குழந்தை உரிய நேரத்துக்கு முன்னர் பிறந்தால் என்ன செய்வார்கள் தெரியுமா?
ஒரு சில குழந்தைகள் பிறந்தவுடன்... அவசர அவசரமாக அக்குழந்தையை வேறு ஒரு பிரிவுக்கு அழைத்து செல்வார்கள். அங்கே நடப்பதை தான் NICU என்றழைக்கப்படுகிறது. இங்கே பிறந்த குழந்தைகளுக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகள் அளிக்க குழந்தைகள் வல்லுநர்கள் கூடி இருப்பர். இந்த NICUவை குழந்தைகளின் சிறப்பு கவனப்பிரிவு என்றும் அழைப்பர்.

எதனால் இந்த NICU குழந்தைகளுக்கு தேவை?
1. குழந்தை உரிய நேரத்துக்கு முன்னர் பிறத்தல்
2. பிரசவத்தின் போது உண்டாகும் சிரமங்கள்
3. குழந்தையின் உடல்நல வலு குறைபாடு
இருப்பின் குழந்தை NICUவில் அனுமதிக்கப்படும்.
குழந்தை மிகவும் இளம் நிலையில் இருந்தால் மட்டுமே இந்த NICUவிற்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

NICUஇல் என்ன நடக்கிறது?
NICU உள்ளே செல்வதென்பது, ஏதோ வேற்று கிரகத்திற்குள் நுழைவது போன்ற உணர்வை தருகிறது. இந்த அறையின் உள்ளே நாம் நுழைந்தால்... அனைவரும் மிகவும் பணியின் நிமித்தம் அங்கும் இங்கும் அலைந்துக்கொண்டிருப்பார். உள்ளே கண்ணாடி திரையில் பீப் சத்தம் கேட்டபடி இருக்கும்.
இந்த அறையில் உங்கள் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவானது சிறப்பு அட்டவணை நேரப்படி அளிக்கப்படுகிறது. அதுவும், உங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் பிரச்சனையை பொறுத்து அமைகிறது.

ஓர் உதாரணத்திற்கு,
குழந்தையானது குறிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னே பிறந்திருக்குமெனில், அதற்கு உணவு அளிப்பது கொஞ்சம் கடினமான விஷயம் தான். அதனால், அக்குழந்தைக்கு வாயிலும், வயிற்றிலும் ட்யூப் ஒன்று மாட்டப்படும். அதிக கலோரி கொண்ட உணவுகள் அக்குழந்தைக்கு தரவும்படுகிறது.
NICUவின் மற்றுமோர் முக்கியமான அங்கம் மருத்துவ வசதி. உங்கள் குழந்தைக்கு எதிர்ப்பு மருந்துகள் சுவாசிக்கவும், இதய துடிப்பு சீராகவும் இருக்க தேவைப்படுகிறது.

இரத்த பரிசோதனையும், சிறுநீர் சோதனையும் சரியான கால அளவில் எடுக்கப்படுகிறது. X-கதிர் பரிசோதனை மற்றும் அலட்ரா சத்த நிலையும் கூட சோதிக்கப்படுகிறது.
இந்த NICUவில் வீட்டில் பார்த்துக்கொள்வது போல் அனைத்து வித வசதிகளையும் அக்குழந்தைக்கு மிகவும் கவனத்துடன் வழங்குகிறார்கள். அங்கே இருக்கும் செவிலியர்கள் கண்ணாடி திரையில் காணப்படும் அளவுகளையும், சோதனை முடிவுகளையும் அடிக்கடி கண்காணித்த வண்ணம் இருப்பார்கள்.
NICUவில் பெற்றோர் அனுமதிக்கப்படுவாரா?
பெற்றோர்கள் தன் பிள்ளைகளுடன் NICUவில் தன் நேரத்தை செலவிடலாம். ஆனால், குறைவான நபர்களே உள்ளே அனுமதிக்கப்படுவர். பெற்றோர்கள் பெரும்பாலும் குழந்தையுடன் இருக்க முடிவதால் NICU சமூக பணியாளர்கள் அவர்களுக்கு தேவையான பணிவிடையையும் சேர்த்து செய்கின்றனர்.

