Link copied!
Sign in / Sign up
11
Shares

குழந்தை நல மருத்துவர்கள் தாய்மார்களிடம் கூற விரும்பும் 9 விஷயங்கள்..!

பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு உடல் ரீதியாக எந்த பிரச்சனைகள் நேர்ந்தாலும், யாரிடமாவது ஏதேனும் அறிவுரை கேட்டோ அல்லது எந்த புத்தகத்திலாவது ஏதேனும் கருத்தை படித்தோ தங்கள் குழந்தைகளின் பிரச்சனைகளுக்கு மருத்துவ ஆலோசனை இல்லாமல், தாங்களே நிவாரணம் அளிக்க முற்படுகின்றனர். சில சமயங்களில், இதனால் குழந்தைகளின் பிரச்சனை தீராமல், மேலும் வளர்வதாய் விளங்குகிறது. ஆகையால், குழந்தை நல மருத்துவர்கள் தாய்மார்களுக்கு சில அறிவுரைகளை வழங்குகின்றனர். அந்த அறிவுரைகள் அடங்கிய தொகுப்பின் பதிப்பினை இங்கு படித்தறியலாம்..!

1. இணையதளம்..!

பெற்றோர்களே! உங்கள் அனைத்து தேவைக்கும், உங்கள் குழந்தைகளின் எல்லாவித பிரச்சனைகளுக்கும் இணையதளத்தில் கூறப்பட்டிருக்கும் மருத்துவ குறிப்புகளையே நம்பாமல், உங்கள் குடும்ப மருத்துவரிடம் கலந்தாலோசித்து, பின் நீங்கள் படித்தறிந்த மருத்துவ முறையை பின்பற்றவும்.. ஏனெனில் உங்கள் உடல் நலம் பற்றி, உங்கள் மருத்துவர் மட்டுமே நன்கு அறிவார்; ஆகையால், யோசித்து முடிவெடுங்கள்..!

2. வலி நிவாரணிகள்..!

உங்களுக்கோ அல்லது குழந்தைக்கோ எந்த வலி ஏற்பட்டாலும், வலி நிவாரணிகளை உடனே நாடுவதை நிறுத்திக் கொள்வது நல்லது. நீங்கள் எவ்வளவு அதிகம் வலி நிவாரணிகள் எடுத்துக் கொள்கிறீரோ அவ்வளவு விரைவில் உங்கள் சிறுநீரகம் மற்றும் இதர உடல் பாகங்களுக்கு முடிவு கட்டி, உங்கள் முடிவினை நீங்களே தேடுகிறீர் என்று பொருள்..!

3. அதிகம் யோசித்தல்..

குழந்தைக்கு காய்ச்சலோ சளியோ ஏதேனும் வைரல் தொற்றால், சாதாரணமாக தோன்றினால், அதை பெரிதாக எண்ணிக் கவலைப்பட்டு, அதிகம் யோசித்து ஏதேனும் பொருந்தாத நடவடிக்கை களை எடுக்க முற்படாமல் இருப்பது நல்லது. இது மாதிரியான நோய்த்தொற்றுகள் சாதாரணமாக தோன்றி ஒருவார காலத்திற்குள் மறைந்துவிடும்; அப்படி மறையவில்லை எனில் உடனே மருத்துவரை அணுகவும். காய்ச்சலில் தீவிரம் அதிகம் இருந்தால், உடனே மருத்துவரை சென்று காண்பது நல்லது.

4. தடுப்பூசிகள்..!

குழந்தைக்கு போட வேண்டிய தடுப்பூசிகளின் விவரம் பற்றி, பெற்றோர்கள் தெளிவாக அறிந்திருக்க வேண்டியது அவசியம் மற்றும் தடுப்பூசி போட வேண்டிய கால கட்டங்களை அறிந்து சரியான நேரத்தில் குழந்தைகள் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுமாறு வழிவகை செய்வது நல்லது.

5. கேள்வியுறும் செய்திகள்..!

குழந்தை வளர்ப்பு பற்றியோ மருத்துவ குறிப்புகள் பற்றியோ நீங்கள் கேள்வியுற்றதை எல்லாம் முழுதும் நம்பி செயல்படாமல், ஒருமுறை மருத்துவரை கலந்தாலோசித்து செயல்படுவது நல்லது.

6. மருத்துவர்கள்..

குழந்தைக்கு ஏதேனும் சுகவீனம் நள்ளிரவு நேரத்திலோ அல்லது அதிகாலையிலோ எவ்வாறு இந்த நேரத்தில் மருத்துவமனை செல்வது, மருத்துவரை அணுகுவது என்றெல்லாம் தேவையில்லாமல் குழப்பிக் கொள்ளாமல், எந்த நேரமாயினும் மருத்துவர்களான எங்களை தொடர்பு கொள்ளுங்கள்..! உங்களுக்கு தேவையான சேவையை செய்ய நாங்கள் எந்நேரமும் தயார் - மருத்துவர்களின் செய்தி. ஆகையால், முதலில் மருத்துவரை அணுக பழகுங்கள், குழந்தைக்கு எந்த பிரச்சனை நேர்ந்தாலும்..!

7. சராசரி சிகிச்சை..!

அடிக்கடி அல்லது மாதத்திற்கு ஒருமுறையாது மருத்துவ சிகிச்சையை உங்கள் குழந்தைக்கு செய்து கொள்வது நல்லது. பொதுவாக அனைத்து வயதினரும் மாதம் ஒருமுறை அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

பெற்றோர்களே! “கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்" என்ற நம் முன்னோர் கூற்றை நினைவில் வைத்து, குழந்தையின் ஆரோக்கியம் தொடர்பாக முடிவெடுப்பது நல்லது. உங்கள் குழந்தைக்கு சிறந்த பெற்றோராக விளங்க முயற்சி செய்யுங்கள்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon