குழந்தையின் பால் புட்டியில் போடக்கூடாத 5 விஷயங்கள்.!
குழந்தைகள் பிறந்த பின் அதற்கு முதல் 6 மாதம் முழுதும் தாய்ப்பால் அளித்திருப்போம்! குழந்தைகளுக்கு இணை உணவுகள் கொடுத்து பழக்கப்படுத்திய பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்படும் பால், ஜுஸ் அல்லது தண்ணீர் போன்றவற்றை, குழந்தை தானாய் உண்ண, பருக பழகும் வரை, தாய்மார்கள் கட்டாயம் பால் புட்டியில் தான் மேற்கூறியவற்றை அளிப்பர். அப்படி குழந்தைக்கு என பயன்படுத்தப்படும் பால் புட்டியில் இடக்கூடாத, போடக்கூடாத விஷயங்கள் சில உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிப்பில் படித்தறியலாம்..!!
1. கிரேப் வாட்டர்..!

குழந்தைகளின் செரிமான பிரச்சனையைப் போக்க வழங்கப்படும் கிரேப் வாட்டரை பால் புட்டியில் ஊற்றி கொடுப்பது நல்ல செயல் அல்ல. அதனை வேறு ஏதேனும் டம்ளர் அல்லது பாட்டில் மூடி, சங்கு கொண்டு குழந்தைக்கு அளிக்கலாம். இதனை பால் புட்டியில் இட்டு அளிப்பது நல்லதல்ல.
2. பால் பவுடர்..!

பாலை நன்கு செறிவு கொண்டதாக மாற்ற, கார்ன் மாவு அல்லது அரிசி மாவு, பால் பவுடர் போன்றவை கலந்த பாலை, பால் புட்டியில் ஊற்றி அளிப்பது தவறான செயல்.
3. கார்ன் சிரப்..

கார்ன் சிரப் போன்ற சிரப் வகை மருந்துகளையும் பால் புட்டியில் இட்டு குழந்தைக்கு தருவதை தவிர்ப்பது நல்லது.
4. உலர்ந்த பிளம் பழச்சாறு..!

உலர்ந்த பிளம் பழச்சாறு நார்ச்சத்து மிகுந்தது; குழந்தையின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ஆனால், அதை பால் புட்டியில் போட்டு குழந்தைக்கு அளிப்பது நற்செயலன்று.
5. தண்ணீர்..!

குழந்தைக்கு தண்ணீர் தருகையில் கூட, டம்ளர் அல்லது சங்கில் தர முயலுங்கள். பால் புட்டியில் தண்ணீர் அளிப்பது குழந்தையின் உடல் நலத்திற்கு நல்லதல்ல.
இந்த பானங்கள் அனைத்தும் குழந்தையின் உடலுக்கு நன்மை பயப்பவையாக இருக்கலாம்; ஆனால், மேற்கண்ட பானங்களை, மருந்துகளை, திரவங்களை பால் புட்டியில் இட்டு அளிப்பது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதை தாய்மார்கள் உணர்தல் வேண்டும்.!