ஆற்றலை தக்க வைத்துக் கொள்ள கண்டிப்பாக அவர்களுக்கு ஏதாவது ஒன்று தேவை. மேலும், அவர்கள் உடம்பில் நீர்ச்சத்தை இழக்காமல், அதிக உடல் உப்புகளையும் இழக்காமல் இருக்க வேண்டும். குளிர்பானங்களில் அதிகளவு சக்கரை மற்றும் செயற்கை சுவையூட்டிகள் இருப்பதால், அது அவர்களின் உடலுக்கு நல்லதல்ல. இதனால் அவர்களின் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே, உங்கள் குழந்தைகளை அளவே குளிர்பானங்கள் பருக விடுங்கள்.

2 தானிய மிட்டாய்கள்

இது சற்றே ஆச்சரியமாக இருக்கலாம். ஏனெனில் இது ஒரு தானியம். இது எப்படி தீங்கிழைக்கும் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால், இன்றைய காலகட்டத்தில், கிரானோலா பார்கள் சக்கரையால் செய்யப்படுபவை. இதற்கு மேலும் சுவையூட்ட, இதன் தயாரிப்பாளர்கள் சாக்லேடையும் சக்கரையையும் இதனுடன் சேர்க்கின்றனர். மேலும், இந்த பொருட்களை எல்லாம் உறுதியாக பிணைக்க கார்ன் சிரப் பயன்படுத்துகின்றனர். இதை அதிகளவு உண்டால் மிகவும் ஆபத்து. இதில் பயன்படுத்தப்படும் பழங்கள், ஊட்டச்சத்துக்களை இழந்த உலர்ந்த பழங்களே.

3 பழங்கள் நிறைந்த தின்பண்டங்கள் / உலர்ந்த பழங்கள்

இன்றைய காலத்தில், இந்த ஸ்நாக்ஸ்களில் எல்லாம் அதிகளவு சக்கரையை தான் பயன்படுத்துகிறார்கள். எனவே, பெயரை கண்டு ஏமாற வேண்டாம். பொதுவாக, இதில் ஊட்டச்சத்துகள் குறைந்த பழங்கள், சிறிது சுவைக்காகவும் பேருக்காகவும் மட்டுமே சேர்க்கப்படுகிறது. உலர்ந்த பழங்களில் என்ன பிரச்சனை என்றால், அதில் இருக்கும் தண்ணீர் எடுக்கப்பட்டு விடுவதால், அதில் அதிக சக்கரை இருக்காது. எனவே, இதை குழந்தைகள் அதிகமாக உண்ணுவார்கள். ஆனால், இதனாலேயே அவர்கள் மீண்டும் அதிக சக்கரை எடுத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

4 தயிர்

இங்கு தீங்கிழைக்கும் உணவு பொருள் என்பதை காட்டிலும், பல குழந்தைகளுக்கு இது பிடிக்காது என்பதே நிதர்சனம். பிரச்சனை எல்லா தயிர்களிலும் இல்லை. குழந்தைகளுக்கான தயிரில் தான் உள்ளது. இதில் அதிகளவு சக்கரையும் செயற்கை சுவையூட்டிகளும் சேர்க்கப்பட்டிருக்கும். இது குழந்தைகளின் உடல் நலத்திற்கு நல்லதல்ல. குழந்தைகளுக்கு சாதாரண தயிர் கொடுக்கலாம். இதில் அதிகளவு கால்சியம் இருப்பதால், அவர்கள் உடலும் ஆரோக்கியம் தரும்.

5 பிரட்

பிரட் மிகவும் ஆரோக்கியமான உணவு அல்லவா? இதில் அதிகளவு சக்கரை இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால், இது தவறான கணிப்பு. பிரட்கள் உடலுக்கு தேவையான போதுமான ஊட்டச்சத்துக்களை வழங்காது என்பது தான் உண்மை. எனவே, உங்கள் குழந்தைகளுக்கு முழு கோதுமை பிரட் கொடுக்கலாம். ஆனால், நீங்கள் கொடுப்பதற்கு முன், அதில் பயன்படுத்தபட்டிருக்கும் பொருட்கள் ஆரோக்கியமானதா என்பதை பார்க்க வேண்டும்.

சந்தையில் இது போன்று பல உணவு பொருட்கள் உள்ளன. நீங்கள் எந்த உணவு பொருளை வாங்குவதாய் இருந்தாலும், வாங்குவதற்கு முன்னர், அதன் மூலப்பொருள்களை பாருங்கள். அதில் அதிகளவு சக்கரை உள்ளதா, அது ஆரோக்கியமானதா, உங்கள் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குமா என்பதை சோதித்து பாருங்கள்.  

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon