Link copied!
Sign in / Sign up
11
Shares

குழந்தைகளுக்கு அளிக்கும் கிரேப் வாட்டர் பாதுகாப்பானது தானா?

அன்றிலிருந்து இன்று வரை குழந்தைகள் அழுதாலோ, குழந்தையின் வயிற்றில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டாலோ உடனே நாம் தேடுவது, கிரைப் வாட்டரை தான். தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வரும் இப்பழக்கம் உண்மையில் குழந்தைக்கு நலம் பயக்கிறதா? இல்லை இதனால் குழந்தைக்கு ஏதேனும் பக்கவிளைவு, ஆபத்து, நோய்த்தொற்றுகள் ஏற்படுமா? என்ற எந்த சிந்தனையும் இன்றி குழந்தைக்கு கண்முடித்தனமாக அளிக்கிறோம். இவ்வாறு குழந்தைக்கு நாம் அளித்துக் கொண்டிருக்கும் கிரேப் வாட்டர் எப்படி தயாரிக்கப்படுகிறது மற்றும் அதை பயன்படுத்தும் முறை பற்றி இப்பதிப்பில் படித்தறிவோம்..! 

6 மாதக் குழந்தைக்கு கிரேப் வாட்டர் கொடுத்தால், குடலில் பாக்டீரியாக்கள் பெருகும் வாய்ப்புள்ளது. எனவே இது போன்ற தகவல்களை, தாய்மார்கள் அனைவரும் முழுவதுமாக அறிந்து அளிப்பது, செயல்படுவது தான், குழந்தைகளுக்கு பாதுகாப்பானது. 

கிரேப் வாட்டர் என்றால் என்ன?

கிரைப் வாட்டர் என்பது தண்ணீர் அமைப்பிலுள்ள ஒரு டானிக்; இது குழந்தைகளின் செரிமான சக்திக்கு பெரிதும் உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம், வயிற்று வலி, வாயு, விக்கல் போன்ற பிரச்சினைகளை சரி செய்ய இது உதவுகிறது. 

சேர்க்கப்படும் பொருட்கள்

உண்மையான உட்வர்ட்ஸ் கிரேப் வாட்டரில் 

வெந்தய எண்ணெய் - இது குழந்தையின் வயிற்றுவலி, அஜீரணம், வயிற்றில் ஏற்படும் அழற்சி போன்றவற்றை ஏற்படாமல் தடுக்கும்

தண்ணீர் - இது குழந்தையின் வயிற்றுவலியை குறைத்து, குழந்தை நீர்ச்சத்து கொண்டதாக வைக்க உதவுகிறது 

சோடியம் பைகார்பனேட் - இது குழந்தைகளின் வயிற்றின் அமிலத்தன்மையை குறைத்து, குழந்தையின் வலியை போக்க உதவுகிறது 

சர்க்கரை - இது வலியால் அழும் குழந்தையை அமைதிப்படுத்த உதவுகிறது

3.6% ஆல்கஹால் - இது குழந்தைகளுக்கு பாதுகாப்பானது அல்ல

போன்றவை சேர்க்கப்படுகிறது. குழந்தைகளின் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை தீர்ப்பதால் இது, "கிரைப் - சீரண" என்ற அழைக்கப்பட்டது. ஆனால், நவீன காலங்களில் மருத்துவர்கள், பெற்றோர்கள் இந்நீரில் சேர்க்கப்படும் ஆல்கஹாலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அது கைவிடப்பட்டது.

பாதுகாப்பானதா?

குழந்தைகள் அழுதாலோ, குழந்தையின் வயிற்றில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டாலோ உடனே நாம் கிரேப் வாட்டரை குழந்தைக்கு கொடுக்கிறோம்; ஆனால் கிரேப் வாட்டர் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா இல்லையா என்பதற்கு எந்தவொரு ஆராய்ச்சி முடிவுகளும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

பயன்படுத்தும் முறை

கிரேப் வாட்டர் லேபிளிலில் குறிப்பிடப்பட்டுள்ள சரியான அளவை, மருத்துவரின் ஆலோசனை பெற்று, அதன் படி குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது; மேலும் அதில் கொடுக்கப்பட்டுள்ள காலாவதி தேதி, குறிப்புகள், இந்த வாட்டர் செய்ய பயன்படுத்தப்பட்ட பொருட்கள் போன்றவற்றை படித்து, பயன்படுத்துவது நல்லது. மேலும் கிரேப் வாட்டரை தாய்ப்பாலுடன் கலந்து, குழந்தைக்கு கொடுப்பது மிகப்பெரிய தவறு; ஏனெனில், இவை தாய்ப்பாலுடன் வேதி வினைபுரிந்து குழந்தைக்கு பக்க விளைவுகளை உண்டாக்க அதிக வாய்ப்புள்ளது.

 

வீட்டில் தயாரிப்பது எப்படி?

கடைகளில் விற்கப்படும் கிரேப் வாட்டருக்கு பதிலாக, அதில் சேர்க்கப்படும் பொருட்களை தெரிந்து கொண்டு, நீங்களே வீட்டில் கிரேப் வாட்டர் தயாரித்து, குழந்தைக்கு அளிக்க முடியும்; இது மற்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களிலிருந்து உங்கள் குழந்தைகளை காப்பாற்ற உதவும். எனவே இனி கிரேப் வாட்டர் பயன்படுத்தும் முன் அதில் சேர்க்கப்படும் பொருட்களை அறிந்து, மருத்துவரின் ஆலோசனையை பெற்று பின்னர் பயன்படுத்துவது சிறந்தது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon