Link copied!
Sign in / Sign up
27
Shares

குழந்தைகள் தவறான வழியில் செல்வதை உணர்த்தும் 5 அறிகுறிகள்

குழந்தை வளர்ப்பு 20 வருடங்களுக்கு முன்னர் இருந்ததை விட இன்று 60%-70% கடினமாக உள்ளது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இன்றைய காலகட்டத்தில் குழந்தை என்பது ஒரு விருப்பமே தவிர கட்டாயம் கிடையாது. இன்றைய தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்வதை விட அவர்களின் வேலைக்கே முன்னுரிமை கொடுக்கின்றன. குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கும் போது, அவர்கள் அவர்களின் வேலையின் முக்கிய தருணத்தில் இருப்பார்கள். இதனால் குழந்தை வளர்ப்பில் அலட்சியம் காட்டுகின்றனர். 

இதனால், குழந்தைகள் தவறான வழிகளில் செல்ல நேரிடுகிறது. இதுவே அவர்களுக்கு பழக்கம் ஆவதால், அவர்கள் ஒழுக்கமின்றி நடந்துகொள்கின்றனர். இங்கு குழந்தைகள் தவறான வழியில் செல்கின்றனர் என்பதை காட்டும் 5 அறிகுறிகளை பார்க்கலாம்.

1 எல்லாமே வேண்டும் என்கிற பிடிவாதம்

எல்லா குழந்தைகளும் பொம்மை வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால், உங்கள் குழந்தை கிடைக்காத எல்லா பொருளுக்கும் அழுதாலோ அல்லது உங்களை அடித்தல் அல்லது கத்துதல் போன்றவற்றை எல்லாம் செய்தால், அவர்கள் எல்லாம் பெற வேண்டும் என எண்ணுகிறார்கள். இந்த நடத்தையை ஊக்குவித்தல், அவர்களை தவறான வழியில் கொண்டு செல்லும்.

என்ன செய்ய வேண்டும்

இது போல் அவர்கள் நடந்து கொள்ளும் போது, அவர்களிடம் கோபப்படாமல் இருக்க வேண்டியது அவசியம். பொறுமையாக குழந்தைகளிடம் அவர்கள் செய்வது தவறு என்று எடுத்துக் கூறுங்கள். அவர்களை பாதிக்காதபடி தண்டனை வழங்கினால், அவர்களிடம் மாற்றத்தை காணலாம்.

2 பகிரவில்லை என்றால்

சிறுவயதில் குழந்தைகள் அவர்களின் உடமைகள் மீது அதீத அக்கறை கொண்டிருப்பார்கள். அதனால் அவர்கள் பெரும்பாலும் அவர்களின் பொருட்களை யாருடனும் பகிர மாட்டார்கள். இதனை முதலில் நீங்கள் அடையாளம் காணும் போதே சரி செய்ய வேண்டும். பகிர்தல் என்பது கற்றுக்கொண்ட பழக்கமே என்று உளவியல் நிபுணர்கள் நம்புகின்றன.

என்ன செய்ய வேண்டும்

பகிர்தல் என்பது பார்த்து கற்றுக்கொள்ளும் பழக்கம் என்பதால், நீங்கள் பகிர்ந்து கொள்வதை குழந்தைகளுக்கு காட்டுங்கள். எவ்வாறு பகிர வேண்டும் என்பதையும் அறிவுறுத்துங்கள். மேலும், குழந்தைகள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது பாராட்டவும் செய்யுங்கள்.

3 எல்லாவற்றிக்கும் சிணுங்குதல்

காலை கண் விழித்தது முதல் தூங்கும் வரை அவர்கள் சிணுங்கினால், அது அவர்கள் மீது கோபத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், வருங்காலத்தில் மற்றவரிடம் பழக கூட தடையாக மாறலாம். தன் குடும்பத்தை தவிர மற்றவர்கள் இந்த பழக்கத்தை சகித்து கொள்ளாமல், அவர்களை தனிமையில் விட்டுவிடும் அபாயமும் உள்ளது.

என்ன செய்ய வேண்டும்

சிணுங்குதல் என்பது, பெற்றோர்களை குழந்தைகள் கையாளும் வழியாகும். அதனால், அவர்கள் சாதாரணமாக பேசும் வரை அவர்களை கண்டுகொள்ளதீர். "இவ்வாறு பேசினால் எனக்கு புரியாது" என்று சொல்வதும் உதவும். உங்கள் குழந்தைகள் சிணுங்கப்போகிறார்கள் என்று முன்பே அறிந்தால், அதற்கு ஏற்றவாறு தயாராகிக் கொள்ளுதலும் உதவும்.

4 மற்றவரை மதிக்காமல் இருந்தல்

இது எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதனை உடனே திருத்த வேண்டும். இது தாத்தா உள்ளிட்ட அனைத்து உறவுகளையும் பாதிப்பது மட்டுமல்லாமல், பள்ளியிலும் அவர்களை பிரச்சனைக்கு உள்ளாக்கும்.

என்ன செய்ய வேண்டும்

இது மற்றவர்களை எவ்வாறு பாதிக்கும் என்று எடுத்துக் கூறுங்கள். மற்றவரிடம் அவ்வாறு பேசவோ நடந்துக் கொள்ளவோ கூடாது என்று சொல்லுங்கள். இதனை கண்டிக்காமல் இருந்தால், அவர்களுக்கு துணைச் செல்வது போல் ஆகிவிடும்.

5 உங்களையும், உங்கள் முடிவுகளையும் அவர்கள் கட்டுப்படுத்தினால்

நீங்கள் வெளியே செல்லும் போது, உங்கள் குழந்தை அழுவது கடினமான ஒன்றாக தான் இருக்கும். அதற்காக உங்களது திட்டங்களை ரத்து செய்ய வேண்டாம். உங்கள் குழந்தைகள் உங்கள் முடிவுக்கு காரணமாக இருக்க கூடாது. சில விஷயங்களை நீங்கள் தனியாகவோ அல்லது உங்கள் துணையுடன் சேர்ந்தோ செய்ய வேண்டும். இது உங்கள் இருவரையும் குழந்தைக்கு முன் இருப்பதை போல் உணர வைக்கும். உங்கள் குழந்தைகளை உங்கள் முடிவுக்குக் காரணம் ஆக்குவது, உங்களின் எண்ணம் அவர்களை சுற்றி தான் இருக்கும் என்று அவர்களை உணர வைக்கும்.

என்ன செய்ய வேண்டும்

அவர்களை "குட் பை" சொல்ல பழக்குங்கள். அவர்கள் வருத்தம் அடைந்தால், உங்கள் திட்டத்தை ரத்து செய்யாமல் சிறுது நேரத்தில் திரும்பி வந்து விடுவேன் என்று சொல்லுங்கள்.

அவர்கள் தவறாக நடந்துக் கொள்ளகிறார்கள் என்று கவலைப்படாமல், அவர்களுக்கு நல்லவற்றை கற்று கொடுங்கள். அவர்கள்தானே இந்த உலகத்தின் வருங்காலம்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon