Link copied!
Sign in / Sign up
24
Shares

குழந்தை ஆரோக்கியமாக பிறக்க கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்

கர்ப்ப காலத்தில் சரியான உணவை சாப்பிடுவது என்பது இரண்டு பேருக்கு சேர்த்து சாப்பிடும் உணவை குறிப்பதல்ல. சரியான ஊட்டச்சத்துள்ள உணவை சாப்பிடுவதையே இது குறிப்பிடுகிறது. எனவே, முன்கூட்டியே கர்ப்ப கால உணவு முறையை திட்டமிடுதல் மிகவும் நல்லது. இதை தான் நாங்கள் செய்துள்ளோம். இங்கே, கர்ப்பகாலத்தில் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் போதிய ஊட்டச்சத்து வழங்கும் உணவுகளை கொடுத்துள்ளோம்.

கர்ப்ப காலத்திற்கு முன்

உங்களின் கர்ப்ப காலத்தை ஆரோக்கியமான உணவுகளோடு ஆரம்பிப்பதே ஆரோக்கியமான குழந்தைக்கு முதல் படியாகும். தாய்மார்களுக்கு புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பு ஆகியவை அதிகளவில் தேவைப்படும். ஆய்வுகளில் வைட்டமின் B மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளும் முக்கியமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

கர்ப்ப காலத்தின் போது

ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கர்ப்பகாலத்தில் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களா, அதை தான் குழந்தையும் உட்கொள்ளும். இதை நினைவில் வைத்துக்கொண்டு கர்ப்பகாலத்தில் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். கீழே, ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் நீங்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

முதல் மூன்று மாதங்கள்

பால், இறைச்சி, தயிர், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். முதல் மூன்று மாதங்களில் தான் குழந்தையின் மூளை, உடல் கட்டமைப்பு மற்றும் பிற உடல் பாகங்கள் வளர்ச்சி அடைவதால், வைட்டமின் B12, B6, ரிபோப்ளாவின், தைமின்கள் அதிகளவில் தேவைப்படும். இந்த கட்டத்தில் சீரான உணவு முறையும் அவசியமாகும். எனவே, உடல் எடை கூடுவதை பற்றி கவலைப்படாமல் ஆரோக்கியமான உணவில் கவனம் செலுத்துங்கள் .

இரண்டாவது மூன்று மாதங்கள்

இந்த காலத்தில் உங்கள் குழந்தை வேகமாக வளரும். எனவே, கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் D நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். இது பலமான எலும்புகள் மற்றும் பற்கள் வளர்வதற்கு உதவுகிறது.

அதுமட்டுமில்லாமல், ஒமேகா 3 அடங்கிய உணவுகளையும் சாப்பிட வேண்டும். இது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. அதே சமயம், மருத்துவர்கள் பால் சார்ந்த பொருட்களையும் எடுத்துக்கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறார்கள். தாய் மற்றும் குழந்தைக்கு தேவையான சத்துக்கள் இறைச்சி மற்றும் காய்கறிகளிருந்து கிடைக்கிறது.

இறுதி மூன்று மாதங்கள்

இறுதி மூன்று மாதங்களில் குழந்தையிடம் அதிக அசைவுகள் இருக்கும். எனவே, அதற்கு அதிகமான சத்துக்கள் தேவைப்படும். எனவே, ஆற்றல் நிறைந்த ஊட்டச்சத்துக்களான புரதம், இரும்புசத்து, கால்சியம் ஆகியவை 400 கலோரிகள் வரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒன்றை கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிடும் சக்கரையின் அளவு நேரடியாக குழந்தைக்கு அனுப்பப்படுகிறது. இது குழந்தையை பாதிக்க கூடும். எனவே, சக்கரையை அளவோடு எடுத்துக்கொள்ளுங்கள்.

பிரசவத்திற்கு பின்

ஒரு தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் போது, அந்த குழந்தைக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் அந்த பால் மூலமாக சுமார் 9 மாதங்களுக்கு கிடைக்கிறது. எனவே, குழந்தைக்கு பாலூட்டும் போது, தாய்மார்கள், ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தாய்ப்பாலூட்டும் போது சாப்பிட வேண்டிய உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இரும்புசத்து குறைவாக இருந்தால், சிவப்பு இறைச்சி, மற்ற காய்கறிகள், பழங்களை தவிர்த்து இங்கே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடலாம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon