Link copied!
Sign in / Sign up
9
Shares

குழந்தை இருக்கிறதா என்று சொல்லும் உங்கள் தோற்றம்

நீங்கள் அம்மாவை போல் தோற்றமளிக்கிறீர்களா? உங்களை முதல் முறை பார்க்கும் அந்நியர் கூட நீங்கள் ஒரு தாய் என்பதை எளிதில் கண்டுபிடித்து விடுகிறார். இது எப்படி சாத்தியம் என்பது உங்களுள் குழப்பத்தை தோற்றுவிக்கலாம். உங்கள் தனிப்பட்ட சில விஷயங்களே இவற்றை காட்டுகின்றன. அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை, ஒரே மாதிரி ஆடை அணிவதில்லை. இதில் ஏற்படும் சில மாற்றங்களே உங்களை அன்னையாக எளிதில் அடையாளம் காட்டிவிடுகிறது. இங்கு அந்த மாற்றங்கள் என்ன என்பதை பார்க்கலாம். 

1 எப்போதும் சிந்தித்தல்

நீங்கள் சிறிய அளவிலான கைப்பையிலிருந்து பெரியது அல்லது மிகவும் பெரிய அளவிலான கைப்பைகளை விரும்புவீர்கள். நீங்கள் ஒரு அம்மாவாக இருக்கும் போது, உங்களுக்கும் குழந்தைகளுக்கு அத்தியாவசியமான பொருட்களை எடுத்து செல்ல பெரிய கைப்பையாய் வாங்குவீர்கள்.

2 சிகை அலங்காரம்

நீங்கள் உங்கள் முடியை ஏனோதனோ என்று வாரி இருப்பீர்கள் அல்லது கொண்டை போட்டிருப்பீர்கள். உங்கள் மனதிற்கு பிடித்தபடி அவற்றை செய்ய உங்களுக்கு நேரம் இருக்காது. நீங்கள் உங்கள் குழந்தைக்கு நேரம் செலவிட்டு கவனித்து கொண்டிருக்கும் போது, உங்கள் கூந்தலுக்கு நேரம் ஒதுக்க மறந்துவிட்டிருப்பீர்கள். இதுவரை உங்கள் முடியை பற்றிய கவலையையே நீங்கள் மறந்திருப்பீர்கள்.

3 அழகு

நீங்கள் சிறிது நேரத்தையாவது உங்கள் அழகிற்கென செலவிடுகிறீர்களா என்றால், இல்லை. நீங்கள் அதை பொருட்படுத்தி கவலையடைந்திருக்க மாட்டீர்கள் அல்லது அந்த நாளின் இறுதியில் அவை அழிந்துவிடும் என்பதை உணர்ந்திருப்பீர்கள். நீங்கள் கண் மை போடுகிறீர்களா? பெரும்பாலும் அம்மாக்கள் குறைந்த அழகு சாதன பொருட்களையே பயன்படுத்துவதால், அவர்களுக்கு தொடர்ச்சியான அழகு படுத்தும் பொருட்கள் தேவைபடாது.

4 வசதியாக

பெரும்பாலான அம்மாக்கள் ஒவ்வொரு நாளும் மெல்லிய ஜீன்ஸ் மீது தளர்வான குர்த்தாவையே தேர்ந்தெடுக்கிறார்கள். அனைத்து அம்மாக்களும் சந்திக்கும் ஒரு பிரச்சனை என்னவென்றால், அவர்கள் கர்பகாலத்திற்கு முன்னான ஆடைகள் இறுக்கமாகவும், அதற்கு பின்னான ஆடைகள் தளர்வாகவும் இருக்கும். உடைகள் மட்டும் இல்லாமல் சில அணிகலன்களுக்கும் இதே நிலை தான். உங்களது வளையல் மற்றும் மோதிரங்கள் போன்றவை நீங்கள் மிகவும் விரும்பி இருந்தாலும், இப்போது உங்கள் வீட்டின் ஒரு மூலையில் இருக்கும். நீங்கள் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க துவங்கி இருப்பீர்கள்.

5 குதிகால் உயரமான செருப்பு

நீங்கள் உங்கள் குழந்தைகளின் பின்னால் இருந்து செயல்படும் போது, உங்களால் குதிகால் உயரமாக இருக்கும் செருப்புகள் சரிப்பட்டு வராது. உங்கள் குழந்தைகளுடனான தருணத்தில் அவற்றை தவிர்த்து, சாதாரண செருப்புக்கு மாறி இருப்பீர்கள். கடைசி நேரத்தில் நீங்கள் குதிகால் உயரமான செருப்பு அணிந்து இரவு முழுவதும் துன்பம் அடைந்திருப்பீர்கள், இதனால் அதையே கடைசி முறையாக விட்டிருப்பீர்கள்.

நீங்கள் நீங்களாக இருக்க முடியவில்லையே என்று வருத்தப்படாதீர்கள். நீங்கள் ஒரு தாய். உங்களுக்கென தனி கடமைகள் உள்ளன. எனவே, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஓய்வூ எடுத்துக்கொள்ளலாம். உங்கள் உடையில் கறைகள் இருக்கலாம். ஆனால் அம்மாவென்று உங்களுக்கு இருக்கும் அதிகாரம் நீங்கள் எந்த உடை போட்டாலும் உங்களை ஸ்டைலாகவே காட்டும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon