Link copied!
Sign in / Sign up
0
Shares

குழந்தைகளுக்கு ஊசி மீதுள்ள பயத்தை போக்க உதவும் 5 வழிகள்..!

குழந்தைகளுக்கு மருத்துவமனை, மருத்துவர், ஊசி, மாத்திரைகள் என்றாலே ஒரு மிகப்பெரிய பயம் இருக்கும்; இது அவர்களுக்கு பிறந்தவுடன் போடப்படும், மிகுந்த வலி ஏற்படுத்தும் தடுப்பூசிகளால் ஏற்படுகிறது என்று கருத்து தெரிவிக்கப்டுகிறது. எனவே, குழந்தைகளிடத்தில் ஊசி போட்டுக்கொள்வது குறித்து இயற்கையிலேயே, ஒருவித பய உணர்வு தோன்றிவிட்டது. குழந்தைகளின் இந்த பய உணர்வை போக்க உதவும் சில வழிகள் குறித்து இப்பதிப்பில் படித்தறிவோம், வாருங்கள் தாய்மார்களே!

1. திசை திருப்புங்கள்.!

குழந்தைக்கு ஊசி போடும் போது, குழந்தைக்கு விளையாட்டு பொருள்கள், பொம்மைகள் காட்டி, குழந்தைக்கு ஊசி போடுகிறார்கள் என்ற நினைப்பே தோன்றாத வகையில், குழந்தையின் கவனத்தை திசை திருப்புங்கள். இந்நிலையில் ஊசி போடுகையில் குழந்தை சிலும்பாமல், இருக்குமாறும் பார்த்துக் கொள்ளுங்கள்; ஏனெனில் குழந்தை சிலும்பினால், அபாயம் ஏற்படும் வாய்ப்புண்டு. ஆகவே, அதிலும் கவனம் தேவை.

2. காரண காரியம்..!

ஊசியைக் கண்டு பயப்படும் குழந்தையிடத்தில் ஏன் ஊசி போடுகிறோம், ஊசி போடவில்லை என்றால், என்ன நிகழும் என்பதை தெளிவாக, அன்பாக எடுத்துக் கூறுங்கள். நோய்த்தொற்று தரும் தொல்லையிலிருந்து விடுதலை பெறவே, இந்த ஊசி போடுகிறோம் என்பதை குழந்தைக்கு புரிய வையுங்கள்; அதாவது காரியத்தின் காரணத்தை நன்றாக எடுத்துக் கூறி, குழந்தைக்கு புரிய வையுங்கள்..!

3. அரவணைத்து கொள்ளுங்கள்..!

குழந்தைக்கு ஊசி போடும் தருணத்தில், குழந்தையுடன் மிக நெருக்கமாக இருந்து, குழந்தையை நன்கு அரவணைத்துக் கொள்ளுங்கள்; உங்களின் அணைப்பே குழந்தையின் பயத்தை போக்குவதில் பெரும் பங்கு வகிக்கும் என்பதை மறவாதீர்கள்.

4. மூச்சுப் பயிற்சி!

குழந்தையை நன்றாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிட சொல்லி, ஊசி போடும் எண்ணத்தை மறக்க செய்யுங்கள். குழந்தைகள் தாம் சரியாக தான் மூச்சு விடுகிறோமா என்று எண்ணிக்கொண்டிருப்பதில், ஊசி போடுகிறார்கள் என்பதை மறந்துவிடும் வாய்ப்புள்ளது.

5. மயக்கம்..!

குழந்தைக்கு மிக முக்கிய அறுவை சிகிச்சை அல்லது மிகவும் வலி தரக்கூடிய ஊசி என்றால், மயக்க மருந்து அளித்து, பின்னர் ஊசி போடுவது, மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. இந்த முறையை, மிகவும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நேரத்தில் மட்டுமே கையாள வேண்டும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon