Link copied!
Sign in / Sign up
12
Shares

குழந்தை வளர்ப்பு : பல் வளர்வதற்கான அறிகுறிகளும் இதன் சிகிச்சைகளும்

பற்கள் ஈறுகளில் இருந்து வெளிவருவதது பல்முளைத்தல் எனப்படும். இந்த நேரத்தில் பெற்றோர்கள் தான் மிகவும் அவதிப்படுவார்கள். ஏனெனில், குழந்தைகளுக்கு இது புதிய அனுபவம் என்பதால் அவர்களை படாதபாடு படுத்துவார்கள். குழந்தைகளுக்கு பற்கள் வளரும் போது நீங்கள் மேற்கொள்ள வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து இங்கே பார்க்கலாம். இதில் குளிரூட்டப்பட்ட பல் வளையங்கள் மற்றும் பற்களுக்கான திரவங்களும் அடங்கும்.

பல்முளைத்தல் என்றால் என்ன?

குழந்தை பல் அல்லது பால் பல் ஈறுகளில் இருந்து வெளி வருவதை Teething என்று கூறுவார்கள். குழந்தையின் வளர்ச்சியில் இது சாதாரணமான ஒன்று.

என்ன தான் பால் பற்கள், குழந்தை கருவில் இருக்கும் போதே உருவாக ஆரம்பித்து விடும் என்றாலும், குழந்தைக்கு 6 முதல் 9 மாதங்கள் ஆன பிறகு தான் அது வளர ஆரம்பிக்கும். பற்கள் வளரும் போது, உடலில் சில இரசாயனங்கள் சுரக்கும். இது ஈறுகளை பிரித்து பற்கள் வெளிவர உதவும்.

பற்கள் ஈறுகள் முழுவதும் பல நிலைகளில் வளரும். பொதுவாக கீழ் தாடையில் முன் உள்ள பற்கள் முதலில் வளரும். பின்பு, மேல் தாடையில் முன் உள்ள நடு பல் வளரும். மாதங்கள் ஆக ஆக மற்ற பக்கத்திலும் வளரும். குழந்தைக்கு 2½ அல்லது 3 வயது ஆகும் போது தான் அனைத்து பற்களும் வளர்ந்திருக்கும்.

பற்கள் வளர்வதற்கான அறிகுறிகள்

ஒவ்வொரு குழந்தைக்கும் பற்கள் வளர்வதற்கான அறிகுறிகள் வேறுபடும். பல குழந்தைகளுக்கு, பற்கள் வளர்வதற்கான அறிகுறிகள் லேசாகவும், சில நாட்களுக்கு மட்டுமே இருக்கும். ஆனால், சில குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் வலி மிகுந்ததாகவும் நீண்ட நாட்களுக்கும் இருக்கும்.

பற்கள் வளர்வதற்கான அறிகுறிகள், பல் வளர்வதற்கான சில நாட்கள் அல்லது சில வாரங்களுக்கு முன்பு தான் தோன்றும். அவற்றில் சில பொதுவான அறிகுறிகள்:

1) சிவந்த மற்றும் வீங்கிய ஈறுகள்

2) சிவந்த கன்னங்கள் மற்றும் முகம்

3) பற்கள் வளர்கிற பக்கம் உள்ள காதுகளை தேய்த்து கொண்டே இருப்பார்கள்

4) எச்சில் அதிகமாக வழிதல்

5) இரவு நேரங்களில் அதிகமாக நடப்பார்கள், அத்துடன் நிலைகொள்ளாமல் இருப்பார்கள்

6) சீரற்ற உணவு

7) ஈறுகளை தேய்த்தல், கடித்தல், மெல்லுதல் அல்லது சப்புதல்.

8) சில சமயம் காய்ச்சல் மற்றும் வயிற்று போக்கு கூட ஏற்படலாம். ஆனால், பற்களின் வளர்ச்சி உங்கள் குழந்தையின் உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்த கூடாது. இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

சிகிச்சைகள்

பல குழந்தைகள், பற்கள் வளர்ச்சியின் போது, லேசான அறிகுறிகள் வெளிப்படுத்துவார்கள்; அல்லது அறிகுறிகளே வெளிப்படுத்த மாட்டார்கள். இவர்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை.

ஆனால் அதிக அறிகுறிகள் வெளிப்படுத்துபவர்களுக்கு இது கண்டிப்பாக பயன்படும்.

பொது ஆலோசனை

மென்மையாக, பாதிக்கப்பட்ட ஈறுகளில் உங்கள் விரலை கொண்டு தேய்த்தால் வலி சிறிது குறையும். பல குழந்தைகளுக்கு குளிச்சியாக ஏதாவது கடித்தால் அல்லது சாப்பிட்டால் நன்றாக உணருவார்கள். இவர்களுக்கு குளிர்ச்சியான பழங்கள் அல்லது காய்கறிகள் கொடுக்கலாம். ஆனால் பிஸ்கட்டை தவிர்த்திடுங்கள் 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon