Link copied!
Sign in / Sign up
9
Shares

குழந்தைகள் கற்க வேண்டிய 5 வெளிநாட்டு பாஷைகள்..!

பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளுக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்துள்ளீரா? தரமான கல்வி அளிக்கிறீரா? ஆம் என்கிறீரா..! நிச்சயமாக இல்லை. இன்றைய காலகட்டத்தில், குழந்தைகள் தாய்மொழி, ஆங்கிலம், ஹிந்தி இவற்றை மட்டும் அறிந்திருந்தால் போதாது. அவர்கள் எங்கு சென்றாலும் அந்த இடத்தை சூழ்நிலையை சமாளிக்க அவர்கள் சில வெளிநாட்டு பாஷைகள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். குழந்தைகள் கட்டாயம் கற்க வேண்டிய வெளிநாட்டு பாஷைகள் குறித்து இந்த பதிப்பில் படித்தறியுங்கள்.. 

குழந்தைகள் 3-7 வயதிற்குள் இந்த மொழி பயிற்சியை மேற்கொண்டால் எளிதாக இருக்கும். மேலும் அவர்களால் எளிதாக கற்றுக்கொள்ளவும் முடியும்.

1. Spanish

ஸ்பானிஷ் மொழி ஆங்கில மொழி போன்றே இருக்கும். ஆங்கிலம் அறிந்த குழந்தைகளால், எளிதாக ஸ்பானிஷ் கற்றுக் கொள்ள முடியும். இதை முழுதும் கற்க 5 மாதங்களே ஆகும். இந்த மொழி உலகில் இருக்கும் 23 நாட்டு மக்களால் பேசப்படுகிறது.

2. Mandarin

மாண்டரின் ஒரு பழமையான மொழி. குழந்தைகள் கட்டாயம் கற்க வேண்டிய ஒன்று. இந்த மொழி அறிந்திருந்தால், சைனா போன்ற நாடுகளில் அபரிமித வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

3. French

பிரெஞ்சு மொழி ஸ்பானிஷ் போன்றே மிக எளிதான மொழி. எளிதில் யாரும் கற்றுக்கொள்ள இயலும். சமீபத்திய ஆய்வின் படி, 2050 ல் 750 மில்லியன் மக்கள் பிரெஞ்சு மொழி பேசுபவராக இருப்பர் என்று கண்டறியப்பட்டுள்ளது. யூரோப் மற்றும் ஆப்பிரிக்காவின் சில பக்கங்களில் இந்த மொழி பேசப்படுகிறது.

4. Arabic

அரபிக் மொழி மத்திய கிழக்கிந்திய நாட்டு மக்களாலும், வட ஆப்பிரிக்காவினராலும் பேசப்படுகிறது. இம்மொழி அறிந்த மக்களைக் காண்பது அரிதாகவே உள்ளது. ஆகையால், குழந்தைகள் இதை அறிந்திருந்தால், நல்ல எதிர்கால வாய்ப்புகள் உள்ளன.

5. German

ஜெர்மனி நாட்டின் அரசாங்க மொழியான ஜெர்மனை குழந்தைகள் அறிந்திருந்தால், மிக நல்லது. யூரோப்பின் பல நாடுகளில் ஜெர்மன் மொழி பயன்படுத்தப்படுகிறது. ஆகையால், குழந்தைகள் இம்மொழி கற்பது நலம் பயக்கும்.

இப்பொழுது வெளிநாட்டின் பாஷைகள், அதை கற்க ஆகும் காலம், அதன் முக்கியத்துவம் அறிந்திருப்பீர். ஆகையால் நல்ல முடிவு எடுத்து சிறந்த பெற்றோராக மாறுங்கள்..

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon