Link copied!
Sign in / Sign up
4
Shares

குழந்தைகள் பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்ளும் பழக்கங்கள்

குழந்தைகள் பெற்றோர்களின் பிம்பங்களே. உங்கள் குழந்தைகள் செய்யும் அனைத்தும் நீங்கள் செய்வதன் பிரதிபலிப்பே. நீங்கள் கவனித்து பார்த்தால் உங்கள் அழகிய மகள் நீங்கள் மேக்கப் செய்யும்போது அவளின் அழகிய விழிகளை உருட்டி உருட்டி உங்கள் முகத்தை பார்த்துக்கொண்டே இருப்பாள். நாளடைவில் நீங்கள் செய்வது போலவே அவளும் செய்ய முயற்சிப்பாள்.

அவள் அப்படி செய்வதை பார்க்க அழகாக இருக்கிறதா?. நீங்கள் இதை மரபணு வழியாக நடக்கிறது என்று கூறலாம். பிரதிபலிப்பு விளையாட்டுகள் மற்றும் சில உள்குணங்கள் ஆகியவற்றின் மூலம், உங்கள் பிள்ளையானது உங்களுடைய அற்புதமான நகலாக வளர்கிறாள்.

அம்மாக்களே பெரும்பாலும் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதால், குழந்தைகள் பெரும்பாலும் அம்மாவை போலவே இருப்பார்கள். உங்கள் குழந்தை உங்களை போலவே இருக்கிறார்கள் என்று மற்றவர்கள் சொல்லும்போது பெருமையடைகிறீர்கள் அல்லவா? உருவ அமைப்பிலோ அல்லது குணாதிசியங்களிலோ அவர்கள் அம்மாவைப்போல் நன்றாக வளர்கிறார்கள். குழந்தைகள் அம்மாவை பார்த்து அவர்களை போலவே வளர்வது அதிசயமானது. இங்கு அம்மாக்களிடம் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் சில பழக்கங்களை பார்க்கலாம்.

1 குளிக்கும் முறை

குளிப்பது என்பது குழந்தையின் சுகாதாரத்தில் முக்கியமானதாகும். குழந்தைகள் வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது குளிக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளாயின் வேர்வை மற்றும் அழுக்கு காரணமாக தினமும் குளிக்க வேண்டும். நல்ல பழக்கங்கள் எப்போதும் வீட்டிலிருந்துதான் தொடங்கும், நீங்கள் வீட்டை விட்டு குளிக்காமல் வெளியே சென்றால் குழந்தைகளும் அதையே பின்பற்றுவார்கள். எனவே அவர்கள் எப்போதும் சுத்தமாக இருப்பது உங்கள் கையில்தான் உள்ளது.

2 எழும் நேரம்

 

நீங்கள் கவனித்து பார்த்தால் நீங்கள் தூக்கத்தில் இருந்து எழும் நேரத்திற்கே அவர்களும் எழுவார்கள். அம்மாவை போலவே அவர்களும் சீக்கிரம் எழுவார்கள். நீங்கள் எழும் நேரத்தை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். கருப்பையில் உங்கள் குழந்தை இருக்கின்ற நாட்கள் அவர்களின் தூக்க நேரங்களை தீர்மானிக்கின்றன, ஆனால் வெளிப்புறக் காரணிகளில் ஏற்படும் மாற்றத்தால் தூங்கும் நேரமும் மாறுகிறது. ஆனால் நீங்கள் உங்கள் குழந்தையுடன் சேர்ந்து உறங்குகிறீர்கள் என்றால், நீங்கள் இருவரும் ஒரே தூங்கும் நேரத்தை கொண்டிருப்பார்கள்.

3 பேசும் முறை

உங்கள் குழந்தை முன் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதில் அதிக கவனம் தேவை. தொலைபேசி உரையாடலை இருந்தாலும் கூட அவர்கள் உங்களை கவனித்து உங்களை போலவே பேசுவார்கள். நீங்கள் பேசும் முறையில்லாத சொற்களை கூட, அவர்கள் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.

4 மேசை நாகரிகம்

உங்கள் குழந்தை மிகவும் புத்திசாலி அதை அவர்களும் அறிவார்கள். அவர்கள் நாற்காலியில் அமர்ந்திருந்தாலும் உங்களை கவனித்து கொண்டே தான் இருப்பார்கள். எப்போது அவர்கள் தங்களின் உணவை சொந்தமாக சாப்பிட தொடங்குகிறார்களோ, அவர்கள் உங்களை போலவே சாப்பிடுவார்கள். எனவே உங்கள் தட்டை எப்போதும் சுத்தமாக சாப்பிடுங்கள் அதுதான் அவர்களுக்கும் நல்லது.

5 ஒழுக்கம்

உங்கள் வேலைக்காரர்களிடம் நீங்கள் பேசும் முறையில் இருந்து உணவு உண்ணும் முன் நீங்கள் கடவுளிடம் வேண்டுவது என அனைத்தும் அவர்களால் கவனிக்கப்படும். இவை அனைத்தும் அவர்களால் உள்வாங்கப்பட்டு அவர்களின் குணாதிசியங்களில் பிரதிபலிக்கும். நீங்கள் நல்லவராக இருந்தால் அவர்களும் நல்லவர்களாக வளர்வார்கள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon