Link copied!
Sign in / Sign up
1
Shares

குழந்தை பிறந்தபின் ஒல்லியாக காட்சியளிக்க அணியவேண்டிய ஆடைகள்

உங்கள் வாழ்க்கையின் புதிய பரிமாணம் இப்போது தொடங்கியிருக்கும், இந்த புதிய பரிமாணம் உங்கள் வாழ்க்கையின் மிகவும் அழகிய பகுதியாகும். தாய்மை உங்களிடம் தனிப்பட்ட முறையில் நிறைய மாற்றங்களை செய்திருக்கிறது. இது உங்கள் உடலிலும் பல தாக்கத்தை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தின் போது உங்கள் தோல் பிரகாசிப்பதோடு முடி வளர்ச்சியும் சிறப்பாய் இருக்கும். ஆனால், தற்போது அனைத்தும் மாறியிருக்கும். சில வேலைகளை செய்வதன் மூலம் அதிக சிரமமின்றி ஸ்டைலாக காட்சியளிக்க உதவும்.

1. ட்ராக் பேண்ட்ஸ் மற்றும் டி-சர்ட்

தினமும் உங்களுக்கான அலங்காரத்தை செய்துகொள்ள சிறிது நேரமில்லாமல் வேலை செய்ய வேண்டிய நாட்கள் நிறைய இருக்கும். ஆனால் இதை சமாளிக்க ஒரு எளியவழி இருக்கிறது: ஒரு ஜோடி நன்கு பொருந்தகூடிய காட்டன் ட்ராக் பேண்டுடன் ஒரு சாதாரண டி- சர்ட்டை அணிந்து அதற்கு மேல் குளிர்சட்டை போட்டால் ஸ்டைலாக காட்சியளிப்பார்கள்.

2. லெக்கின்ஸ். ஒரு டி-சர்ட், மேல்சட்டை

நீங்கள் மெலிதாக காட்சியளிக்க விரும்பினால் லெக்கின்ஸ் அதற்கு சிறந்த தேர்வாகும். இது உங்களின் கீழ்புறத்தை அழகாக காட்டுவதோடு உங்கள் உடலை மெலிதாகவும் காட்டும். அடர்நிற லெக்கின்ஸ்க்கு பொருத்தமாக மெல்லிய நிறத்தில் ஒரு டி-சர்ட் அணிந்து முடிந்தால் அதற்கு மேல் அடர்நிற மேல்சட்டை அணிவது அழகாக இருக்கும். கையை முடித்துவிட்டு பெரிய செயின் போடுவது இன்னும் சிறப்பு.

3. மிடி ஆடை

கர்ப்பத்திற்கு பின் நீங்கள் இந்த ஆடைகளை அணிய வெட்கப்படக்கூடாது. உங்கள் உடலை கச்சிதமாக காட்ட இதுபோன்ற ஆடைகளை தேர்வுசெய்வது நல்லது. கருப்பு நிற மிடியையோ அல்லது பிரிண்ட் செய்யப்பட்ட மிடியையோ அணிவது அழகாக இருக்கும். ஏ வடிவில் வெட்டபட்ட மிடிகளை விட நேராக வெட்டப்பட்ட மிடி உடலமைப்பை மெலிதாக காட்டும். பைகளோ அல்லது பெல்ட் வைத்த மிடிகள் ஸ்டைலாக இருக்கும்.

4. நீண்ட குர்தா மற்றும் பேண்ட்ஸ்

நீங்கள் குர்தா அணிவதை விரும்பினால் நீளமான குர்தா அணிவதை விட சிறிய குர்தாக்களை அணிவது சிறப்பு. நேராக வெட்டப்பட்ட குர்தாவில் மேலிருந்து கீழே வரை பட்டன்கள் வைத்த குர்தாக்களை உடுத்துங்கள். ஒருவேளை நீளமான குர்தாக்களை அணிய விரும்பினால் கணுக்கால் வரை நீண்ட குர்தாக்களை காட்டன் பேண்டுடன் அணிந்தால் அழகாக காட்சியளிப்பீர்கள்.

5. மின்னும் நீள பாவாடை

நீங்கள் இந்த தருணத்தில் சிறிய உடைகளை அணிய விரும்பாமல் இருக்கலாம். ஆனால், உங்களின் அலமாரியை நீளமான உடைகளை கொண்டு அலங்கரிக்கலாம். உங்களின் முட்டி வரை நீளமுள்ள இந்த ஆடைகள் விழாக்களுக்கும் அணிய ஏற்றது. ஒரு சாதாரண நாளில் நண்பர்களுடன் வெளியே செல்லவோ அல்லது சாப்பிட செல்லும்போதும் அணியலாம். இதற்கு பொருத்தமான காட்டன் சட்டைகளையோ அல்லது அழகிய டி-சர்ட்களையோ அணியலாம்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon