Link copied!
Sign in / Sign up
12
Shares

குழந்தை பிறப்புக்குப் பின்னான மாதவிடாய் காலம் எவ்வளவு???

குழந்தை கருத்தரித்த அந்த நொடி முதல் உங்கள் மாதவிடாய் நிகழ்வுக்கு ஒரு இடைவெளி கிடைத்திருக்கும். பின் கர்ப்பகாலம் முடிந்து, உங்கள் குழந்தை பிறந்தபின் நின்று போன மாதவிடாய் மீண்டும் துவங்கும். இப்படி குழந்தை பிறப்புக்கு பின் ஏற்படும் மாதவிடாய் எத்தனை காலம் நீடித்திருக்கும் என்ற சந்தேகம் பல பெண்களின் மத்தியில் நிலவி  வருகிறது. அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையிலேயே இந்த பதிப்பு..!

குழந்தை பிறந்தபின் கருவறையின் சுவர் 10 மாதத்திற்கும் சேர்த்து மாதவிடாய் உதிரப்போக்கினை நிகழ்த்தும். குழந்தை பிறப்பினால், அறுவை சிகிச்சை முடிந்திருக்கும் இந்த சூழலில் உதிரப்போக்கு ஏற்படுவது என்பது மிகவும் கொடுமையான காலகட்டமே! அறுவை சிகிச்சையினால், உண்டான வலி போதாதென்று உதிரப்போக்கும் வலியை ஏற்படுத்தலாம். பெண்களுக்கு சோதனையான காலகட்டம்..!

கர்ப்பகாலத்தில் இந்த தொந்தரவு ஏதும் இல்லாது 9 மாதங்களை கடந்த பின், மீண்டும் உதிரப்போக்கு ஏற்படுகையில் பெண்கள் மனம் கொள்ளும் வேதனைக்கு அளவே இல்லை. இது போதாதென்று குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதும் இந்த காலகட்டமே! மேலே பால், கீழே உதிரம் என்று உடல் எங்கும் திரவ ஓட்டம் ஏற்படுகிறது.

எத்தனை நாள்..?

பிரசவத்திற்கு பின் ஏற்படும் உதிரப்போக்கு, 30 நாட்கள் அல்லது சில பெண்களுக்கு 8 வாரங்கள் வரை நீடிக்கலாம்.! பிரசவம் முடித்த பின்னான இரத்தப்போக்கு சிவப்பு அல்லது அடர்ந்த நிறத்தில் இருக்கும்; பின் நாட்கள் செல்ல செல்ல பிரௌன் மற்றும் ஆரஞ்சு வண்ணத்திற்கு மாறலாம்.

ஆகையால், இந்த காலகட்டத்தில் இழக்கும் இரத்தப்போக்கிற்கு இணையாக இருக்கும் வகையில், இரத்தம் சுரக்க உதவும் உணவுகளை அதிகம் உட்கொள்வது நல்லது. மேலும் இரத்தப்போக்கு ஆடைகளை நாசம் செய்திடா வண்ணம் சரியான மாதவிடாய் நாப்கின்களை பயன்படுத்த வேண்டும். எனவே, போதுமான அளவு நாப்கின்கள் உங்களிடம் இருப்பில் உள்ளதை? என சோதித்து, வாங்கி வைத்துக் கொள்ளவும்...

அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டாலும் பயம் வேண்டாம். அளவுக்கு அதிகமான இரத்தம் குறிப்பிட்ட நாளுக்கு மேலாக கசிந்தால், மருத்துவ ஆலோசனை பெறவும். அசாதாரண நிலை ஏற்படினும் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

இது வலிமிகுந்த சோதனையான காலகட்டம் பெண்களே! இதனை சோதனையில் வாடி தொலையாமல், சாதனையாக்கி வாழ்வில் முன்னேற முயலுங்கள்.. சோதனையை சாதனையாக்க வாழ்த்துக்கள்..!

என் இனிய தமிழ் தோழிகளே! நீங்கள் மாதவிடாய் நாட்களில் உபயோகிப்பது எதுவாயினும், அது உங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியம் அளிக்கிறதா என்று எண்ணிப்பாருங்கள்..! உங்களுக்கே சரியான பதில் கிடைக்கும்..! நீங்கள் பயன்படுத்துவதோ துணிகளோ நாப்கின்களோ அல்லது கப்களோ எதுவாயினும் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றி மாற்றி பயன்படுத்தவும்..! சுற்றுச்சூழல் கெடாவண்ணம் அப்புறப்படுத்தவும்.! பெரும்பாலும் நல்ல பாதுகாப்பான நாப்கின்களை உபயோகிப்பது நல்லது..! அதுவே, எளிதானது, பொருளாதாரத்திற்கும் ஏற்றது..! 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon