Link copied!
Sign in / Sign up
34
Shares

குழந்தை பிறப்பை பற்றி உங்களுக்கு யாரும் சொல்லாத 7 விஷயங்கள்

நீங்கள் முதல் முறை தாயாக போகிறீர்கள் என்றால், பிறக்க போகும் உங்கள் குழந்தை உங்களுக்கு எண்ணிலடங்கா ஆச்சர்யங்களை கொண்டு வரும். நீங்கள் உங்கள் வீட்டில் தனிமையில் அல்லது அறுவை சிகிச்சை பிரிவு மேசையில் படுத்திருக்கிறீர்கள் என்பதை பொருட்படுத்த வேண்டியதில்லை, நீங்கள் உங்கள் குழந்தையை முதல் முறை பார்க்கும் போது ஏற்படும் அனுபவத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. என்னதான், அந்த சுகப்பிரசவ வலி மற்றும் வேதனைகளை தாங்கி கொண்டிருந்தாலும், அந்த இனிமையான தருணம் எப்போதும் திரும்ப கிடைக்காது. நீங்கள் குழந்தை பிறப்பை பற்றி, முதல் முறை தாயாகும் முன், தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்களை இங்கு பார்ப்போம்.

1 பிரசவத்திற்கென குறிக்கப்பட்ட தேதி சரியாக இராது

பெண்கள் எப்போதும் அவர்கள் பிரசவ தேதியை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். என்னதான் மனதில் மகிழ்வுடன் குழந்தையை எதிர் பார்த்தாலும், சில மாதங்களுக்கு இருந்த அசௌகரியம் சில நாள்களில் முடியப்போவதாகவும் உணர்வார்கள். இருப்பினும், உண்மை என்னவென்றால், 7 சதவீத பெண்கள் மட்டுமே தங்கள் சரியான தேதியில் குழந்தையை பிரசவிக்கின்றனர். எனவே, திட்டமிட்ட நாளில் உங்கள் குழந்தையை நீங்கள் பிரசவிக்கவிட்டால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

2 வலி தெரியாமல் இருக்க கொடுக்கப்படும் உணர்ச்சி இழப்பு மருந்து

பிரசவத்தின் போது வலி தெரியாமல் இருக்க கொடுக்கப்படும் மருந்து, உங்களை முழுவதும் உணர்ச்சி இலக்க செய்யாது. மேலும் இது பெண்களில் இடுப்பிற்கு கீழிருக்கும் பகுதிகளை மட்டுமே செயலிழக்க செய்யும். இது ஊசி மூலம் உங்கள் உடலில் செலுத்தப்படுகிறது. இதை உங்கள் உடலில் செலுத்துவதால், உங்களுக்கு பிரசவ வலி தெரியாது என்பது அர்த்தமல்ல. சில பெண்கள் தங்களின் கால்களில் சீரற்ற உணர்ச்சி இழப்பை பெறுகிறார்கள், சில பெண்கள் அதே உணர்வை வயிற்றிலும் பெறுகிறார்கள். உங்கள் குழந்தை பிறப்பின் போது ஏற்படும் வலியை குறைக்கவே, இந்த மருந்துகள் கொடுக்கப்படுகிறது.

3 உணர்விழக்க மருந்து கொடுக்கப்பட்ட பின் தண்ணீர் மற்றும் உணவை தவிர்க்க வேண்டும்

இது ஒரு கடினமான உண்மை, ஏனென்றால் குழந்தை பிறப்பிற்கென நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டி வரும், உணர்விழக்க மருந்துடனோ அல்லது இல்லாமலோ, வெறும் வயிற்றில் குழந்தை பிறப்பது என்பது கடினமான ஒன்று. எனவே, நீங்கள் உணர்விழக்க மருந்து பெற மருத்துவமனைக்கு செல்லும் முன் நல்ல உணவு எடுத்து கொள்ளுங்கள். சில மருத்துவமனைகளில் பிரசவ காலத்தில் போது சில சுவையுடைய ஐஸ் கட்டிகளை மெல்ல கொடுப்பார்கள். அவை மிக சிறிய அளவில் தெவிட்டுவதாய் இருக்கும்.

4 பிரசவத்தின் போது உடல் கழிவுகள் வெளியேறலாம்

இது போன்ற ஒரு மோசமான நிகழ்வு, அதிகப்படியான பெண்களுக்கு அவர்கள் பிரசவக்காலத்தில் நிகழ்வதுதான். இப்படி ஒரு நிகழ்வு உங்களுக்கு ஏற்பட்டால், அதை நினைத்து நீங்கள் சங்கடப்பட வேண்டியதியில்லை. அங்கு இருக்கும் செவிலியர்களுக்கு இது ஒன்றும் புது அனுபவம் கிடையாது.

5 குழந்தை வெளிவந்த பிறகும் பிரசவம் நிறுத்தப்படாது

குழந்தை வெளி வந்த பிறகும் நஞ்சுக்கொடியை வெளியேற்ற வேண்டியது அவசியம். அதுக்கு நீங்கள் கொஞ்சம் அதிகமான அழுத்தத்தை கொடுத்து, வெளியே தள்ள முயற்சிக்க வேண்டும். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், இது மிக விரைவாகவும் வலியற்றதாகவும் இருக்கும்.

6 குழந்தைகளை பார்க்க சகதியில் மூழ்கியதை போல காணப்படுவார்கள்

உங்கள் குழந்தையின் சருமத்தின் மேல் இருப்பவைகள் விழாது, அவர்கள் மேல் ஒட்டி கொண்டிருக்கும் பாலாடைக்கட்டி போன்ற பொருள் எப்போதும் நிரந்தரமாக இருப்பதல்ல. குழந்தையின் உடலில் காணப்படும், இந்த பாலாடைக்கட்டி போன்று வெள்ளை நிறத்தில் இருக்கும் இது வார்னிஸ் காசோசோஸ் என்று அழைக்கப்படுகிறது. இது கருப்பையில் குழந்தையின் தோலை பாதுகாக்க பயன்படுகிறது. நாற்பது வாரங்களுக்கு பின் பிறக்கும் குழந்தைகளுக்கு காணப்படுவது பொதுவானது.

7 உங்கள் குழந்தையின் தலை மற்றும் உடலில் அதிக அளவில் முடி காணப்படலாம்

உங்கள் குழந்தை ஒரு மனிதனைவிட குரங்குக்கு ஒப்பானதாக இருந்தால், ஆச்சரியப்பட வேண்டாம், அது இயற்கையானது. சில குழந்தைகள் அதிக முடியுடனும் காணப்படலாம். நீங்கள் அவர்களின் கைகளிலும், தோள்களிலும், பின்னால் கூட முடியை கவனிக்க முடியும். இந்த முடி அதிக கருமையுடனும் காணப்படும். இது காலப்போக்கில் மாறி விடக் கூடிய ஒன்று.

இது போன்ற தகவல்களை நாம் முன்பே தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இவை தக்க சமயத்தில் நமக்கு உதவிய இருக்கும். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon