Link copied!
Sign in / Sign up
6
Shares

குழந்தை வளர்ப்பில் பெற்றோர் கட்டாயம் செய்ய கூடாதவை

குழந்தையை பெற்ற நாளில் இருந்தே குழந்தையை சரியான வழியில் நல்ல பிள்ளையாக வளர்க்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். அவர்களை சரியாக வளர்க்க பலவற்றை செய்வார்கள். ஆனால், அவர்கள்  செய்யும் சில செயல்கள் குழந்தைகளை பாதிக்கும், அவர்களையும் செய்ய தூண்டும் என்பதை மறந்து விடுவார்கள்.

மனைவியை அதட்டுதல், லஞ்சம் கொடுத்தல், வாங்குதல், வசைப் பாடுவது, ஏளனம் செய்வது, மதிப்பு அளிக்க மறுப்பது, குற்றம் செய்வது, நியாயத்தை மறைப்பது என பெற்றோர் சிறிய, பெரிய அளவில் செய்யும் எல்லா விஷயங்களும் குழந்தைகளின் மனதில் பதியும். இவற்றை கருத்தில் கொண்டு பெற்றோர் செயல்பட வேண்டும். இங்கு குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யக் கூடாதவற்றை பார்க்கலாம்.

1 சத்தம் போடுதல்

அதட்டுகிறேன், கட்டுப்படுத்துகிறேன் என தேவை இருந்தாலும், இல்லாமல் போனாலும் கத்தி சத்தமாக பேசுவதை தவிர்க்க வேண்டும். இது, குழந்தை பருவத்திலேயே அவர்கள் மனதில் ஆழ பதிந்து. அடக்குமுறை பழக்கம் வளர காரணம் ஆகிவிடும்.

2 விளக்கம்

குழந்தைகள் இடம், பெரிதாக புரிதல் இருக்காது. எனவே, அவர்கள் ஏதாவது செய்தால் சுருக்கமாக, எளிதாக, எளிமையாக புரியும்படி விளக்கம் அளியுங்கள். நீங்கள் விரிவாக விளக்கம் அளித்தாலும் அது அவர்களுக்கு புரியப் போவதில்லை.

3 இலஞ்சம்

இலஞ்சம் கொடுப்பதும் தவறு, இலஞ்சம் வாங்குவதும் தவறு. இதை உங்கள் குழந்தைகள் முன்னிலையில் செய்வது மிகப்பெரிய தவறு.

4 கடைப்பிடிக்க தவறுதல்

நீங்கள் சொல்லும் வார்த்தைகளை, அல்லது நீங்கள் உங்கள் உங்கள் குழந்தைக்கு புகட்டும் பாடங்கள், நன்னெறிகளை நீங்களே கடைப்பிடிக்காமல் இருப்பது தவறு.

5 முரண்பாடு

ஊருக்கு ஒரு பேச்சு, எனக்கு ஒரு பேச்சு என ஊரு உபதேசம் செய்துவிட்டு, நீங்கள் வேறுவிதமாக வாழ்க்கை நடத்துவது தவறு.

6 கீழ்ப்படிதல்

பெரியவர்களுக்கு கீழ்ப்படிந்து போகாமல் இருப்பதும் தவறு, மற்றவர்களை கீழ்ப்படிய வற்புறுத்துவதும் தவறு.

7 ஒழுங்குமுறை

இப்படி தான் இருக்க வேண்டும், இதை இப்படி தான் செய்ய வேண்டும், என்ற ஒழுங்கு முறைகளை சீரான முறையில் பின்பற்ற வேண்டும். குழந்தைகளுக்கு முன் ஒரு மாதிரியும், அவர்கள் சென்ற பின் ஒரு மாதிரியும் நடந்துக் கொள்ள கூடாது. 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon