Link copied!
Sign in / Sign up
4
Shares

குழந்தை வளர்ப்பில் சிறப்பாக செயல்பட்ட 5 பாலிவுட் தம்பதிகள்

சினிமா துறையில் இருப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. எப்போதும் ஊடகங்களின் கண்காணிப்பிலேயே இருப்பார்கள். இங்கே, ஊடகங்களின் பார்வை மற்றும் புகழ் குழந்தைகளை பாதிக்காமல், குழந்தை வளர்ப்பில் சிறப்பாக செயல்பட்ட 5 பாலிவுட் தம்பதிகளை பார்ப்போம்.

1 ட்விங்கிள் கன்னா மற்றும் அக்ஷய் குமார்

ட்விங்கிள் கன்னா தனது நகைச்சுவை திறனுக்கு பெயர் போனவர். மேலும், அக்ஷய் குமார் பாலிவுட்டின் முன்னணி நடிகர். இவர்கள் தங்கள் குழந்தை வளர்ப்பு முறை பற்றி பல நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறார்கள். இவர்கள், குழந்தைகளுடன் அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பேசுகிறார்கள். குழந்தைகள் பெற்றோரிடம் ஏதாவது சொல்ல விரும்பினால், எந்த தயக்கமும் இருக்க கூடாது என்ற காரணத்தால் இதை செய்கிறார்கள்.

குழந்தைகள் பெற்றோரிடம் பேச சௌகரியமாக உணர்வது குழந்தை வளர்ப்பில் கிடைத்த ஒரு வெற்றியே. மேலும், இது குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே ஒரு நல்ல பிணைப்பை ஏற்படுத்துகிறது.

2 நீத்து மற்றும் ரிஷி கபூர்

இவர்களின் இளமை கால காதல் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இவர்கள் கூட்டாக சேர்ந்து குழந்தை வளர்ப்பில் ஒரு சிறந்த அணியாக செயல்பட்டார்கள். ஒருவரால் குழந்தைக்கு செய்ய முடியாத ஒரு விஷயத்தை மற்றொருவர் செய்தார். ஆரம்பத்தில் ரிஷியால் தனது பிள்ளைகளிடம் நட்புடன் பழக முடியவில்லை. ஆனால், நீத்து தலையிட்டு அதை சரி செய்தார். நீத்து அவர் குழந்தைகளுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்தார். ரிஷியின் நடத்தைக்கு எதிர்மறையாக நீத்து அமைதியாக சாந்தமாக செயல்பட்டார். ஒரு தம்பதியாக இருவரும் குழந்தை வளர்ப்பில் சிறப்பாக செயல்பட்டனர்.

3 சுசன் மற்றும் ஹ்ரிதிக் ரோஷன்

என்னத்தான் இவர்கள் சமீபத்தில் விவாகரத்து பெற்றாலும், இவர்களின் இரண்டு பசங்களுக்காக இவர்கள் இருவரும் இன்னும் நட்புடன் இருக்கிறார்கள். இவர்களின் விவாகரத்து இவர்கள் குழந்தையை பாதிக்காத வகையில் பார்த்துக்கொண்டார்கள்.

இவர்கள் ஒன்றாக இருந்த போதும், குழந்தை வளர்ப்பில் சிறப்பாக செயல்பட்டார்கள் . குழந்தைகள் மீது எதையும் திணிக்காமல், அவர்களுக்கு ஏற்றார் போல் இவர்கள் நடந்து கொண்டார்கள். அது படிப்பு விஷயமாக இருந்தாலும் சரி, அல்லது மதம் தொடர்பான விஷயமாக இருந்தாலும் சரி குழந்தைகளின் விருப்பத்திற்கே விட்டுவிட்டார்கள். இதனால் இக்குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல பொறுப்புள்ள குடிமகன்களாக வளருவார்கள்.

4 கஜோல் மற்றும் அஜய் தேவ்கான்

இவர்கள், தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை தனியாக வைத்திருக்க சிறப்பாக செயல்பட்டார்கள். குழந்தை வளர்ப்பு என்று வரும் போது, கஜோல் மிகவும் கண்டிப்பானவர். அதிகமாக செல்லம் கொடுத்தால் குழந்தைகள் கெட்டு போய் விடுவார்கள் என்பது இவரது நம்பிக்கை. இவரை பொறுத்தவரை, குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே சரி எது தப்பு எது என்ற வேறுபாட்டை சொல்லிக்கொடுக்க வேண்டும். இதனாலேயே இவர் குழந்தைகளிடம் கண்டிப்பு காட்டுகிறார். ஆனால், இவருக்கு எதிர்மறையாக, அஜய் தேவ்கான் கண்டிப்பானவர் கிடையாது. இந்த ஜோடி பொருத்தம் கச்சிதமாக உள்ளது என்கிறார் கஜோல்.

5 கரீனா கபூர் மற்றும் சைஃப் அலி கான்

இவர்களின் திருமணம் ஜாதி மதம் என அனைத்து கோட்பாடுகளையும் கடந்து நடந்தது. ஆனால் சைஃப் அலி கானிற்கு இது முதல் திருமணம் இல்லை. என்றாலும், கரீனா கபூர், சைஃப் அலி கானின் முதல் திருமணத்தில் வந்த குழந்தைகளிடம் நன்றாக ஒன்றி விட்டார். அதுமட்டுமில்லாமல், சைஃப் அலி கானின் மகள் கரீனா கபூருடன் நெருக்கமாக உள்ளார். சமீபத்தில் இவர்களுக்கு பிறந்த மகனின் பெயரால் பல சர்ச்சைகள் எழுந்தாலும், இந்த தம்பதிகள் வலுவாக நின்றார்கள். கண்டிப்பாக, இன்னும் சில வருடங்களில், குழந்தை வளர்ப்பை இவர்கள் அடுத்த நிலைக்கு எடுத்து செல்வார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon