Link copied!
Sign in / Sign up
17
Shares

குழந்தைகள் கேட்க வேண்டிய 10 திரைப்பட தாலாட்டுப் பாடல்கள்..!

குழந்தைகளை தூங்க வைக்க, விடாமல் அழும் குழந்தைகளை அமைதிப்படுத்த என காலம் காலமாக, தொன்று தொட்டு நம் முன்னோர்கள் தமிழ் தாலாட்டு பாடல்களை பாடி குழந்தைகளை வளர்த்து வந்துள்ளனர்; ஆனால், இந்தக்காலத்து அம்மாக்களோ லேப்டாப் அல்லது அலைபேசியில் ரைம்ஸ் பாடல்களை அல்லது திரைப்பட பாடல்களை பாட விட்டு, குழந்தையை தூங்கச் செய்கின்றனர். தாய் தன் குரலால், தமிழ் தாலாட்டுகளையோ அல்லது திரைப்பட தாலாட்டுகளையோ பாடி, கதை சொல்லி, குழந்தையிடம் பேசி, குழந்தையை பார்த்துக் கொள்கையில், குழந்தைக்கு தாயுடன் ஒருவித பிணைப்பை ஏற்படுத்தும்.

உங்கள் குழந்தையுடன் பிணைப்பை ஏற்படுத்த உதவும், உங்களை குழந்தையுடன் பிணைக்க உதவும் நம் தமிழ் தாலாட்டு பாடல்கள் என்னென்ன என்று படித்தறியுங்கள்..!

1. கண்ணே கலைமானே!

கண்ணே கலைமானே! என மூன்றாம் பிறையில் வரும், கண்ணதாசன் எழுதிய, இளையராஜா இசையில் அமைந்த, இந்த பாடல் குழந்தைகள் அமைதியான உறக்கத்தைக் கொள்ள உதவும். 

கண்ணே கலைமானே! கன்னி மயிலென

கண்டேன் உனை நானே (x2)

அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்

ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்

ராரிராரோ ஓ! ராரிரோ (x2)

(கண்ணே கலைமானே! )

ஊமை என்றால் ஒருவகை அமைதி

ஏழை என்றால் அதிலொரு அமைதி

நீயோ கிளிப்பேடு பண்பாடும் ஆனந்த குயில்பேடு

ஏனோ தெய்வம் சதிசெய்தது பேதை போல விதி செய்தது

(கண்ணே கலைமானே! )

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்

உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே

நீயில்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சந்நிதி

(கண்ணே கலைமானே! )

2. நீராடும் வைகையிலே நின்றாடும் மீனே...

பார் மகளே பார் படத்தில், கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடலான நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே என்பது குழந்தைகள் கேட்க சிறந்தது. 

நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே

நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே

தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே

தெம்மாங்கு பூந்தமிழே தென்னாளும் குலமகளே.....!

3. காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே!

சித்தி திரைப்படத்தில் வெளியான காலமிது காலமிது எனும் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் குழந்தைகளுக்கான சிறந்த தாலாட்டு. 

காலமிது காலமிது

கண்ணுறங்கு மகளே

காலமிதைத் தவற விட்டால்

தூக்கமில்லை மகளே

தூக்கமில்லை மகளே

4. தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே

சின்னத்தம்பி படத்தில் வெளியான தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே எனும் கவிஞர் வாலி எழுதிய பாடல் குட்டிகளுக்கான சிறந்த தாலாட்டு.

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே

ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே

தொட்டில் மேலே முத்து மாலை

சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்

பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும்

ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்

ஏழு கட்ட எட்டுக் கட்ட தெரிஞ்சா நான் படிச்சேன்

நான் படிச்ச ஞானமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான்

ஏடெடுத்துப் படிக்கவில்ல சாட்சியிந்த பூமி தான்

தொட்டில் மேலே முத்து மாலை

சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

5. கற்பூர பொம்மை ஒன்று...

கேளடி கண்மணி படத்தில், மு.மேத்தா அவர்களால் எழுதப்பட்ட கற்பூர பொம்மை ஒன்று எனும் பாடல் குழந்தைகளை அமைதிப்படுத்த உகந்த பாடல்..!

கற்பூர பொம்மை ஒன்று

கை வீசும் தென்றல் ஒன்று

கலந்தாட கை கோர்க்கும் நேரம்

கண்ணோரம் ஆனந்த ஈரம்

முத்தே என் முத்தாரமே சபை ஏறும்

பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா....!

6. கண்கள் நீயே... காற்றும் நீயே...

முப்பொழுதும் உன் கற்பனைகள், எனும் படத்தில் ஆசிரியர் தாமரை எழுதிய கண்கள் நீயே..காற்றும் நீயே பாடல் குழந்தைகள் மீதான அன்னைப் பாசத்தை அப்பட்டமாக காட்டக் கூடியது.

கண்கள் நீயே..காற்றும் நீயே

தூணும் நீ ..துரும்பில் நீ

வண்ணம் நீயே ..வானும் நீயே

ஊனும் நீ ..உயிரும் நீ

பல நாள் கனவே

ஒரு நாள் நனவே

ஏக்கங்கள் தீர்த்தாயே....

7. ஆராரோ ஆரிராரோ அம்புலிக்கு நேர் இவரோ

சிறுத்தை படத்தில், ஆசிரியர் அறிவுமதி எழுதிய ஆராரோ ஆரிராரோ அம்புலிக்கு நேர் இவரோ எனும் பாடல் குழந்தைகளுக்கு தாயின் அன்பைக் காட்டக்கூடிய அருமையான பாடல்.

ஆராரோ ஆரிராரோ அம்புலிக்கு நேர் இவரோ..

தாயான தாய் இவரோ தங்க ரத தேர் இவரோ ..

மூச்சுப்பட்டா நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்

நிழலுபட்டா நோகுமுன்னு நிலவடங்க முத்தமிட்டேன்

8. அத்தை மடி மெத்தையடி

கற்பகம் படத்தில், கவிஞர் வாலி எழுதிய அத்தை மடி மெத்தையடி எனும் பாடல் குழந்தைக்கு சொந்தங்களின் முக்கியத்துவத்தை உணர்த்த மிகவும் ஏற்றது.

அத்தை மடி மெத்தையடி

ஆடி விளையாடம்மா

ஆடும் வரை ஆடி விட்டு

அல்லி விழி மூடம்மா...

9. ஆரிரோ ஆராரிரோ

தெய்வ திருமகள் படத்திற்காக, பாடலாசிரியர் நா.முத்துகுமார் எழுதிய ஆரிரோ ஆராரிரோ எனும் பாடல் குழந்தைகளுக்கு தந்தைப் பாசத்தை உணர்த்தும் மிகச்சிறந்த பாடல்..!

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு

பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு

தாயாக தந்தை மாறும் புது காவியம்

ஓ...இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்

10. லாலி லாலி..!

சிப்பிக்குள் முத்து எனும் படத்தில் இடம் பெற்ற இந்த தாலாட்டு, அனைத்திலும் சிறந்த தாலாட்டு பாடல் ஆகும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon