Link copied!
Sign in / Sign up
5
Shares

குழந்தைகள் நாயுடன் வளர வேண்டியதற்கு 5 காரணங்கள்..!

குழந்தை வளர்ப்பில் பெற்றோர் பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துகின்றனர்; அதே சமயம் சில விஷயங்களை தவிர்த்து விடுகின்றனர். அதில் ஒன்று தான் செல்லப்பிராணி வளர்ப்பு. குழந்தை வளருகையில் அதனுடன் நாய் போன்ற செல்லப்பிராணியும் உடன் வளர்ந்தால், குழந்தையின் அறிவு, வாயில்லா பிராணிகளை புரிந்து கொள்வது பற்றியும், அவைகளை கவனித்துக் கொள்வது பற்றியும் விரிவடையும். அதே சமயம் குழந்தை நாயுடன் வளர்ந்தால், குழந்தைகள் என்னென்ன விஷயங்களை கற்றுக் கொள்ளும் என்பதை இந்த பதிப்பில் படித்தறியலாம்..

1. பொறுப்புணர்வு..!

குழந்தைகள் நாயுடன் வளர்கையில், பிராணியை பார்த்துக் கொள்வது, அதற்கு நேரத்திற்கு உணவளிப்பது என்று பொறுப்புணர்ச்சியுடன் விளங்கும். மேலும் நாயின் நற்குணங்களை, அதன் குணாதிசயத்தை எளிதில் குழந்தைகள் அறிந்து கொள்வர்.

2. காதலுக்கு வயதில்லை..!

குழந்தையின் வயதையொட்டிய நாயினை தான் எடுத்து வளர்க்க வேண்டும் என்பதில்லை. நாய் பராமரிப்பு மையத்தில் இருந்து, குழந்தைக்கு பிடித்த பிராணியை எடுத்து வளர்க்கலாம்; குழந்தைகள் எளிதில் செல்லப்பிராணியுடன் ஒட்டிக் கொள்வர்.

3. பாச நேசம்..!

குழந்தைகள் அன்பு, பாசம், நேசம் இவற்றை செல்லப்பிராணிகளை பார்த்தும் கற்றுக் கொள்வர். மேலும் செல்லப்பிராணிகளை அதன் குடும்பத்துடன் பராமரித்தால், அவை காட்டும் பாசம், குடும்பப்பற்று குழந்தையின் நெஞ்சத்தில் பசுமரத்தாணி போல் நன்கு பதியும்..

4. மரியாதை..

குழந்தைக்கு மரியாதையை கற்றுத் தரவேண்டியது பெற்றோரின் தலையாய கடமை. அந்த வகையில் குழந்தைகள் பிராணிகளை மதித்தால், கண்டிப்பாக வாழ்வில், அவர்கள் மற்ற மனிதர்களை மதித்து வளர்வர்; வாழ்வர். மேலும் செல்லப்பிராணிகளை புரிந்து நடக்க முடிந்தால், மனித மனங்களை புரிந்து கொள்வதும் எளிதே!

5. நட்பு..!

வாயில்லா ஜீவனுடன் பழகி, அதை நண்பனாக்கி கொள்ள இயன்றால், மனித மனங்களை வென்று நட்பு கொள்வது, குழந்தைகளுக்கு எளிதான விஷயமே! ஆகையால் குழந்தைகள் செல்லப்பிராணி அதிலும் நாய் போன்ற பிராணியுடன் வளர்வது, அவர்கள் வாழ்வை வளப்படுத்த உதவும்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon