Link copied!
Sign in / Sign up
18
Shares

குழந்தைகள் நடக்க வாக்கர் பயன்படுத்துவது சரியா? தவறா?

குழந்தை பிறந்ததிலிருந்து அதன் வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் குழந்தைக்கு எதை எப்போது, எப்படி செய்ய வேண்டும் என்பது, மனித உடலியல் ரீதியாக முன்பே தீர்மானிக்கப்பட்டு, அந்த இயற்கை உடலியக்கங்கள் அனைத்தும், மனித உடலில் சீராக நடந்து கொண்டே இருக்கும். குழந்தைகள் குப்புறப்படுத்தல், தலையைத்தூக்கிப் பார்ப்பது, தவழ்தல், முட்டிப்போடுதல், பொருட்களை பிடித்துக்கொண்டு எழுந்து நிற்றல் என இது போன்ற அடிப்படை வளர்ச்சி நிலைகளை, வளரும் பருவத்தில் மழலைகள் இயற்கையாகக் கடந்து வந்தால் மட்டுமே குழந்தைகளால், தானாகவே விரைவில் நடக்க முடியும். 

முரண்!

அப்படி குழந்தைகள் தானாய் நடக்கும் முன்பு,  அதற்கு முன்னதாக, பெற்றோர்கள் வலுக்கட்டாயமாக வாக்கர் போன்ற உபகரணங்களை வாங்கிக் கொடுத்து, அதன் மூலம் குழந்தையை நடக்கப் பழக்கப்படுத்துவது என்பது இயற்கைக்கு முரணானது.

குழந்தையின் மூளை வளர்ச்சி!

மனிதனின் மூளையும், உடல் இயக்கங்களும் ஒன்றோடொன்று இணைத்து பிணைக்கப்பட்டுள்ளது; குழந்தைகள் தானாய் நடக்கப் பழகுகையில் தான், அவர்களின் மூளை அதற்கேற்றவாறு வளர்ச்சியடையும். குழந்தைகள் நடப்பதற்கு வாக்கரைப் பயன்படுத்துகையில், அவர்களின் உடலுக்கும் தசைகளுக்கும் ஒரு பிணைப்பு அதாவது ஒருங்கிணைப்பு கிடைக்காது; இதனால், குழந்தைகளின் மூளை தன் கட்டுப்பாட்டை இழக்க நேரிடலாம்

இதனால், குழந்தைகள் வழக்கத்தை விட வேகமாக நடக்க ஆரம்பித்துச் சிறு சிறு விபத்துகளைச் சந்திப்பர். இயற்கையில் குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கையில் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து மெது மெதுவாக நடக்கப் பழகுவர். ஆனால், குழந்தைகளை வாக்கரில் உட்கார வைத்து நடக்க வைக்கையில், குழந்தை ஒரு நொடிக்கு 3 முறை அடியெடுத்து வைத்து நடக்கும்; இதனால், குழந்தையின் மூளை கட்டுப்பாடை மீறிச் செயல்படுகிறது.

அடிபடலாம்..!

வாக்கரின் அடிப்பகுதியில் சக்கரத்தைச் சுற்றி ஒரு வட்டம் போன்று அமைக்கப்பட்டிருக்கும்; இதனால், குழந்தைக்கு அடி ஏதும் ஏற்படாது என பெற்றோர்கள்  கருதுகின்றனர். ஆனால், இந்த வட்டவடிவ அமைப்பினால் குழந்தையின் கை, கால்களில் வேண்டுமானால் அடிபடாமல் இருக்கலாம்; ஆனால் குழந்தையின் தலையில் அடிபடும் வாய்ப்புண்டு. 

குழந்தை அதிக வேகத்துடன் வாக்கரை இழுத்துக்கொண்டு வருகையில், படிகளில் குழந்தை உருண்டு விழுந்து விடுவது, வாக்கருடன் சேர்ந்து குப்புற விழுவது போன்ற விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

 

இரத்த ஓட்டம் சீராக இருப்பதில்லை..

வாக்கர் பயன்படுத்தி நடக்கையில், குழந்தைகள் பாதம் முழுவதையும் தரையில் ஊன்றி நடப்பதில்லை; கால் விரல்களை மட்டுமே தரையில் பதிக்கின்றனர்; அவற்றை பயன்படுத்தி மட்டுமே நடக்கின்றனர். இதனால், குழந்தைகளின் கால்களில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதில்லை. வாக்கர் பயன்படுத்துவதை நிறுத்திய பிறகும் கூட குழந்தைகள் இதே பழக்கத்தில் நடக்க முயற்சி செய்கின்றனர்.

தேவையில்லை..!

குழந்தைகள் தானாக நடக்கத் தொடங்கினால் தான், நடந்து ஒவ்வொரு முறை கீழே விழும்போதும், மீண்டும் எழுந்து நடக்க முயல்வார்கள்; வாக்கரைப் பயன்படுத்தும்போது இதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது. வாக்கரில் நடக்க பழகிய குழந்தையானது, தானாய் நடக்க ஆரம்பிக்கையில் பயம், தடுமாற்றம் போன்றவற்றைச் சந்திக்கிறது.

உங்கள் குழந்தை முதன் முதலாக நடக்க ஆரம்பிக்க, முயற்சி செய்யும் தருவாயில், குழந்தையின் இரு கைகளை பிடித்துக்கொண்டு குழந்தையை நடக்க ஊக்கப்படுத்துங்கள். ஆரம்பத்தில், அதிகபட்சம் 5 நிமிடங்கள் நடக்கப் பழக்குங்கள்; அதன்பின், சிறிது சிறிதாக நேரத்தை அதிகரித்து குழந்தையை நடக்கச் செய்யலாம். 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon