Link copied!
Sign in / Sign up
38
Shares

குழந்தைகள் பேச துவங்கும் முன் எப்படி பேசுவார்கள்?

உங்கள் குழந்தை வாய்திறந்து ஓசைகளுடன் பேச துவங்கும் வரை, அவர்கள் உங்களை தொடர்பு கொள்வதில்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது உண்மை அல்ல. உண்மையில், புதிதாக பிறந்த குழந்தை கூட உங்களை எப்போதும் தொடர்பு கொள்கிறது. இந்த தொடர்பு அழுகையாக வெளிப்படுகிறது. அவர்கள் அழுகையின் வாயிலாக என்ன உணர்கிறார்கள் மற்றும் என்ன தேவை என்பதை உணர்த்துகிறார்கள். அவர்கள் பசி, தாகம், கட்டியணைத்து கொஞ்ச வேண்டும், மேலும் சாப்பிட விரும்பவில்லை மற்றும் பல காரணங்களுக்காக அவர்கள் அழுவார்கள். எந்த குழந்தையும் காரணம் இல்லாமல் அழுவதில்லை. 

குழந்தைகள் அவர்களது உடல் அசைவு மற்றும் சைகைகள் மூலமாகவும், உங்களை தொடர்பு கொள்வார்கள். குழந்தைகள் அசௌகரியமாக உணரும் போது பதட்டமடைவார்கள். அவர்கள் வசதியாக உங்கள் கரங்களில் இருக்கும் போது நன்கு ஓய்வெடுப்பார்கள்.

குழந்தைகளின் சில உடல் மொழிகள் மற்றும் சைகைகள்

1 கொட்டாவி, கண்களை தேய்த்தால், தூக்கக் கலக்கம், தூக்கத்தில் கண்களை சிமிட்டுதல். இவை நான் தூக்கத்தில் இருக்கிறேன் என்று சொல்வதற்கான அறிகுறிகள்.

2 வாயை திறத்தல். இது பசியாக இருப்பதை உணர்த்த.

3 எச்சரிக்கையான உடல் இயக்கங்களுடன் கண்களைத் திறத்தல். 'நான் விளையாட மற்றும் கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்' என்பதாகும்.

4 அவர்கள் தலையைத் திருப்பிக் கொண்டால் அல்லது அவர்கள் தலையை பின்னுக்கு நகர்த்தினால், 'வேண்டாம் நன்றி' என சொல்வதாகும்.

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தையுடன் பேசுவதை முட்டாள் தனமாக நினைக்கிறார்கள். ஆனால் குழந்தையுடன் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் மற்றும் என்ன செய்கிறீர்கள் என்பதை பற்றி பேசுவது, அவர்களின் வளர்ச்சிக்கு உதவக் கூடிய ஒன்றாக இருக்கிறது. இங்கு நீங்கள் செய்ய வேண்டிய சிலவற்றை பார்க்கலாம்.

1 பெற்றோர்

உங்கள் குழந்தையின் கண்கள் பிரகாசிக்கும், வார்த்தைகளைச் சுற்றி உங்கள் வாயைத் திறந்து பார்த்துக் கொண்டிருக்கும்.

2 நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை பற்றி பேசுதல்

உதாரணமாக, நாங்கள் உன்னை இப்போது வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைக்க போகிறோம். உனக்கு குளிக்க பிடிக்குமா, பிடிக்காத? இது போன்று அவர்களிடம் பேசுங்கள். நீங்கள் எந்த மொழியில் உங்கள் குழந்தை பேச வேண்டும் என நினைக்கிறீர்களோ அதில் பேசுங்கள். இவை உங்கள் குழந்தை வார்த்தைகளை கற்றுக் கொண்டு பேச உதவும்.

3 குழந்தை பாடல்களை பாடுங்கள்

உங்கள் குழந்தை பாடலில் இருக்கும் வார்த்தைகளை விரும்ப ஆரம்பிக்கும் மற்றும் உங்கள் குரலும் இனிமையாக மாற துவங்கும்.

4 புத்தங்கள் படித்தால் மற்றும் கதை சொல்லுதல்

ஒரு சில வாரங்களுக்குப் பிறகு, நீங்கள் ஒரு அமைதியான அனுபவத்தைத் தருகிறீர்கள் என்று உங்கள் குழந்தை புரிந்துகொள்வார்கள். அவர்கள் இந்த நேரத்தை இனிமையானதாகவும் உணர்வார்கள். உங்கள் குழந்தை வார்த்தைகளை புரிந்து கொள்ள துவங்குவதோடு, மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு கற்றுக்கொள்ளவும் செய்வார்கள்.

5 மழலை பேச்சு

உங்கள் குழந்தையின் முயற்சியில் முதல் முறையாய் உளறலாய் பேச துவங்குவார்கள். உங்கள் குழந்தை பேசுவதற்கு சிறிது காலம் கொடுங்கள். இது உரையாடல் ஓட்டத்தைப் பற்றி உங்கள் குழந்தைக்கு கற்றுக்கொடுக்கிறது.

6 பெயர்கள்

உங்களை சுற்றி இருக்கும் பொருட்கள் மற்றும் பொம்மைகளுக்கு பெயர் சூட்டுங்கள். இது உங்கள் குழந்தையை கற்றுக்கொள்ள செய்யும். உதாரணமாக, உங்கள் குழந்தையிடம் காலணிகளை காண்பித்து, இது காலனி, இவற்றை காலில் அணிய போகிறோம் என்று சொல்லி அணிந்து விடுங்கள்.

உங்கள் குழந்தை சிறிது நேரத்திற்குள் பதிலளிக்கவில்லை என்றால் கவலை கொள்ளாதீர்கள். ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமாக இருக்கும் மற்றும் அவர்கள் மழலை மொழிக்கு சில காலங்களை எடுத்து கொள்வார்கள். உங்கள் குழந்தைகள் பேச துவங்கியதும், நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள். நீங்கள் அந்த மறக்க முடியாத தருணத்தின் மகிழ்ச்சியில் களித்திருப்பீர்கள். உங்கள் குழந்தைக்கு ஏதும் பிரச்னை இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், குழந்தை நல மருத்துவருடன் இது பற்றி கலந்தாலோசியுங்கள். 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon