Link copied!
Sign in / Sign up
15
Shares

குழந்தை ஆரோக்கியமாக இருப்பதை உணர்த்தும் 7 அறிகுறிகள்..!

குழந்தைகள் பிறந்தது முதல் பெற்றோரின் கவனிப்பாலும், வளர்ப்பாலும் நன்கு வளர்ந்து கொண்டிருப்பர்; ஆனாலும் குழந்தை ஆரோக்கியமாக தான் வளர்கிறதா என்பதை பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை அளிக்கிறோம்; குழந்தைகள் ஆரோக்கியமாக தான் வளர்கிறார்கள் என்று எண்ணினால், அது தவறு. அப்படியெனில் குழந்தைகளின் வளர்ச்சி சரியானதா இல்லையா என்பதை எப்படி அறிவது..???

வாருங்கள் பெற்றோர்களே! குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதை அறியும் சில அறிகுறிகளை பற்றி இப்பதிப்பில் படித்தறியலாம்..

1. ஆதரவு..!

குழந்தை எந்த பொருட்களுடைய ஆதரவு மற்றும் யாருடைய ஆதரவும் இல்லாமல், உட்காரும் போது, தலை நேராக நின்றால், குழந்தையின் தசைகள் வலிமை பெற தொடங்கி விட்டன என்று பொருள்; இம்மாற்றங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியைக் குறிக்கின்றன.

2. பேசுதல்..!

3 மாத காலகட்டத்தில், குழந்தைகள் கண்களைக் கொண்டு நேருக்கு நேராக பார்த்தால், கையிலிருந்து பொருட்களை முயன்றால், சிரித்தால், தூக்குமாறு சைகை செய்தால், ஏதேனும் சத்தங்களை எழுப்பினால் குழந்தைகள் ஆரோக்கியமாகவே உள்ளனர் என்று பொருள்..!

3. பசி..!

குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 12 முறை பாலூட்ட வேண்டியிருக்கலாம்; அதற்கு மேலும் கூட ஆகலாம். இச்சமயங்களில் குழந்தைகள் பாலினை பருகாமல் அடிக்கடி புறக்கணித்தல் கூடாது; அப்படி செய்தால், எதோ பிரச்சனை என்று பொருள். ஆகையால், குழந்தைகள் வயிறார பசியாறுகிறார்களா என்று கவனித்தறிய வேண்டும்..

4. உறக்கம்..!

குழந்தைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உறங்க வேண்டும். குறைந்தது 4 மணி நேரமாவது தொடர்ந்து உறங்குவது நல்லது; அப்படி உறக்கத்தில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்று பரிசோதித்து அறியவும்.

5. டையப்பர்கள்..!

உங்கள் குழந்தைக்கு ஒரு நாளைக்கு 8-10 டையப்பார்கள் வரை மாற்ற வேண்டியிருக்கும்; அப்படி மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டால், குழந்தைகள் ஆரோக்கியாக தான் உள்ளனர் என்று பொருள்.

6.கேட்டல்..!

ஏதேனும் ஓசை எழும்பினால், குழந்தைகள் திரும்பி பார்க்க வேண்டும்; அம்மாவின் குரல் ஓசையை குழந்தை பிரித்தறிய அறிந்திருக்க வேண்டும். இவை வளர்ச்சியின் முக்கியமான சில விஷயங்கள் ஆகும்.

7. வளர்ச்சி..!

குழந்தைகள் முதல் மாத முடிவில் 12 அங்குலங்களும், இரண்டாவது மாதத்தில் 18 அங்குலங்களும் வளர்ந்திருக்க வேண்டும். மேலும் சுற்றுப்புறத்தின் ஓசைகளை நன்கு கேட்டறியும் திறன் கொண்டிருக்க வேண்டும்.

இவையெல்லாம் உங்கள் குழந்தையின் வளர்ச்சியில் தென்பட்டால், நீங்கள் சிறந்த அன்னையே! உங்கள் குழந்தை நன்கு வளர்ச்சியடைந்து வருகிறது என்றே கூறலாம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon