Link copied!
Sign in / Sign up
72
Shares

குழந்தைக்குக் கொடுக்கும் கிரைப் வாட்டரின் பயன்களும் விளைவுகளும்!

அன்றிலிருந்து இன்று வரை குழந்தைகள் அழுதாலோ, குழந்தையின் வயிற்றில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டாலோ உடனே நாம் தேடுவது, கிரைப் வாட்டரை தான். தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வரும் இப்பழக்கம் உண்மையில் குழந்தைக்கு நலம் பயக்கிறதா? இல்லை இதனால் குழந்தைக்கு ஏதேனும் பக்கவிளைவு, ஆபத்து, நோய்த்தொற்றுகள் ஏற்படுமா? என்ற எந்த சிந்தனையும் இன்றி குழந்தைக்கு கண்முடித்தனமாக அளிக்கிறோம். இவ்வாறு குழந்தைக்கு நாம் அளித்துக் கொண்டிருக்கும் கிரைப் வாட்டரின் பயன்களும், அதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் விளைவுகளும் பற்றி இப்பதிப்பில் படித்தறிவோம்..!

6 மாதக் குழந்தைக்கு கிரைப் வாட்டர் கொடுத்தால், குடலில் பாக்டீரியாக்கள் பெருகும் வாய்ப்புள்ளது. எனவே இது போன்ற தகவல்களை, தாய்மார்கள் அனைவரும் முழுவதுமாக அறிந்து அளிப்பது, செயல்படுவது தான், குழந்தைகளுக்கு பாதுகாப்பானது. 

பயன்கள்

வயிற்று வலி

வயிற்று வலியால், குழந்தையின் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு கிரைப் வாட்டர் கொடுக்கப்பட்டு வருகிறது; இது குழந்தைகளுக்கு ஏற்படும் வாயுத் தொல்லையை நீக்க உதவுகிறது. மேலும் குழந்தைகளுக்கு வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை போக்கவும் பயன்படுத்துகின்றனர், தாய்மார்கள்.

பல் முளைத்தல்

பல் முளைக்கும் போது, ஏற்படும் வலியால் சில குழந்தைகள் தொடர்ந்து அழுவார்கள்; இதனால் அதிகப்படியான வாயு, குழந்தையின் வயிற்றின் உள்ளே நுழைந்து வயிறு பிரச்சனையை ஏற்படுத்திவிடுவதால், இதை சரி செய்யவும் கிரைப் வாட்டர் பயன்படுகிறது.

விக்கல்

அமிலத்தன்மை, வாயு போன்ற பிரச்சனைகளால், குழந்தைகளிடத்தில் விக்கல் பிரச்சனையும் தோன்றிவிடுகிறது. எனவே குழந்தைகளுக்கு விக்கல் அதிகமாக தோன்றும் போது, இந்த கிரைப் வாட்டரை பயன்படுத்தப்படுகிறது.

பிறந்த குழந்தை

இந்த கிரைப் வாட்டர் உற்பத்தியாளர்கள், பிறந்து 2 வாரம் ஆன குழந்தைக்கு மட்டுமே கிரைப் வாட்டர் அளிக்க பரிந்துரைக்கின்றனர்; ஆகையால், பிறந்த குழந்தைக்கு இதை கொடுப்பதற்கு முன், குழந்தைகள் நல மருத்துவரை ஆலோசித்துக் கொள்வது நல்லது. 

விளைவுகள்

1. கிரைப் வாட்டர் அளிப்பதால், வயிற்று வலியால் அவதிப்படும் குழந்தைகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என்பதற்கு எவ்வித ஆராய்ச்சி சான்றுகளும் இதுவரை இல்லை; ஆனால் தற்காலிக மருந்தாக மட்டுமே இது செயல்படுகிறது என்று கண்டறிந்துள்ளனர். 

2. கிரைப் வாட்டரில் கலக்கப்படும் செயற்கை சர்க்கரை, சோடியம் பைகார்பனேட், ஆல்கஹால் இவற்றால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என்றும் கூறப்டுகிறது.

3. இதை குழந்தைகளுக்கு மிகவும் அதிகம் அளித்தால், பல் சொத்தை, அடிக்சன் போன்ற குறைபாடுகள் குழந்தைகளுக்கு ஏற்படலாம்; இந்நீரில் சேர்க்கப்படும் சர்க்கரை பல் சொத்தையையும், ஆல்கஹால் அடிக்சனையும் தோற்றுவிக்கும் வாய்ப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

4. இதில் சேர்க்கப்படும் சோடியம் பைகார்பனேட்டும் குழந்தைகளுக்கு மிக அளவாக அளிக்கப்பட வேண்டியஒன்று; அதன் அளவு எல்லை மீறினால், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon