Link copied!
Sign in / Sign up
1
Shares

குழந்தை வளர்ப்பில் நீங்கள் செய்யும் மிகப்பெரிய 10 தவறுகள்..!

குழந்தை வளர்ப்பை மிக மிக எளிதாகக் கடந்து போய், செயற்கரிய செயல்கள் புரிந்து சாதனை படைத்தார்கள், முந்தைய தலைமுறை அன்னைகள்; ஆனால், இன்றைய கால அம்மாக்களுக்கு, குழந்தையை எப்படிக் குளிப்பாட்டுவது என்பதில் இருந்து, அவர்கள் அழாமல், சோறூட்டுவது வரை என அனைத்திலும் மிகப்பெரிய தடுமாற்றங்கள். இதற்கு என்ன காரணம்? இதனை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும், குழந்தைகள் அழாமல் எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று அன்னையர் மனதில் பல கேள்விகள்..! இந்தக் கேள்விகளுக்கு விடை கூறும் வகையில் ஏற்கனவே ஒரு பதிப்பை வழங்கியுள்ளோம்..!

இந்த பதிப்பில் குழந்தைகள் பிறந்தது முதல் அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டும் வரை, குழந்தைகளை வளர்ப்பதில் நாம் கடைபிடிக்கும் தவறான பழக்கவழக்கங்கள் பற்றி இந்த பதிப்பில் படித்தறிவோம், அன்னையர்களே!

நாம் கடைபிடிக்கும் தவறான பழக்க வழக்கங்கள்..!

1. குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும்; வேறு எப்பொருளும்எக்காரணம் கொண்டும் ஊட்டுதல் கூடாது.

2. குழந்தை பிறந்தவுடன், சில குழந்தைகளில் மார்பகத்தில் பால்கட்டி தடித்திருக்கும்; இக்கட்டியை குழந்தை வீறிட்டு, முகம் சிவக்க அழுவதையும் பொருட்படுத்தாது, நசுக்கி பாலை வெளியேற்றும் பழக்கம் நல்லதல்ல; மருத்துவரின் தகுந்த ஆலோசனை பெற்று செயல்படுவது அவசியம்.

3. பிறந்த குழந்தை தொடர்ந்து அழுவதற்கு காரணமாக ‘உரம் விழுந்தி ருக்கிறது’ என எண்ணி ‘உரம் எடுத்தல்’ என்று செய்கிறார்கள்; இது மிகவும் தவறான பழக்கம்., இப்படியொரு ‘நோய் நிலை’ இல்லை.

4. குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், தொக்கம் எடுக்கிறார்கள்; அப்படி ஒன்றுமே கிடையாது. குழந்தையின் வயிற்றுப்போக்கின் காரணம் என்னவென்று அறிந்து, அதற்கான தகுந்த வைத்தியம் அளிக்க வேண்டுமே தவிர, தொக்கம் எடுத்தல் கூடாது-இதனால், சில சமயம் ஏதேனும் விபரீதம் ஏற்படக் கூடும். குழந்தையின் பேதியை உடனடியாக நிறுத்த மாத்திரையை உபயோகிக்கக் கூடாது. 

5. மேலும் குழந்தையின் வயிற்றில் ஏதோவொரு பொருள் ஒதுங்கியுள்ளது என ‘தொக்கம் எடுத்தல்’ என்பதை செய்வது, குடல் ஏற்றம் என்றும் ‘குடல் தட்டல்’ என்றும் செய்வது தவிர்க்கப்பட வேண்டியது.

6. சில குழந்தைகளில் பிறந்த சில மாதங்களுக்கு தொப்புள் கொடி, சிறிது வெளியே தள்ளிக் கொண்டிருக்கும்; அந்தக்கொடியை அமுக்கி காசினை வைத்துக்கட்டும் பழக்கம் கூடவே கூடாது; இதற்கு பதிலாக தொப்புளைச் சுற்றியுள்ள பகுதியில் விரலை வைத்து, மெதுவாக சிறிது அமுக்கிவிடலாம்.

7. கொமஞ்சான் புகை, சாம்பிராணி போன்றவற்றை போடுவதால், குழந்தைகளில் சிலருக்கு ஒவ்வாமை அதாவது அலர்ஜி ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படும் வாய்ப்புண்டு. இவை போடுவது என்பது அவசியமற்ற ஒன்று; இதனால் ஒரு பயனுமில்லை.

8. சில பெரியவர்கள், குழந்தைகளின் மூக்கில் ஊதி சளியை வெளியே எடுக்க முயல்கிறார்கள்; இது மிகவும் தவறான பழக்கம். இதனால், இப்பெரியவர்களின் வாயிலுள்ள நுண்கிருமிகள் மிக எளிதில் குழந்தைகளுக்குப் பரவும் அபயமுண்டு.

9. குழந்தைகளை தலைக்குக் குளிக்க வைக்குமுன், அதன் தலையில் எண்ணெய் தடவும் பழக்கம் நம்மிடையே உள்ளது. இதனால் எண்ணையானது தண்ணீருடன் முகத்தில் இறங்கி மூக்குத்துவாரம் அருகே வருகையில், மூக்கு அனிச்சையாக, எண்ணெய் கலந்த நீரை உறிஞ்சி உள்ளே இழுத்து விடுகிறது. இதனால் குழந்தைகளுக்கு சளி, நிமோனியா போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது.

10. குழந்தைகளின் தோலில் சில சமயம் நுண்கிருமிகளின் பாதிப்பால் சிறு சிறு சீழ் வைத்த பரு போன்று கூட்டாக ஏற்படுவதை ‘அக்கி’ என்று சொல்லி, அதைக்குணப்படுத்த அக்கி எழுதுவதாக நம்மில் பலர் நம்புகிறார்கள். இந்த அக்கி எனும் நோயானது தகுந்த மருந்தை உட்கொண்டாலே ஒழிய, வெறுமனே அக்கி எழுதுவதால் போய் விடாது.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon