Link copied!
Sign in / Sign up
103
Shares

குழந்தைகள் முன்னிலையில், பெற்றோர்கள் தவிர்க்க வேண்டியவை..!

குழந்தைகள் சமூகத்தை பார்த்து வளர்கிறார்கள் என்பார்கள். ஆனால், அவர்கள் சமூகத்தை பார்க்கும் பார்வையை பெற்றோரிடம் இருந்து தான் பெறுகிறார்கள். பெற்றோர் என்ன பார்வை கொண்டிருக்கிறார்களோ, அப்படி தான் குழந்தைகளும் வளர்வார்கள். எனவே, தவறானவற்றை குழந்தைகள் முன்னால் செய்வதும் தவறு, பேசுவதும் தவறு. அந்த வகையில் வீட்டில் குழந்தைகள் முன் பெற்றோர் அவர்கள் காதுப்பட பேசக் கூடாத, செய்யக்கூடாத சில விஷயங்கள் பற்றி இங்கு காணலாம்..! 

1. தம்பதியரிடையே நிகழும் சண்டை குழந்தைகளுக்கு தெரியக்கூடாது; அவர்களின் காதுபட எதுவும் நிகழக்கூடாது 

2. குழந்தைகளின் முன்னிலையில், பிறரை பற்றிய தேவையில்லாத விமர்சனங்கள் வேண்டாம்; விமர்சனம் உண்மையாய் இருந்தால், குழந்தையின் மற்றவர்கள் மீதான எண்ணம் மாறிவிடும் அல்லது விமர்சனம் பொய்யாக இருந்தால், குழந்தை உங்கள் மீது கொண்ட எண்ணம் மாறிபோய்விடும்.

3. குழந்தைகள் முன்னால் தீய சொற்கள் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.. குழந்தைகளை தகாத வார்த்தைகளால் மிரட்டுதல் கூடாது

4. தாய்மார்கள் கணவரிடம் மறைக்க விரும்பும் விஷயத்தை குழந்தையிடம் கூறி, "அப்பாவிடம் சொல்லிவிடாதே" என்று சொல்லிவிட்டால், குழந்தை தந்தை வந்ததும் தாயையே மிரட்டும் தோரணை, அவர்களிடம் வந்துவிடுகிறது.

5. குழந்தைகளிடம் ஆசிரியர் மற்றும் பள்ளி குறித்து குறைகூறுதல் கூடாது; அது குரு மற்றும் பாடசாலையின் மீது அவர்கள் கொண்டுள்ள மதிப்பை குறைத்துவிடும்.

6. குழந்தைகளுக்கு எந்தவொரு விஷயத்திற்கும் பணம் கொடுத்துப் பழக்கக்கூடாது; அதாவது ஒரு வேலையை செய்வதற்கு லஞ்சம், கமிஷன் போன்றவற்றை அளித்து பழக்கக் கூடாது. 

7. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

8. உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசி, அவர்கள் மனதில் தாழ்வு மனப்பான்மையை விதைக்காதீர்கள்..

9. படிப்பு மற்றும் குழந்தைகளின் கற்றல் விஷயத்தில் எப்பொழுதும் பாராட்டி, ஊக்கம் அளித்தே பேச வேண்டும்; குழந்தைக்கு எது விருப்பமோ, அதில் குழந்தையை முன்னேற தூண்ட வேண்டும்..!

10. குழந்தையின் முன்னிலையில் உங்கள் வீட்டிலுள்ள நபர்கள் மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு கணமும் அனுமதிக்காதீர்கள்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon