Link copied!
Sign in / Sign up
33
Shares

குழந்தை வளர்ச்சி : அற்புதமான புகைப்பட விளக்கம்

குழந்தையின் வளர்ச்சி என்பது ஒரு அழகிய நிகழ்வு. பெரும்பாலும் அவர்களது வளர்ச்சி பெற்றோருக்கு தெரிவதே இல்லை. நேற்று தான் என் பிள்ளை பிறந்தது போல் இருக்கிறது. இப்போது அவர்களுக்கு திருமண வயதாகிவிட்டது என்பது அதிக அளவிலான பெற்றோரின் கருத்தாக இருக்கிறது. குழந்தைகளை உங்கள் கைகளில் சில நாட்கள் தூக்கி சென்றிருப்பீர்கள், பின் அவர்கள் தவழ துவங்கி இருப்பார்கள். பின் மெதுவாக நடக்க துவங்கி, பின் உங்களுக்கு போக்கு காட்டி ஓடவும் துவங்கி விடுவார்கள். அவற்றை அணுஅணுவாக நீங்கள் ரசித்தாலும், பெற்றோர்க்கு குழந்தையின் வளர்ச்சி தெரிவதே இல்லை. இங்கு குழந்தையின் வளர்ச்சியை அற்புதமான  புகைப்பட விளக்கத்தோடு பார்க்கலாம். 

1 முதல் 3 மாதத்தில்

உங்கள் சிறிய குழந்தை தூங்குவது மற்றும் பால் குடிப்பதை தவிர வேறு என்ன செய்யும் என சிந்திருக்கிறீர்களா? கவனிக்க துவங்குங்கள். சில அழகிய சிறிய மாற்றங்களை காண முடியும். அவை மிகப் பெரியவையாக இல்லை என்றாலும், உங்களுக்கு  ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். குழந்தை பார்ப்பது, குளிப்பதை புகைப்படங்களாக சேமியுங்கள்.

4 முதல் 6 மாதத்தில்

இப்போது சில மாதங்களை தாய்ப்பால் குடித்து கொண்டிருப்பதால், உங்கள் குழந்தை பெரிதாக வளர்ந்து வலிமையடைந்திருக்கும். இப்போது உங்கள் குழந்தைக்கு மசித்த உணவுகள், மசித்த பழங்கள், வேக வைத்து மசிக்கப்பட்ட காய்கள் போன்றவற்றை கொடுக்க துவங்கலாம். குழந்தைகளும் இதை விரும்புவார்கள். இப்போது உங்கள் குழந்தை அனைத்தையும் கவனிக்க துவக்கி இருப்பார்கள். சிறிய பிஞ்சு கை, மற்றும் கால்களை அசைக்க துவங்கி, உதைக்கவும், உருளவும் துவங்கி இருப்பார்கள்.

7 முதல் 9 மாதத்தில்

இப்போது உங்கள் குழந்தை எந்த பிடிமானமும் இல்லாமல் எழுந்து உட்கார துவங்கி இருப்பார்கள். அவர்கள் அழ, சிரிக்க, உணர, வண்ணங்களை வித்தியாசப்படுத்தி பார்க்க என அனைத்தையும் செய்ய துவங்கி இருப்பார்கள். 9 மாதங்களின் முடிவில் உங்கள் குழந்தை மென்மையான பாதங்களில் தவழ துவங்கி இருப்பார்கள். இப்போது குழந்தைகள் மறைத்து வைத்திருக்கும் பொருட்களை எடுக்கவும், சில தினசரி பழக்கங்களை கற்றுக் கொள்ளவும் துவங்கி இருப்பார்கள்.

10 முதல் 12 மாதத்தில்

புதிய பற்கள் முளைக்க துவங்கி இருக்கும். அவர்கள் இப்போது ஓரிரு வார்த்தைகளை உச்சரிக்க துவங்கி இருப்பார்கள். நீங்கள் பேசுபவற்றை எல்லாம் கவனித்து பேச முயற்சிப்பார்கள். அவர்களது சிறிய நாக்கை சுழற்றி பேச முயற்சிப்பது பார்ப்பவரை கவரும் விதமாக இருக்கும். உங்களையும், உங்கள் கணவரையும் குழந்தையால் கூட்டத்தில் அடையாளம் காண முடியும். இப்போது அவர்களால் பொம்மைகளை வைத்து விளையாடவும் முடியும்.

இப்போது உங்கள் குழந்தை முழுமையாக வளர்ந்திருக்கும். விரைவில் உங்கள் குழந்தை அழகிய பைகளை மாட்டிக் கொண்டு பள்ளி சென்று விடுவார்கள். இப்போதைய அருமையான தருணங்களை புகைப்படம் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon