Link copied!
Sign in / Sign up
30
Shares

குழந்தைகளுக்காக நீங்கள் அறிந்திருக்க வேண்டிய 5 YouTube சேனல்கள்..!

குழந்தைகள் பிறந்து, சுற்றியுள்ள பொருட்களை, மனிதர்களை உற்று நோக்கத் தொடங்கிய பின்னர், அவர்கள் பாடல் மற்றும் வீடியோக்களை விரும்பி பார்க்கத் தொடங்குவர்; அந்த சமயங்களில் குழந்தைகளுக்கு ரைம்ஸ், கதைகள், ABCD பாடல்கள், தமிழ் எழுத்துக்கள் பாடல்கள் என அனைத்தையும் குழந்தைக்கு போட்டுக்காட்டினால், அது அவர்களின் மனதில் ஆழமாய் பதியச் செய்யும்.

அவ்வாறு குழந்தைகளுக்கு பெற்றோராகிய நீங்கள் காட்ட வேண்டிய சில ரைம்ஸ், கதைகள், பாடல்கள் உள்ள சிறந்த YouTube சேனல்கள்களை இந்த பதிப்பில் அறிமுகப்படுத்துகிறோம், படித்து பயனடையுங்கள்..!

1. Busy Beavers

இந்த சேனலில், ஆங்கில எழுத்துக்கள் மற்றும் எண்கள் கொண்ட பாடல், மற்ற ரைம்ஸ்கள், கதைகள் போன்றவை ஆங்கில மொழியில் குழந்தைகள் இரசிக்கும் படியாக கொடுக்கப்பட்டுள்ளது. 2 மில்லியன் மக்கள் இந்த சேனலில் பதிவு செய்துள்ளனர்; குழந்தைகளுக்கு தேவைப்படும் கருத்துக்களை ருசிகரமான முறையில் தெரிவிப்பதில் இந்த சேனல் தனித்து விளங்குகிறது. ஒவ்வொரு பெற்றோரும் பார்த்து, குழந்தையை இரசிக்கச் செய்ய வேண்டிய சேனல் இது.

இந்த சேனலை பார்வையிட Busy Beavers -இங்கே கிளிக் செய்யவும்..

2. KidsTV123

இந்த சேனலில் உள்ள பாடல் வீடியோக்கள் இனிய இசையை கொண்டு விளங்குகின்றன; இது குழந்தையின் மனதை அமைதிப்படுத்தி, மகிழ்ச்சியடைய செய்யும் பாடல்களை கொண்டுள்ளது. மேலும் இது குழந்தைகளை கற்க செய்வதோடு, அவர்களை தூங்கவும் செய்ய ஏற்றது.

இந்த சேனலை பார்வையிட KidsTV123 -இங்கே கிளிக் செய்யவும்..

3. The Learning Station

குழந்தைகள் அனைத்துவித தகவல்களையும் கற்க, எண்கள், அழுகல், பாடல்கள் என அனைத்தையும் அழகான கார்ட்டூன் பொம்மைகள் அடங்கிய, சிறந்த இசை கொண்ட ரைம்ஸ் வீடியோக்களாக கண்டு களிக்க ஏற்றது.

இந்த சேனலை பார்வையிட The Learning Station -இங்கே கிளிக் செய்யவும்..

4. ChuChuTV

இந்த சேனலில் 9 மில்லியன் மக்கள் பதிவு செய்துள்ளனர்; இது தான் இந்தியாவின் மூன்றாவது அதிக மக்கள் பதிவு செய்த சேனல் ஆகும். இதில் விதவிதமான, மனதை மயக்கும் அனிமேஷன் காட்சிகள் அழகாக படமாக்கப்பட்டு, வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளன. இது குழந்தைகளுக்கு காட்ட மிகவும் ஏற்றது.

இந்த சேனலை பார்வையிட ChuChuTV -இங்கே கிளிக் செய்யவும்..

5. Jugnu Kids

இந்த சேனலில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில், கதைகளும் பாடல்களும் வீடியோக்களாக கொடுக்கப்பட்டுள்ளன; இது குழந்தைகள் கண்டு களித்து, கற்கவும் மகிழவும் ஏற்றது.

இந்த சேனலை பார்வையிட Jugnu Kids -இங்கே கிளிக் செய்யவும்.. 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon