Link copied!
Sign in / Sign up
28
Shares

குழந்தை பெற்ற பின்னான, பிறப்புக் கட்டுப்பாட்டு முறைகள்..!

 
பெரும்பாலான தம்பதியர்ஒ ரு குழந்தை பிறந்தவுடன், குடும்பக் கட்டுப்பாடு அல்லது அடுத்த குழந்தை பிறப்பை தள்ளிப்போடுதல், என இம்மாதிரியான செயல்களை நாடுகின்றனர். இச்சமயத்தில், பிறப்புக் கட்டுப்பாட்டிற்காக நீங்கள் சில பொருட்களின் தேவையை உணர்கின்றீர்.
 
பிறப்புக் கட்டுப்பாடு பொருட்களில் அனைத்தும், எல்லாவகை மக்களுக்கும் ஒத்துப்போவதில்லை. முக்கியமாக பெண்களுக்கு இந்த வகை பொருட்களால் ஒவ்வாமை மற்றும் வேறு சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 
இந்த பதிப்பில், பிறப்புக் கட்டுப்பாட்டிற்கு பொருந்தக் கூடிய, சில தகவல்களை உங்களுக்காக, உங்களுடன் பகிர்கின்றோம். 
 
1. ஹார்மோன்கள்
 
 
பிறப்புக் கட்டுப்பாட்டினை, ஹார்மோன்கள் மூலம் நடைமுறைப்படுத்தலாம். நீங்கள் புதிய தாய்மாராய் இருந்தால், உங்களுக்கு தாய்ப்பால் சுரப்பு, ஆரோக்கியமாக இருந்தால், குழந்தை பெற்று 6 வாரங்களுக்குப் பிறகு இந்த ஹார்மோன்களை உபயோகிக்கலாம்; இல்லையேல் சிறிது மாத காலம், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தும் வரை எந்தவித ஹார்மோன்களையும் உபயோகிக்காமல் இருப்பது நல்லது. 
 
ஹார்மோன்களை மாத்திரை, மருந்துகள், ஊசி, கட்டுக்கள் (patch) மூலமாக செலுத்திக் கொள்ளலாம். ஊசி மூலம் தங்கள் செலுத்திக் கொள்ள விரும்பினால், 3 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த வகை ஹார்மோன்கள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்டிரான் போன்ற ஹார்மோன்கள் உருவாக்கத்தை தாமதப்படுத்தி, கருமுட்டை உருவாகி, வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும்.
 
2. காண்டம்
 
இது ஆண் மற்றும் பெண் இருபாலினருக்கும், ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டிருக்கும். இதை குழந்தை பிறப்பிற்குப் பின், உடனடியாகவும் பயன்படுத்தலாம். இது விந்து மற்றும் அண்டங்களைக் கட்டுப்படுத்தி, பிறப்புக் கட்டுப்பாட்டிற்கு உதவி புரியும்.
 
3. உதரவிதானக் கருவி (Diaphragm)
 
இது ஆண் விந்துக்கொல்லி மருந்தை உள்ளடக்கிய கருவி, இதனை பெண்ணின் பிறப்புறுப்பில் பொருத்துவதன் மூலம், விந்துக்களைக் கொன்று பிறப்புக் கட்டுப்பாட்டினை நல்கும்.இந்தக் கருவியை, பெண்ணின் பிறப்புறுப்புக்குப் பொருந்தும் வகையில், பொறுத்த வேண்டும்; இக்கருவியை குழந்தை பிறந்த, 6 வாரங்களில் பொருத்திக் கொள்ள வேண்டும்.
 
4. கர்ப்பப்பை வாய் தொப்பி (Cervical Cap)
 
இந்தக் கருவியும் மேற்கூறியதை போன்றதே! ஆனால், இதனை குழந்தை பிறந்த 10 வாரங்களில் பொருத்திக் கொள்ள வேண்டும்.
 
5. IUD (Intrauterine Device)
 
 
இந்த முறையில், பெண்ணின் கருப்பைக்குள் T வடிவ கருவியைப் பொருத்துவர்; அதன் மூலம், ஆண் விந்துக்கள் பெண் அண்டத்தை அடைவதை, ஆண் விந்துக்களைக் கொன்று இக்கருவி தடுக்கும். இக்கருவியை, குழந்தை பிறப்பு நிகழ்கையில், நடைபெறும் அறுவை சிகிச்சையின் போதே கருப்பைக்குள் பொருத்தி விடுவர். இது 3 -4 வருடங்களுக்கு குழந்தை பிறப்பை கட்டுப்படுத்தும்.
 
இது இரு வகைகளில் உள்ளது; ஒன்று காப்பர் T, மற்றோன்று ப்ரொஜஸ்டினை வெளியிட்டு பிறப்புக் கட்டுப்பாடு தரும்.
 
ஒரு பெண்ணிற்கு, இது மாதிரியான பிறப்புக் கட்டுப்பாட்டு முறைகள் மிக முக்கியம். இவற்றை மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின் உபயோகிப்பது நல்லது.
Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon