Link copied!
Sign in / Sign up
20
Shares

குழந்தை ஆணா பொண்ணா என கண்டுபிடிக்க உதவும் உணவு எது தெரியுமா?

பிறக்கப் போகும் குழந்தை ஆணா பொண்ணா என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் தம்பதியர்களுக்கு அதிகம் இருக்கும். அதை எப்படி கண்டுபிடிப்பது? என்ற கேள்வியம் அவர்களின் மூளையை குடைந்து கொண்டிருக்கும். அதை கண்டுபிடிக்க உணவுப்பொருளே போதும் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? அப்படி உதவும் உணவு எது என்று இந்த பதிப்பில் பார்க்கலாம்..! 

கர்ப்ப காலத்திற்கு முன்னர் தாய்மார்கள் உட்கொள்ளும் உணவில் பொட்டாசியம் அதிகமாக இருந்தால் பிறக்கப் போகும் குழந்தை ஆணாகவும், மெக்னீசியம் மற்றும் கால்சியம் அதிகமாக இருந்தால் பிறக்கப் போகும் குழந்தை பெண்ணாகவும் இருக்கக் கூடும் என்பது ஆய்வாளர்களின் முடிவு.

பற்பசை,முகப்பு பவுடர் போன்றவற்றை தயாரிக்கும் போது அதில் மெக்னீசியம் சேர்க்கப்படுகிறது. கோழிகளின் உணவாகிய தீவனத்தில் மெக்னீசியம் அதிக அளவில் இருப்பதாலேயே கோழி முட்டையின் ஓடுகள் உறுதியாக இருக்கின்றன என்றும் கூறப்படுகிறது. மெக்னீசியத்தின் நன்மைகளையும், அவற்றின் அவசியத்தையும் இப்போது காண்போம்.

உடல் ஆரோக்கியத்தில் மெக்னீசியம்: 

தசை மற்றும் நரம்பு செயல்பாட்டை சிறந்த முறையில் பராமரிக்க நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய கனிமம் மெக்னீசியம். இதய துடிப்பை பராமரித்தல், வலுவான எலும்புகளை உருவாக்குவது போன்றவற்றிற்கு இது மிக அவசியம். இதயம் , தசைகள் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு சீராக செயல்பட பெரிதும் உதவுகிறது. மனித உடலில் ஏற்படும் உயிர் வேதியல் எதிர்வினைகளில் குறைந்தபட்சம் மெக்னிசியத்தின் ஈடுபாடு உள்ளது. நமது உடலின் மொத்த மெக்னீசியத்தில் சுமார் 50% நமது எலும்புகளில் சேமிக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதி முக்கியமாக உடல் திசுக்கள் மற்றும் உறுப்புகளின் செல்களில் காணப்படுகிறது. 1% மட்டுமே இரத்தத்தில் காணப்படுகிறது . ஆகையால் இதன் குறைபாடு இரத்த பரிசோதனையில் தெரியவராது. மனித உடலில் மெக்னீசியத்தின் குறைபாட்டால் நீரிழிவு ,உயர் இரத்த அழுத்தம், ஒற்றை தலைவலி , எலும்பு புரை போன்ற நோய்கள் வரலாம்.

மெக்னீசியம் குறைபாடு:

நம் உடலில் ஏற்படும் சில உபாதைகளால் இந்த தனிமத்தின் குறைபாட்டை நாம் அறிந்து கொள்ளலாம். அவை, கழுத்து மற்றும் முதுகு வலி , பதட்டம், சோர்வு, ஒற்றைத் தலைவலி தாக்குதல்கள், தசை பலவீனம் மற்றும் பிடிப்புகள், பசியின்மை, வாந்தி, குமட்டல், தூக்கமின்மை, வயிற்றுப்போக்கு, தசைத்துடிப்பு ஆகியனவாகும். மாதவிடாய் நின்ற அறிகுறிகளுக்கு பின்னால் இதன் குறைபாடு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

பரிந்துரைக்கப்படும் அளவு: 

ஐக்கிய நாடுகளில் மெக்னீசியம் உட்கொள்ள பரிந்துரைக்கப்பட்ட அளவு ஆண்களுக்கு 300mg ஆகவும் பெண்களுக்கு 270mg ஆகவும் உள்ளது. அசைவ உணவுகளை விட சைவ உணவுகளிலேயே மெக்னீசியத்தின் அளவு அதிகமாக உள்ளது. இருந்தாலும், சால்மன் என்ற மீன் வகையிலும்,கோழி மார்பக இறைச்சியிலும் இதன் அளவு மிகுந்து காணப்படும். மற்றபடி, கீரை,பால், பீன்ஸ் , கொட்டைகள் மற்றும் விதைகளில் மெக்னீசியத்தின் அளவு அதிகமாக உள்ளது.1/4 கப் பூசணி விதையில் மிக அதிக அளவாக 190mg மெக்னீசியம் உள்ளதாக கூறப்படுகிறது. 1/4 கப் முந்திரியில் 116mg மெக்னீசியம் உள்ளது. பச்சை கீரைகளில் 157mg மெக்னீசியம் உள்ளது.

மெக்னீசியம் அதிகமுள்ள ஐந்து உணவுகள்: 

டார்க் சாக்லேட் (Dark Chocolate): இதில் மெக்னீசியம் மிகவும் அதிகமாக உள்ளது, ஒரு அவுன்ஸில் (28 கிராம்) 64 மி.கி. அளவு இருக்கும். இது பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளலில் 16% ஆகும். டார்க் சாக்லேட்டில் இரும்பு, தாமிரம், மற்றும் மாங்கனீஸ் அதிகம் உள்ளது, மேலும் அது நமது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவிற்கு உணவளிக்கும் ப்ரீபையோட்டிக் ஃபைபர் கொண்டிருக்கிறது.

மீன்: கானாங்கெளுத்தி(mackeral), சால்மன், ஹலிபுட் மற்றும் டூனா போன்ற மீன் வகைகள் நமது உடலுக்கு அதிக மெக்னீசியம் சேர்க்கும். மீன்கள் வைட்டமின் D மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் ஒரு பெரிய மூலமாகும். குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு ஒருமுறை மாலை உணவில் மீன் வகைகளை சேர்ப்பது நலம்.

கீரை: வேகவைத்த கீரை ஒரு கப்பில் 157 மிகி மெக்னீசியம் உள்ளது. நல்ல கரும்பச்சை இலை கீரைகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும்

பாதாம்: ஒரு அவுன்ஸ் பாதாமில் 80 mg அல்லது பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளலில் சுமார் 20 % இருக்கும். பாதாம் ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டி மட்டும் அல்ல, அவை மெக்னீசியம் அதிகமுள்ள உணவுமாகும்.

வெண்ணெய் பழம்:(Avocado) மெக்னீசியம் அதிகமாக இருக்கும் சிறந்த பழம் வெண்ணெய் பழம். சாலட்டுகள் அல்லது சாண்ட்விச்களில் சேர்க்கப்பட்டால், வெண்ணெய் பழங்களை புதியதாய் மட்டும் உட்கொள்ள வேண்டும். நமது அன்றாட உணவில் குறைந்தபட்சம் அரை வெண்ணெய் பழத்தை சேர்க்கவும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon