Link copied!
Sign in / Sign up
15
Shares

குழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

குழந்தைகளுக்கு பசி என்றால் கூட அதை பெற்றோர் தான் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் செய்கை மொழியை எளிதில் புரிந்து கொள்ள இயலாது. அழுகையும், சிரிப்புமே குழந்தையின் அழகிய மொழிகள். அதனை உணர்ந்து குழந்தைகளை வளர்ப்பது என்பது பெற்றோருக்கே உண்டான தனிக்கலை. குழந்தைகளின் செயல்படுகள் புரியாமல் சில நேரங்களில் தாய்மார்கள் எரிச்சல் அடைவதும் உண்டு. இங்கு குழந்தைகளை எப்படி கையாள வேண்டும் என்பதை பற்றி  பார்க்கலாம்.

1 கொஞ்சுதல்

குழந்தைகள் முதலில் விரும்புவது தாயின் அரவணைப்பையும், அருகாமையையும் தான். அந்த கதகதப்பு கிடைக்காத பட்சத்தில் அதற்காகவே அழுகையை தொடங்குகிறார்கள். எனவே குழந்தைகள் அழும் போது அவர்களை தூக்கி கொஞ்சினால் குழந்தைகள் உடனே அழுகையை நிறுத்திவிடுவார்கள். அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு உணவூட்டுதல், தாலாட்டதல், மசாஜ் அல்லது குளிக்க வைக்கவோ செய்யலாம்.

2 தூக்குதல்

குழந்தையைத் தூக்கும்போது முதுகுப் புறமாக அதிகமாகப் பிடித்துத் தூக்கக்கூடாது, அது குழந்தையின் தண்டுவடத்தைப் பாதிக்கும் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் உண்மையில்லை. பின்னால் பிடித்துத் தூக்குவது குழந்தையின் ரிப்ளெக்ஸ்' திறனை மேம்படுத்துகிறது. பின்புற மற்றும் கழுத்துத் தசைகளையும், தண்டுவடத்துக்குத் துணையாக உள்ள தசைகளையும் வலுப்படுத்துகிறது

3 பாலூட்டுதல்

குழந்தைக்குப் பாலூட்டும்போது அதை மார்பகத்தை நோக்கி அழுத்த வேண்டாம். அப்போது குழந்தை அதன் இயல்பின்படி தனது தலையைப் பின்னோக்கித் தள்ளும். எனவே கைகளில் லேசாக ஏந்தி அதற்கு ஏற்ற வகையில் பாலூட்டுவதே சிறப்பானது. குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதையும் தடுக்கும். ஒரு சிலர் படுத்துக்கொண்டே பாலூட்டுவார்கள். இது சில சமயங்களில் ஆபத்தை ஏற்படுத்தும்.

4 வெதுவெதுப்பான நீர்

இளந்தாய்மார்கள் குழந்தையை எப்படி குளிப்பாட்டுவது என்று தெரியாமல் திகைத்துப் போகிறார்கள். அந்நேரத்தில் குழந்தை அழுதால் என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறிப் போகிறார்கள். பெரியவர்கள் அல்லது கணவரின் துணையோடு குழந்தையை குளிப்பாட்டலாம். எப்பொழுதுமே வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்ட வேண்டும். குளித்த பின் மெல்லிய உலர்ந்த துணியை பயன்படுத்தி நன்றாக துடைத்து எடுப்பது நல்லது.

5 ஆடைகள்

குழந்தைகளுக்கு காற்றோட்டமான, மெல்லிய துணி ஆடைகளை அணிவிக்கலாம். அது குழந்தையின் இயல்பான உடல் வெப்பநிலையைப் பராமரிக்க உதவுவதுடன், புற வெப்பநிலையிலிருந்தும் பாதுகாக்கும் குழந்தையின் இடுப்பு ஆடையை அடிக்கடி மாற்றத் தவறுவதால் நோய்த் தொற்று ஏற்படலாம். குழந்தையின் சருமத்தைச் சுத்தமாகவும், உலர்வாகவும், வாசனையற்றும் வைத்துக்கொள்வது முக்கியம். அது நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கும்.

6 தட்டிக் கொடுப்பது

குழந்தையை தூங்கவைக்க ஒரு சிலர் மிகவும் சிரமப்படுவார்கள். வெளியே வேடிக்கை காட்டுவது, காரில் அழைத்துச் செல்வது என பணத்தையும், நேரத்தையும் வீணாக்குவார்கள். அது போன்ற தேவையற்ற செயல்களை தவிர்த்து, குழந்தையை அதன் சக்கர நாற்காலியில் வைத்து மெதுவாக உருட்டலாம். அப்போது ஏற்படும் மெல்லிய அதிர்வு, நகர்வுக்குக் குழந்தை பழகி தூங்கத் தொடங்கி விடும். குழந்தையின் நெற்றி, நெஞ்சு அல்லது பின்புறத்தில் மெதுவாகத் தட்டுவது ஒரு தூண்டலாகச் செயல்பட்டு குழந்தையைத் தூக்கத்தில் ஆழ்த்துகிறது. அப்போது எழும் ஓசை நேர்மறை பலனைத் தருகிறதாம்.

7 முத்தம்

கு ழந்தைக்கு காய்ச்சல் அடிப்பதை உணர தொட்டுப் பார்க்காமல், குழந்தையின் கழுத்தின் பின்புறம் முத்தமிடுவதன்மூலம் அதன் உடல் வெப்பநிலையைத் துல்லியமாக அறியலாம். உடல் சூடாக இருந்தால் நனைத்துப் பிழிந்த துணியை குழந்தையின் தலையில் போடுவதன் மூலம், மருத்துவச் சிகிச்சை அளிக்கும்வரை அதன் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும். பின்னர் குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon